Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,443 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது!

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 12

கூட்டம் கலைந்தது. நாலைந்து பேர் – ஏழெட்டுப் பேர் – ஆங்காங்கு தனித்தனியே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

கண்டதையெல்லாம் வணங்காமல் ஒரே கடவுளை வணங்குங்கள் என்று கூறுகிறார். இதில் ஒன்றும் தப்பில்லையே!

அதிருக்கட்டும் முதலாளி – தொழிலாளி, ஏழை – பணக்காரன், மேல்ஸாதி – கீழ்ஜாதி என்ற பாகுபாடு இஸ்லாத்தில்  இல்லை. எல்லோரும் சமம் என்று கூறியதைக் கேட்டீர்களா?

அட நீங்க ஒன்னு! இதையெல்லாம் விட முக்கியமான விசயத்துக்கு வாங்க! மது அருந்தக் கூடாது. பொய் சொல்லக் கூடாது. திருடக்கூடாது என்று சொன்னாரே, எவ்வளவு முக்கியமான சங்கதி…

அதுமட்டும் தானா? பெண்களைக் கற்பழிக்கக் கூடாது, கொலை செய்யக் கூடாது, வட்டி வாங்கக் கூடாது என்பதெல்லாம் எவ்வளவு அருமையான போதனை!

உண்மை தான்! குடித்துவிட்டு ஆட்டம் போடுவதும், அந்த வெறியில் பெண்களைக் கற்பழிப்பதும், தட்டிக் கேட்பவர்களை வெட்டிக் கொலை செய்வதும் இப்பொழுது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. இப்படிப்பட்ட ஈனச்செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு எச்சரிக்கை செய்கிறது அவருடைய பேச்சு என்று ஒவ்வொருவரும் தத்தம் மனசுக்குத் தோன்றிய அபிப்பிரயாங்களைக் கூறி சிலாகதித்துக் கொண்டிருந்தனர்.

இதற்கு எதிரிடையான கருத்துக்களும் வெளிப்பட்டது.

மேல் சாதி – கீழ் சாதி இல்லை. எல்லோரும் சமம் என்று சொல்வது வாயளவில் தான். இது நடக்கக்கூடிய காரியமா? இதில் ஏதோ சூழ்ச்சியிருக்கிறது.

நம் நாட்டு மக்கள் நம்மோடு ஊரில் உள்ளவர்களே நம்மைக் கீழ்சாதி என்று ஒதுக்கி வைக்கும் போது, எங்கோயிருந்து வந்தவர்கள் நம்மை எப்படி நடத்துவார்கள் என்பது யாருக்குத் தெரியும்?

இதெல்லாம் பசப்பு வார்த்தை. ஆசைவார்த்தைகள் கூறி நம்மை எல்லாம் எங்கோ கொண்டு போய்  கொத்தடிமைகளாக்க நடக்கும் சூழ்ச்சி!

இந்த வீண்வம்பெல்லாம் நமக்கு வேண்டாம். இங்குள்ள மேல் சாதி மக்களால் நாம் படும் அவதியும், அவதர்கள் நமக்கு இழைக்கும் அநீதியும் தலைமுறை தலைமுறையாக நமக்கும் பழகிப் போய்விட்டது. புதிதாக யாரிடம் மாட்டிக் கொண்டு அவதிப்பட வேண்டாம்.

இது போல் அவரவர் கருததுக்களைப் பரிமாறிக் கொண்டு அவரவர் வீடுகளை நோக்கிச் சொன்றனர்.

திட்டமிட்டிருந்தபடி அடுத்த நாள் பிரச்சாரக் குழுவினரும் ஊர் மக்களும் ஒன்று கூடினர்.

புதிதாக பரஸ்பர அறிமுகம் தேவையில்லாதிருந்து. ஊர்த்தலைவர் எழுந்தார். கூட்டத்தினரை நோக்கி ‘நேற்று நாம் முடிவு செய்திருந்தபடி இன்று நாம் மீண்டும் கூடியிருக்கிறோம். பிரச்சாரக் குழுவினரும் நம்முன் வந்திருக்கிறார்கள். உங்கள் அபிப்பிராயத்திற்காக எதிர்பாத்திருக்கிறார்கள். நேற்று நான் கூறியபடி இதில் எவ்வித நிற்பந்தமும் கிடையாது. அவரவர் அபிப்பிராயத்தைத் தெளிவாக எடுத்துக் கூறலாம்’ என்று சொல்லி விட்டு அமர்ந்தார்.

