நிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் ‘பளிச்’சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங்கள் பலவற்றைத் தந்துள்ள அவரின் புகழ்பெற்ற வழிகாட்டுதல்களில் சில:
-
- வெற்றிக்கு இருப்பது ஒரே வழி. அதுதான் நேர்வழி. உங்கள் நிறுவனத்தின் வழிமுறைகள் நேராக, நேர்மையாக அமையட்டும்.
- எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நிகரில்லாத ஆலோசனைகளை நல்க முடியும். படித்த விஷயங்களை நிறுவனத்தில் எல்லோரும் எல்லோரோடும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள்.
- சரியான ஆட்களை சரியான பொறுப்புகளில் அமர்த்துங்கள். திட்டமிடுதலின் சுமை பாதிக்குப்பாதி குறைந்துவிடும்.
- அன்றாடப்பணிச்சூழல் எதார்த்தமானதாக இருந்தால், அது உங்கள் நிறுவனத்தின் பலங்களிலே ஒன்று.
- நிறுவனத்தில் ஒவ்வொருவருக்கும் மதிப்பு உண்டு. அதே நேரம், அவரவர் மதிப்பு என்னவென்று அவர்களுக்காவது தெரிந்திருக்க வேண்டும்.
- திறந்த நிலையில் உங்கள் செயல்பாடுகளை வைத்திருப்பதுதான் நம்பிக்கையின் நிகரற்ற அடையாளம்.
- பணியிடங்களில் கொண்டாட்டங்களுக்கும் இடம் வேண்டும். அது நிறுவனத்தை உயிர்ப்புள்ளதாய் ஆக்குகிறது.
- யாரையும் குறைவாக எடை போடாதீர்கள்.
- உங்கள் நிறுவனத்தின் மதிப்பைப் பெருக்கும் செயல்கள் எவையென்று பாருங்கள். சரியானவர்களையே அங்கு நியமியுங்கள்.
- கட்டுப்படுத்தவேண்டியது எப்போது, சுதந்திரம் தரவேண்டியது எப்போது என்றெல்லாம் சரியாக தெரிந்து செயல்படுத்துங்கள்.
– பிரதாபன் – http://www.namadhunambikkai.com/2011/03/01/1601/#more-1601