Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,846 முறை படிக்கப்பட்டுள்ளது!

திருநெல்வேலியில் ஒரு சிலிக்கான வேலி

திருநெல்வேலியில் ஒரு சிலிக்கான வேலி: அமெரிக்கா வாழ் தமிழர் முயற்சி

அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்க, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வரும் நேரத்தில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெற உதவும் இணைய தளத்தை, (www.corp-corp.com) அமெரிக்கா வாழ் இந்தியர் பிரபாகரன் துவக்கி உள்ளார். இந்த இணையதளம், தகவல் தொழில்நுட்பத் துறையில், ஐ.டி. துறையில் வேலை தேடுபவர்களையும் வேலைக்கு ஆள் தேடுப‌வர்களையும் இணைத்து வைக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இந்த இணையதளம், தற்போது மாதந்தோறும் தகவல் தொழில் நுட்பத்துறையில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான ‌வேலைவாய்ப்பு செய்திகளைப் பதிவு செய்கிறது. வேலை வாய்ப்புகளைத் தரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்க கம்பெனிகளின் தலைமைப் பொறுப்பாளர்களுக்கும் தலைமை தொழில்நுட்ப அதிகாரிகளுக்கும் சிறப்பு கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் வேலைதேடுவோருக்கான வேலைவாயப்பு முகாம்களை நடத்தி வருகிறார்.

இவர் அடுத்த முயற்சியாக, அவருடைய ‌சொந்த மாவட்டமான திருநெல்வேலியில் 30க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கி, திருநெல்வேலியை மையமாக கொண்டு அமெரிக்க ஐ.டி. நிறுவனத்திற்கு வேலை செய்ய வாய்ப்பு ஏற்படுத்த இருக்கிறார். தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கான வேலைவாய்பபு இணையதள‌த்தை ஆர்மபிக்கவும் திருநெல்வேலியில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நிறுவவும் அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப வேலைவாய்பபுகளை திருநெல்வேலியில் உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்.

நன்றி: தினமலர்