Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,016 முறை படிக்கப்பட்டுள்ளது!

கோளை விழுங்கும் சூரியன்

ஆச்சரியமாக உள்ளதா?. ஆம்! இது உண்மைதான். நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ளது  வாஸ்ப் 12-பி {Wasp 12B) எனப் பெயரிடப்பட்டிருக்கும் கோள். இக்கோளை அதன் தாய்ச் சூரியன் வாஸ்ப்-12 படிப்படியாக விழுங்கி வருவதாகவும், இதன் வாழ்வுக்காலம் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகள் தான் எனவும் நாசா கூறியுள்ளது.

ஆச்சரியங்கள் மிகுந்துள்ள இக்கோளை பற்றிய சில செயதிகள் இதோ!

இக்கோள் நம்மிலிருந்து 1200 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.  நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைநோக்கி கொண்டு அதில் இருந்து வெளிவரும் வெப்பக் கதிர்வீச்சு ஆராயப்பட்டுள்ளது. அதன் மூலம் இதன் வெப்பம் 2300 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்ககூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது

  • முதன் முதலில் இங்கிலாந்தின் கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கொயெல் ஹெலியர் தலைமையிலான வானியலாளர்களே 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடித்தனர்.
  • இக்கோளின் வயது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ஆண்டுகள் ஆகும்.
  • தனது சூரியனை ஒரு நாளைக்கும் குறைவான சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது.
  • ஜுப்பிட்டரை விட 10 மடங்கு எடை கூடியது.
  • ஜுப்பிட்டரை விட 50 மடங்கு தன் தாய் சுரியன் அருகில் உள்ளதால் இதன் வெப்பம் மிக அதிகமாக உள்ளது.
  • வியாழன் கோளைப் போன்று வாயுக்களைப் பெருமளவு கொண்டுள்ளது.
  • ஹைட்ரஜன் வளிமத்தைக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது. .
  • கோளுக்கும் அதன் சூரியனுக்கும் இடையில் உள்ள ஈர்ப்புப் பேரலைத் தாக்கம் காரணமாக இரண்டும் ஈர்க்கப்பட்டு வருகின்றன.

புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ கமெரோன் இக்கோள் பற்றிக் கருத்துக் கூறுகையில் தெரிவித்ததாவது: ‘வாஸ்ப்-12பி கோள் பெரும் பருமனாக இருப்பதும் அது அதன் சூரியனுக்கு மிக நெருக்கமாக இருப்பதுவுமே இதன் பிரச்சினையாகும்.

வைரப்பாறைகள்:

இந்தக் கோள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோள்களில் ஆக்சிசனை (Oxygen) விட அதிகம் கரிமத்தைக் (Carbon di Oxide)  கொண்டிருக்கும் முதலாவது கோள் எனக் கூறப்படுகிறது. வைரம் அல்லது கிரபைட்டுகளுடன் கூடிய பாறைகள் அடங்கிய கோள்கள் அண்டத்தில் காணப்படலாம் என்ற முன்னைய கண்டுபிடிப்புகள் இதனை உறுதி செய்கின்றன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர்களது ஆய்வு நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.  ‘வைரங்களைக் கொண்ட மலைகளும் நிலப்பகுதிகளும் அங்கு காணப்படலாம்,’ என இவ்வாய்வுக்குத் தலைமை வகித்த நிக்கு மதுசுதன் தெரிவித்தார். நிக்கு மதுசுதன் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வானியற்பியல் ஆய்வாளர் ஆவார். கோள்கள் எவ்வாறு உருவாகின என்பது குறித்த புதிய கேள்விகள் தற்போது எழுப்பப்பட்டுள்ளன.

இன்று வரை கிட்டத்தட்ட 500 புறக்கோள்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.