யாரும் வாய்திறக்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.

ஊர்த்தலைவர் சில நிமிடங்கள் பொறுத்திருந்தார்.  திடீரென்று யாரும் எதிர்பாராவண்ணம் பிரச்சாரக் குழுத்தலைவரை நெருங்கி, அவர் கரம் பற்றி இஸ்லாத்தைத் தழுவினார்.

பின்னர் கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி ‘இப்பொழுது நான் நடந்து கொண்டது என் சொந்த  முறையில் சொந்த விருப்பத்தின் பேரில்- ஊர்த்தலைவர் என்ற முறையில் அல்ல. இது மக்களின் தனிப்பட்ட விஷயம். ஊர்கட்டுப்பாடோ, ஜாதிக் கட்டுப்பாடோ இதில் தலையிட முடியாது. எனவே நீங்கள் உங்கள் சொந்த விருப்பத்தின்படி நடந்து கொள்ளுங்கள்’ என்று கணீரென்ற குரலில் கூறி விட்டு அமர்ந்தார்.

கூட்டத்தில் சலனம் ஏற்பட்டது. சிலர் தைரியமாக எழுந்து குழுவின் தலைவர் முன் சென்று அவர் கரம் பற்றி புதிய மார்க்கத்தில் இணைந்தனர்.

  • இன்றும் சிலர்….
  • மேலும் சிலர்…
  • திரண்டிருந்த மக்களில் ஏறக்குறைய பாதிப் பேர்.
  • இதில் மேல் தட்டு மக்களே அதிகம்.

சந்தேகத்தின் காரணமாவோ, அச்சத்தின் காரணமாகவோ கீழ்தட்டு மக்களில் மிகச் சிலரே பதிய மார்க்கத்தில் இணைந்தனர்.

மீதிப் பேர் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை.. புதிய மார்க்கத்தில் இணைய தாங்கள் விரும்பவில்லை என்பது போல்!

அடுத்து ஓர் அதிசயம் நிகழ்ந்தது. பிரச்சாரக்குழுவினர், புதிதாக இணைந்த மேல் ஜாதி மக்களும் கீழ்ஜாதி மக்களும எழுந்து மாறி மாறி ஒருவருக்கொருவர் மார்புறத் தழுவிக் கொண்டது இஸ்லாத்தில் எல்லோரும் சமம் என்பதற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டாக இருந்தது. பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

வாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகி ஒளிவீசியது.

பிரிவினை

புதியமார்க்கத்தின் சட்ட திட்டங்கள் கொள்கை, நடைமுறை அனுஷ்டானம் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறி, செயல் முறைவிளக்கங்களை செய்து காட்டுவதற்காக இரண்டொரு நாடகள் தங்கிவிட்டு பிரச்சாரக் குழு சென்றுவிட்டது.

இப்போது புதிய பிரச்சனை ஒன்று பூதகாரமாக உருவெடுத்தது.

நாம் முன்னர் விளக்கியிருந்தது போல் தனது ஆட்சிக் காலத்தில் அனைத்துப் பிரிவு மக்களையும் தனித்தனியே குடியமர்த்தியிருந்தான்.

தற்போதய பஸ்டான்ட்டு – டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து நூலகம் வரை உள்ள பகுதயில் பள்ளர்களையும், அதற்கு மேற்கில் பரையர், அருந்ததியர்களையும் குடியமர்த்தினான். இதன் வடக்காக காட்டுவா, பீருவா வீடு வரை மறவர்கள், அகம்படியர்.

இதற்கும் வடக்கில் முதலியார், செட்டியார், பிராமணர், நாயக்கர், பணிக்கர்.

தனது பாதுகாப்பைக் கருதி மறவர், அகமுடியர் ஆகியவர்களை மட்டும் தனக்கு அண்மையில் தனது நேர்பார்வையில் குடியமர்த்திக் கொண்டான். அந்த வகையில் விஜயன் ராஜதந்திரி, மதியூகி.

