Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2011
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,396 முறை படிக்கப்பட்டுள்ளது!

தைரியத்தைத் தரும் உணவு முறைகள்

உடல் நிலை தொடர்பாகவும் குடும்பச் சூழ்நிலை வேலை கடன் போன்றவை தொடர்பாகப் பிரச்சினை உள்ளவர்களும் இளமையாக வாழ உறுதி கொள்ள வேண்டும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவதுதான் ஒருவர் இளமையாக செயல்துடிப்புடன் வாழ்கிறார் என்பதற்கு அர்த்தம்.

அடிக்கடி தலைவலி வயிற்றுக் கோளாறுகள் இரத்தக் கொதிப்பு பசியின்மை முதலியவைகளில் ஏதேனும் ஒன்று இருக்கிறதா?

அப்படியானால் உணவில் மாற்றத்தைக் கொண்டுவந்தால் உங்கள் மனமும் உடலும் புதுப்பிக்கப்பட்டு பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் வழி கண்டுபிடித்து விடலாம்.

முதலில் மனக் கவலையை அகற்ற காலையில் ஏதாவது ஒரு பழச்சாறு அல்லது பால் சேர்த்த தேநீர் அருந்துங்கள். மதியமும் இரவு சாப்பாட்டிற்கு முன்பும் பழச்சாறோ அல்லது ஒரு கப் தயிரோ சாப்பிடுங்கள்.  மற்ற உணவு வகைகளைக் குறைவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அன்னாசிப்பழம்,பப்பாளி,காராமணி போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிடுங்கள்.

இனிப்புப் பழங்களைக் குறையுங்கள். பேரீச்சம்பழம் தேன் உலர் திராட்சை என்ற கிசுமுசுப் பழம் போன்றவற்றை இனிப்பு தேவை எனில் சேர்த்துக் கொள்ளுங்கள். உணவில் ஜீனி அதிகம் சேரும்போது குளுகோஸை ஒவ்வொரு செல்லுக்கும் அனுப்பும் குரோமியம் உப்பு இரத்தத்தில் குறைந்து போய் விடுகிறது. அதே நேரத்தில் இரத்தத்தில் குளுகோஸ் அளவும் உயராமல் பார்த்துக் கொள்ளும் தன்மையுடையது குரோமியம். எனவே தினமும் பத்து பாதாம் பருப்புகளோ அல்லது ஒரு கப் கொண்டைக் கடலையோ தவறாமல் சாப்பிடுங்கள்.

உடல்நலப் பிரச்னைகளையும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் இந்த இரண்டு உணவுகளும் மிக உறுதியாகக் கட்டுப்படுத்திவிடும். நீங்கள் அமைதியாக இருந்தால் போதும். பிடிவாத குணமுள்ள குழந்தைகளுக்குத் தினமும் பாதாம் பால் தயாரித்துக் கொடுப்பது மிகவும் சிறந்த மருந்தாகும்.
உடலில் சேரும் விஷப்பொருட்கள் உடனுக்குடன் அகன்றால் மனம் தெளிவாக இருக்கும். எனவே ஓட்ஸ்மீல் சோயா மொச்சை வேர்க்கடலை இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் உணவில் சேர்க்க வேண்டும். பட்டாணிகூட நல்லது. முட்டைக்கோஸ் சூப் கூட சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் பான்தோனிக் அமிலம் குறையாமல் இருக்கும். பான்தோனிக் அமிலம் அளவு உடலில் குறையாமல் இருப்பதால் மனம் அமைதியாக இருக்கும். உடலிலும் விஷப் பொருட்கள் அதிகரிக்காமல் கட்டுக்குள் இருப்பதால் உடல் நோய்கள் படிப்படியாகக் குணமாக ஆரம்பிக்கும்.

அட்ரீனல்களும் தைராய்டு சுரப்பிகளும் சீராக இயக்க போதுமான அளவு அஸ்கார்டிக் அமிலம் தேவை. எலுமிச்சம் பழ ஜூஸ் சாப்பிடலாம். முருங்கைக்கீரை கொய்யா சோயா மொச்சை போன்றவை தினமும் இடம்பெற்றால் உடலுக்குத் தேவையான வைட்டமின்  தங்கு தடையின்றிக் கிடைத்து உடலும் உள்ளமும் அமைதிபெற்று நோய்கள் குணமாக ஆரம்பிக்கும்.

பணப்பிரச்னையாலும் உடல்நலப் பிரச்னையாலும் இரத்தம் கெட்டியாகி மாரடைப்போ பக்கவாதமோ ஏற்படலாம். எனவே சுக்குக் காப்பி அருந்தி வரவும். உணவில் இஞ்சி வெள்ளைப்பூண்டு தவறாமல் சேர்க்கவும். முலாம்பழ ஜூஸ் தினமும் அருந்தவும். இல்லையெனில் 50 கிராம் வெங்காயத்தை ஜூஸாக அருந்தி வரவும். இதனால் இரத்தம் கெட்டியாகாமல் ஓடிக்கொண்டே இருக்கும். வெள்ளை இரத்த அணுக்களும் சுறுசுறுப்பாக இருந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

பிடிக்கவில்லை போரடிக்கிறது என்று வெறுக்காமல் கேரட் ஜூஸ் சாத்துக்குடி ஜூஸ் போன்றவற்றை மூன்று தடவையாவது அருந்திவாருங்கள்.

காபி தேநீர் முதலியவற்றைக் குறையுங்கள். மது மருந்து முதலியவற்றைத் தவிருங்கள். இதனால் மனநலமும் உடல் நலமும் பாதுகாக்கப்பட்டு விரைந்து குணமாவீர்கள்.

வாரம் மூன்று நாள் மீன் உணவு சாப்பிடுங்கள்.

மேற்கண்ட உணவுமுறைகளால் உடலும் மனமும் புதுப்பிக்கப்பட்டு விடுவதால் உடல் மனம் தொடர்பான எல்லா விதமான பிரச்னைகளும் அகல எளிதாக வழி பிறக்கும். தைரியமாக நம்பிக்கையுடன் வாழ்வீர்கள்

நன்றி :இயற்கை மருத்துவம்

தொடர்புடைய ஆக்கங்கள்

  1. 45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை