உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ? ஆன்லைன் மூலம் கண்டறிய !
பெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு, மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்க அனுமதி வாங்குவத்ற்க்குள் தலை வலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
அல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் அல்லது உங்கள் குடும்பத்தினரிடம் சரி பார்க்க சொல்ல வேண்டும்.
இந்த பிரச்சணயை போக்க தமிழ் நாடு தேர்தல் துறை இணைய தளம் மூலமாக உஙக்ளின் மாவட்டம், சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து உங்கள் பெயர் உங்கள் ஊரில் அல்லது தெருவில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.
அது மட்டும் இல்லாமல் உங்கள் பெயரை தேட வசதியாக வாக்காளர் அடையாள அட்டை எண், தெரு அல்லது வாக்குச்சாவடியின் பெயர் மூலமாகவும் தேடலாம்.
தமிழில் தேடும் வசதி உள்ளது. முதலில் உங்களது மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் உங்களது சட்டமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுக்கவும். (பல ஊர்களின் சட்டமன்றத் தொகுதிகள் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.)
அதன்பின் ‘வாக்காளர் பெயர் மூலமாக தேடவும்‘ என்பதை தேர்ந்தெடுத்து ‘சமர்பிக்க‘ பட்டனை அழுத்தி உங்களது பெயர், ஆணா அல்லது பெண்ணா என்பதைத் தேர்ந்தெடுத்த பின் – தந்தை அல்லது கணவர் அல்லது தாய் பெயரை அருகில் உள்ள விசைப்பலகையின் (KeyBoard) மூலம் டைப் செய்யவும்.