Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2011
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,572 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்னாசியின் அருமை

அழகான அமைப்புடைய அன்னாசிபழம் தோன்றியது தென் அமெரிக்க நாடான பிரேசில். அங்கிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு பரவியது. கொலம்பஸ் இந்தியாவென்று எண்ணி மேற்கிந்திய தீவுகளுக்கு வந்தவர் இந்த அன்னாசியை ஐரோப்பியாவுக்கு கொண்டு சென்றார். பதினாறாம் நூற்றாண்டில் இந்தப்பழம் உலகெங்கும் பரவியது. 1548 ல் ஐரோப்பிய வியாபாரிகளால் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று ஹவாய் தீவுகளில் தான் அன்னாசி, உலகிலேயே அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
உலக உற்பத்தியான 1.75 மில்லியன் டன்களில் 45 சதவிகிதம் ஹவாய் தீவுகளில் பயிரிடப்படுகிறது. ஹவாய் தவிர, கரீபியன் (மேற்கிந்திய) தீவுகள், பிரேசில், க்யுபா, மெக்சிகோ இவைகளில் அதிகமாக பயிரிடப்பட்டாலும், தற்போது உலகெங்கும், இந்தியா உட்பட பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் 25,000 ஹெக்டேர் பரப்பில் அன்னாசி பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 900 எக்டரில் பயிரிடப்பட்டு சராசரி 36,635 டன் உற்பத்தி ஆகிறது.
நீளமான இலைகளுடைய அன்னாசி, அதன் பழத்தின் மேல் உள்ள கொண்டை, பக்கவாட்டில் கிளைக்கும் குருத்தையும் அல்லது அடிக்குருத்தையும் நட்டு வளர்க்கப்படுகிறது. நட்ட ஒரு வருடத்தில் பூக்கள் தோன்றும். பூத்த பின் 4 அல்லது 5 மாதங்களில் பழங்கள் பழுக்கும். தலைமேல் கற்றாழை போன்ற இலைக்கொத்து, வெளியில் முள் போன்ற முடிச்சுகள் உடைய அன்னாசி ஒரு தனிப்பழமல்ல! பல பழங்கள் கொண்ட கலவை அன்னாசிப்பழம் இனிப்பும், புளிப்பும் சேர்ந்த சுவையுடையது. அன்னாசியில் 5 வகைகள் உள்ளன. அன்னாசியில் புரோமெலைன் என்ற என்சைம் உள்ளது. தவிர வைட்டமின் ‘ஏ’ வும் ‘சி’ யும் செறிந்தது.
அன்னாசியின் பொதுப் பயன்கள்

