Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,090 முறை படிக்கப்பட்டுள்ளது!

தமிழக மக்கள் பிரச்சனைகளில் மவுனம் காக்கும் ரஜினி!

’’அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது’’ என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான இந்திரன் படத்துக்கு இவர் பெற்ற சம்பளம் மட்டும் நூறு கோடி என்று பேசப்பட்டது. அது மட்டும் இல்லாம் இவர் நிறைய படங்களுக்கு சம்பளம் போக சில ஏரியாக்களில் வெளியிடும் உரிமையையும் பெற்றுக்கொள்வார்.

சரி உங்கள் அறிவை கொஞ்சம் தீட்டுங்களேன்! இந்த பணத்துக்கு எல்லாம் இவர் முறைப்படி வருமான வரி செலுத்தினார் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாக இருக்காது. அதனாலேயே கொட்டிக்கிடக்கும் பணமும், சொத்துக்களும் அதை பாதுகாத்து கொள்ள, கணக்கு சொல்ல வழக்கம் போல நமது பணக்காரர்கள் பின்பற்றும் அதே டிரஸ்டி, அன்னதானம், அரசியல் பிரவச பூச்சாண்டி இதுவெல்லாம்.

இதே ரஜினிகாந்த் முல்லை பெரியாருக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை, காவேரி நதி நீர் விசயத்தில் பாசாங்கு செய்து நடித்தார், ஈழமக்கள் படுகொலையில் மவுனம், தமிழக மீனவர்கள் படுகொலையில் மவுனமோ மவுனம், கூடங்குளம் அனுமிநிலயம் விசயத்தில் நீண்ட மவுனம். இப்படிப்பட்ட இவர் ஏன்? அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.

அன்னா ஹசாரே கேட்க்கும் லோக்பால் மசோதாவில் தொண்டு நிறுவனங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் சேர்க்கவில்லை. இதனால் ஹாசரே கொண்டுவரும் லோக்பாலில் ரஜினியும், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ், காஞ்சி காமகோடி சங்கராச்சாரி, போன்றவர்கள் தப்பித்து கொள்ளலாம் என்கிற சுயநலம்தான்.

இப்படிப்பட்டவர்தான் தமிழகத்தின் விடிவெள்ளி, நிறைய பேருக்கு கடவுள், சில பேருக்கு கடவுளை விட மேலானவர் என்றும் அழைக்கப்படுகிறார்.   இப்படி இவரை அழைக்கும் அறிவை அடகு வைத்த  சினிமா பைத்தியங்கள்  தங்கள் தாய், தந்தை, உறவினர்கள் இவர்களில் பலபேர் நோய்வாய் பட்டவர்களாக இருப்பார்கள் அல்லது பரம ஏழையாக ஒருவேளை சாப்பாடுக்கு வழியில்லாமல் இருப்பார்கள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.

ஆனால் ரஜினி படம் வெளியானதும் கட் அவூட்க்கு மாலை, பால் அபிசேகம், முதல் நாள் படத்தை பார்க்க பலநூறு ரூபாய்கள் செலவு என்று அமர்களம் செய்வார்கள். அதுமட்டும் இல்லை அந்த படத்தை நூறு நாள் ஓடவைக்க இவர்களே தினம்தினம் அந்த படத்தை பார்த்து செஞ்சுரி அடிப்பார்கள்.  ரஜினியை கடவுள் என்று சொல்பவர்கள் அப்பாவிகள், படிப்பறிவு இல்லாத மக்கள் என்று நீங்கள் எண்ணிவிட கூடாது இதை சொல்பவர்களில் நிறைய படித்த முட்டாள்களும் உண்டு.

 அதில் ஒரு முட்டாள்தான்  ஸ்ரீனிவாஸ் என்ற பிரபலமான பாடகர் விஜய் TV சூப்பர் சிங்கர் 3  நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட ரஜினி சுற்றில் இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது ரஜினி உங்களுக்கு யார் என்று? அதற்க்கு  ஸ்ரீனிவாஸ்  “அவர் ஒரு கடவுள்” என்று பதில் அளித்தார். ரஜினி உடல்நலம் சரியில்லாத போது தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள், மொட்டை அடித்தவர்கள், அங்கப் பிரதட்சணம் செய்தவர்கள் என்று இந்த பட்டியல் கிழக்கு கடல்கரை சாலைபோல் நீண்டு கொண்டே போகிறது.

இப்படி சினிமா பைத்தியம் பிடித்து அலையும் தமிழ் ரசிகர்கள் புத்தியில் ஆணிதான் அடிக்கவேண்டும். ஓராயிரம் பெரியார்கள் வேண்டும் பகுத்தறிவையும், தன்மானத்தையும் இவர்களுக்கு கற்றுக்கொடுக்க. தமிழர்களுக்கு என்று ஒரு வரலாறு உண்டு  அது மானமும், அறிவும், விவேகமும் நிறைந்தது. உலகில் நாகரிகம் தோன்றும் காலத்தில் நாகரிகமாக வாழ்ந்த ஒரு மூத்த இனம். தமிழர்கள் தங்களது வரலாற்று பெருமைகளை உணரவேண்டும். தங்களை மீண்டும் ஒரு மீள் பார்வைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே எனது கனிவான வேண்டுகோள்.

*மலர்விழி*  

http://www.sinthikkavum.net/search/label/மலர்%20விழி