சரி, இப்போது இதை விட்டு விட்டுப் பிரச்சைனைக்கு வருவோம்.

‘வாடி’ என்ற இந்த ஊர் அகலத்தால் குறைந்தும் நீளம் கூடியும் ரயில் வண்டித் தொடர் போல் காட்சியளிக்கிறது. இதில் அடுக்கடுக்காக பல ஜாதிமக்கள்.

ஒவ்வொரு பிரிவும் அதற்குரிய தனித்தன்மையுடன் கூடிய கலாச்சாரம், பழக்கவழக்கத்தைக் கொண்டது.

இதில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் குறைவாகவோ கூடுதலாகவோ பதிய மார்க்கத்தில் இணைந்துள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் புதிய மார்க்கதில் இணைந்தவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய ஜாதி உருவாகி விட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. ஏற்கனவே உள்ள பிரிவினருக்கும்  உள்ளது போல் இந்த புதிய பிரிவினர்க்கு தனிப்பட்ட குடியிருப்புப் பகுதி கிடையாது.  நித்திய அனுஷ்டானங்கள் நிறைவேற்றத தனித்து இடம் கிடையாது.
அது மட்டுமல்ல, நேற்றுவரை அண்ணன் தம்பி, மாமன – மச்சான் என்று அழைத்து கொண்டிருந்தவர்கள், அந்த உறவு முறைகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு இன்று ஜென்ம பகையைப் போல இவாகளைப் பார்ப்பது – இவர்களைச் சந்தித்தால் முகத்தைத் திருப்பிக் கொள்வது ஆகியவற்றால் இவர்கள் நொந்து போயினர்.

அடுத்த கட்டமாக தார்மீக ரீதியில் இவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்தினார்கள். முடிந்த மட்டும் தொல்லை கொடுக்கலானார்கள். பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.

புதிய மார்க்கத்தில் இணைந்தவர்கள் கொதிப்படைந்தார்கள். இதற்கு ஒரு வழி கண்டு பிடித்தாக வேண்டும். அந்தந்தக் குடியிருபபுகளில் எங்களுக்குரிய விகிதாசாரப்படி இடத்தைப் பிரித்து தர வேண்டும் என்று போர்க்க் கொடி உயர்த்தினார்கள். கலவரம் மூளும் அபாயம்! எரிமலை புயலைக் கக்கியது. எந்தச் சமயத்தில் சீறுமோ?

  • பகைத்தவர் பணிந்தனர்.
  • ஒதுக்கியவர் வழிக்கு வந்தனர்.

இருதரப்பிலும் இருந்து நல்லவர்கள் சிலர் கூடினர். பிரச்சனை சிக்கலானது. எளிதில் தீர்க்க முடியாதது, .. விவாத்தினர்.
ஒவ்வோர் பகுதியிலிருந்தும் தனியிடம ஒதுக்குவதென்றால் ஊர் சின்னாபின்னப்பட்டுப் போய் விடும். நிலையை மேலும் சிக்கலாகுமே தவிர, நாம் எதிர்பார்க்கும் சகஜ நிலை ஏற்படாது. இதற்கு எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடியதும், காரிய சாத்தியமானதுமான ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும்” என்று முடிவுக்கு வந்தனர்.

நீண்ட ஆலோசகை்குப் பின் அடியிற்கண்ட முடிவுக்கு வந்தனர்.

அதன்படி தற்போது தெற்கு – வடக்காக நீளவட்டத்தில் அமைந்திருக்கும் ஊரின் மையப்பகுதியில் கிழக்கு – மேற்காக ஓர் எல்லைக் கோடு ஏற்படுத்த வேண்டும்.

இப்பொழுது வடபகுதி, தென்பகுதி என்ற இரண்டே பகுதிகள் தான் இருக்கும்.
வடபகுதியில் உள்ள புதிய மார்க்கத்தைத் தழுவியவர்கள் அதை விட்டு வெளியேற தன் பகுதிக்குச் சென்று விட வேண்டும்.

அதேபடி தென்பகுதியில் உள்ளவர்களில் புதிய மார்க்கத்தைத் தவிர மற்ற ஜாதியினர் அனைவரும் வட பகுதிக்குச் சென்று விட வேண்டும்.