  • அதிக அளவில் அன்னாசிப்பழம் டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகிறது. இதனால் வருடம் முழுவதும் கிடைக்கும். அன்னாசிப்பழம் ஜாம், ஐஸ்கிரீம், பழரசம் செய்யப்பயன்படுகிறது.
  • பழத்திலிருந்து சாராயம் தயாரிக்கப்படுகிறது. தவிர ஆல்கஹாலும் தயாரிக்கப்படுகிறது.
  • சாறு எடுத்த பின் எஞ்சிய சக்கை கால்நடை தீவனமாக பயன்படும். சக்கையிலிருந்து பசை, எரிசாராயம், வினிகர் இவை தயாரிக்கப்படும்.
  • இலைகளிலிருந்து நூல் எடுக்கப்பட்டு நேர்த்தியான மெல்லிய பட்டு நெய்யப்படுகிறது.
  • சமையலில் மணமும் சுவையும் ஏற்றும் கல்யாண சாப்பாடுகளில் பிரசித்தமானது பைன் – ஆப்பிள் ரசம். அன்னாசி அல்வா, கபாப், பல பழரசங்களுடன் சேர்த்த உற்சாக பானமாக செய்து உண்ணலாம்.
  • மாமிச உணவுகளை சமைக்கும் முன் அன்னாசி சாறு பிழிந்து அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் ஊறவிட்டால் மாமிசம் நன்றாக வேகும். சமைக்கும் நேரம் பாதியாக குறையும்.
  • மருத்துவ குணங்கள்
  • அன்னாசியில் உள்ள புரோமலின் உணவின் செரிமானத்தை ஊக்குவிக்கும். என்ஸைசம் செரிமானம் குறைந்தவர்களுக்கு அன்னாசி மிகவும் நல்லது.
  • மேலை நாடுகளில் மாமிச உணவுடன் சில துண்டுகள் அன்னாசி சாப்பிடுவது வழக்கம். மாமிசம் சுலபமாக செரிக்கும்.
  • நன்கு பழுத்த அன்னாசி சாறு சிறுநீர் கழிவினை தூண்டும்.
  • குடலில் உள்ள புழுக்களை அழிக்கும்.
  • சிறுநீர் இயக்கத்தை மேம்படுத்தும் சீத பேதியை குணப்படுத்தும்.
  • சிறுநீர் கற்களை கரைக்கும்.
  • வயிற்றில் டைபாயிடு கிருமிகளை அழிக்கும்.
  • மலச்சிக்கல் அகலும்.
  • வயிற்று வலி குறையும்.
  • நல்ல குரல் வளத்திற்கும், தொண்டைப்புண் அகலவும் அன்னாசி பயன்படும் பழச்சாற்றை வாயில் வைத்து கொப்பளித்தால் தொண்டைபுண் குறையும். வாய் நாற்றத்தைப் போக்கும்.
  • அன்னாசி உடல் பலம் கூட உதவும். அதுவும் பழத்துண்டுகளை தேனில் தோய்த்து சாப்பிட்டால் உடல் பலம் கூடும்.
  • இதய சம்பந்த நோய்களுக்கு அன்னாசி நல்லது. ரத்தக்குழாய் அடைப்புகளை போக்கும்.
  • எலும்பு மெலிதல் நோய் உள்ளவர்களுக்கு வழக்கமான சிகிச்சையும் அன்னாசி சாறு குடித்து வந்தால் குணம் தெரியும்.
100 கிராம் அன்னாசியில் உள்ள சத்துக்கள்
ஈரப்பசை – 87.8 கி, புரதம் – 0.4 கி, கொழுப்பு – 0.1 கி, நார்ச்சத்து – 0.5 கி, கார்போஹைடிரேட் – 10.8 கி, கால்சியம் – 20 மி.கி, பாஸ்பரஸ் – 9 மி.கி, இரும்பு – 2.4 மி.கி, கரோடீன் – 18 மைக்ரோ கிராம், தியாமின் – 2.0 மி.கி, ரிபோஃபிளேவின் – 0.12 மி.கி, நியாசின் – 0.1 மி.கி, விட்டமின் சி – 39 மி.கி, கோலின் – 8 மி.கி, மெக்னீசியம் – 33 மி.கி, சோடியம் – 34.7 மி.கி, பொட்டாசியம் – 37 மி.கி, செம்பு – 0.13 மி.கி, மங்கனீஸ் – 0.56 மி.கி, துத்தநாகம் – 0.11 மி.கி, சல்ஃபர் – 20 மி.கி.
எச்சரிக்கை
கர்ப்பிணி பெண்கள் அன்னாசி பழத்தை தவிர்க்க வேண்டும். கருச்சிதைவு உண்டாகலாம். மாதவிடாய் நாட்களிலும் பெண்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் அன்னாசியை தவிர்க்க வேண்டும். தவிர மூலநோய் உள்ளவர்களும், காய்ச்சல் உள்ளவர்களும் அன்னாசியை சாப்பிட வேண்டும்.
அன்னாசி சாக்லேட்
தேவை
  • அன்னாசி பழ வளையங்கள் – 1 பழத்திலிருந்து வெட்டியது
  • சாதாரண சாக்லேட் – 200 கிராம்
செய்முறை
  • வளையங்களை கால்பங்காக துண்டுகள் போடவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இன்னொரு பாத்திரத்தில் சாக்லேட்டை போட்டு உருக வைக்கவும்.
  • இரண்டு முள் ஸ்பூன்களை உபயோகித்து கவனமாக அன்னாசி துண்டுகளை, கரைந்த சாக்லேட்டில் அமிழ்த்தவும்.
  • அன்னாசி துண்டுகளில் சாக்லேட் சமச்சீராக படிய வேண்டும். படிந்தவுடன் எடுத்து, எண்ணெய் / மெழுகு காகிதங்களில் வைத்து உலர வைக்கவும்.
அன்னாசி இனிப்பு வதக்கல்
தேவை
  • அன்னாசிப்பழம் – 1
  • கடலை மாவு – 1 கப்
  • தேங்காய் பால் – 1/2 கப்
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • உலர்ந்த திராட்சை – 25 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • மசாலாப்பொடி, தனியாப் பொடி – 2 டீஸ்பூன்
  • சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன், மிளகாய்வற்றல்
செய்முறை
  • அன்னாசிப்பழத்தின் தோலைச் சீவிக் கொள்ளவும்.
  • கொப்பரைத் துருவியில் துருவிக் கொள்ளவும்.
  • பழத்துடன் கடலைமாவு, உப்பு இரண்டையும் கலந்து கொள்ளவும்.
  • மெல்லிய தீயில் நெய்யைச் சூடு செய்து கொள்ளவும்.
  • மசாலாவை நெய்யில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • மசாலா வதக்கும் பொழுது சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.
  • மசாலாவிலிருந்து நெய் பிரிந்து வரும் பொழுது, தயாரித்து வைத்துள்ள பைனாப்பிளைப் போட்டு, 2 நிமிடம் வதக்கவும்.
  • 2 கப் தண்ணீர் விட்டுப் பாத்திரத்தை மூடி வைக்கவும்.
  • பழம் வெந்தவுடன் தேங்காய்பாலை விடவும்.
  • 2 அல்லது 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
  • திராட்சைப் பழத்தை நெய்யில் வறுத்துப் போடவும்.

உணவு நலம் ஆகஸ்ட் 2010