Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2011
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,255 முறை படிக்கப்பட்டுள்ளது!

நபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்

*எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை)க் கேட்கும்போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்தி விட நெருங்குகிறார்கள். “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர். (68:51)

*(மக்கத்துக்) காஃபிர்களோ (நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே என்று கூறுகின்றனர், (10:2)

*தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர். “இவர் ஒரு சூனியக்கார பொய்யர் என்றும் காஃபிர்கள் கூறினர். (38:4)

*”ஓரு பைத்தியம் பிடித்த புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா? என்றும் கேட்டனர். (37:36)

*அவர்கள் (உம்மை பற்றி, அவர் ஒரு) “கவிஞர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழிப்பார்த்து இருக்கின்றோம்” என்று கூறுகிறார்களா? (52:30)

*அநியாயக்காரர்கள் (மூமின்களை நோக்கி) “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வெறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள். (25:8)

*(நினைவூட்டும்) வேதம் அருளப்பட்ட(தாகக் கூறுப)வரே! “நிச்சயமாக நீர் பைத்தியக்காரர் தாம்” என்று கூறினார்கள். (15:6)

*நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், “இவர் (ஒரு சாதாரண) மனிதரேயன்றி வேறில்லை; உங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்துவிடவே இவர் விரும்புகிறார்” என்று கூறுகிறார்கள். இன்னும் அவர்கள், “இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை” என்றும் கூறுகின்றனர். மேலும் அல் ஹக்கு (சத்தியம்: அல்குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, “இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (34:43)

*இது (அல்குர்ஆன்) பொய்யேயன்றி வேறில்லை. இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். இன்னும் மற்ற மக்கள், கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிப் புரிந்துள்ளார்கள் என்றும் நிராகரிப்போர் கூறுகின்றனர். (25:4)

*இன்னும் “அவை முன்னோர்களின் கட்டுக்கதைகளே; அவற்றை இவரே எழுதிக் கொண்டிருக்கிறார்” என்றும் கூறினர். (25:5)

*இதனை (குர்ஆனை) இவர் இட்டுக்கட்டிச் சொல்கிறார் என்று கூறுகிறார்களா? (11:13)

*(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டப்பட்டவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள். (16:101)

*(அல்குர்ஆன்) “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்”, இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பியுள்ளனர்).

*(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் (கூறும்படி) உம்மைத் திருப்பி விடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால் உம்மைத் தம்) அவர்கள் உற்ற நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். (17:73)

தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, M.A.,M. Phil.