குடிபெயர்ந்து மீண்டும குடியமர்வதென்பது கஷ்டமான காரியம் தான். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் இதை விடச் சிறந்த முடிவை  கண்டுபிடிக்க முடியாது என்பதால் எல்லோரும் ஏகோபித்து இந்த முடிவை ஏற்றுக் கொண்டனர்.

இப்பொழுது சில எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டது.

வடக்குப் பகுதியில் இருந்த பணிக்கர்கள், தென்பகுதிக்கு வர விரும்பாமல் தேர்போகியில் போய் குடியமர்ந்தனர்.

தென்பகுதியில் இருந்த சக்கிலியர், பறையர் வடபகுதியில் சேராமல் அதை விட்டு சற்று வடக்கே தள்ளி தனித்ததனியே குடியமர்ந்து கொண்டனர்.

பள்ளர்களோ தொலை நோக்குடன் நடந்து கொண்டார்க்ள.
இதில் எந்தப் பகுதயில் இருந்தாலும் நமக்கு சம அந்தஸ்து  கிடைக்கப் போவதில்லை,

நாம் தனித்தே இருப்போம்” என்று முடிவு செய்தார்கள்.

ஊரைவிட்டுத் தெற்கே சற்றுத் தொலைவில் மணற்பகுதிக்கும் தரவைப் பகுதிக்கும் இடையில ஓர் இடத்தை தேர்வு செய்து அதில் குடியமர்ந்தனர்.

மேற்கில் நஞ்சை விவசாயமும் கிழக்கில் புஞ்சை விவசயாமும் செய்வதற்குச் சாத்தியமான இடம்.
இப்பொழுது வடபகுதியில் ஹிந்துக்களில் மேல் ஜாதி மக்களும் தென்பகுதியில் புதிய மார்க்கத்தை தழுவிய முஸ்லிம்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

இப்பொழுது யாருமே எதிர்பார்த்திராத புதிய பிரச்சனை ஒன்று முளைத்தது.

ஆரம்பத்தில் திட்டுப் பகுதயில் உருவாகிய புதிய குடியிருப்புக்கு ‘வாடி’ என்று பெயர் சூட்டினார்கள்.

விஜயன் ஆட்சிக்காலம் முழுமையும் இதே பெயர் தான் இருந்தது.

விஜயன் போர்முனைக்குச் சென்று, அவனுடைய தலையற்ற உடல் (முண்டம்) மட்டும் இங்கு வந்ததால் சிலர், ‘முண்டங்குளம்’ என்ற பெயரால் இதை அழைத்தனர். வேறு சிலரோ, ‘வாடி’ எனற் பழைய பெயரையே விடாது பற்றிக் கொண்டிருந்தனர். இந்த இழுபறியான சமயத்தில் தான் ஊர் பிரிவினை ஏற்பட்டது.

ஊர் இரண்டு – பெயர் ஒன்று. இதை எப்படிச் சமாளிப்பது? ‘வாடி’ என்ற பூர்விகமான பெயர் தங்களுக்குத் தான் வேண்டும்’ என்றுஇருபிரிவினருமே உறுதியாக நின்றனர்.

இறுதியில் முன்பு போலவே அமைதியான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கும் ஒரு சுமூகமான தீர்வு கண்டனர்.

வடபகுதியினர் தங்கள் பகுதிக்கு “தமிழர் வாடி” என்றும் தென்பகுதியினர் “தெற்குவாடி” என்றும் பெயரிட்டுக் கொண்டனர்!.

பிரிந்து போய்த் தெற்கே குடியமர்ந்த பள்ளர்களோ, தங்கள் பகுதிக்கு “வாடி” என்ற பூர்விகப் பெயரைச் சூட்டிக் கொண்டனர்.

வருடங்கள் உருண்டன. எதிரும் பதிருமாகப் இருந்த மக்கள் பகைமையை மறந்து அவரவர் தொழில்துறைகளைக் கவனித்தனர். இயல்பு நிலை திரும்பியது.

ஆசிரியர்: சி. அ. அ. முஹம்மது அபுதாஹிர்

சித்தார் கோட்டை –  ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்