Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2012
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,163 முறை படிக்கப்பட்டுள்ளது!

வயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற

வயிறு உப்பலாக இருக்கிறது என்று, நன்றாக “கண்டதையும்” சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். “கண் மண் தெரியாமல் சாப்பிட்டால் இப்படித் தான் நேரும்” என்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவர்.

வயிற்றுக்கு வேண்டிய அளவு தான் சாப்பிட வேண்டும்; காய்கறி, “பழங்கள் சாப்பிடுகிறேன்” என்று அதையே மிக அதிகமாக சாப்பிட்டாலும், நார்ச்சத்து அதிகமாகி, வயிறு உப்பிவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் இப்படி ஏற்படும். அடிக்கடி இப்படி ஏற்பட்டால், டாக்டரிடம் காட்டுவது முக்கியம். குடலில் தங்கக்கூடாது! சாப்பிடும் எந்த உணவும், அதிக பட்சம் ஐந்து மணி நேரத்தில் செரிமானம் ஆகி விடும். இதையடுத்து, அடிவயிற்றில் உள்ள தசைகளும், குடல் தசைகளும் இயங்கி, மலத்தை வெளியேற்றுகின்றன.

உடல் அமைப்புக்கு ஏற்ப, சிலருக்கு ஒரு நாளில் மூன்று முறை இப்படி நேரும்; சிலருக்கு மூன்று நாளுக்கு ஒரு முறை கூட நேரும். ஆனால், ஆரோக்கியமான நிலை, தினமும் குறிப்பிட்ட வழக்கத்தை பின்பற்றுவதுதான். நெஞ்செரிச்சல் சாதாரணது தானா? நெஞ்செரிச்சல், சாதாரணமான பாதிப்பு தான். காரணமில்லாமல் ஏற்படுகிறது என்று மட்டும் நினைக்கக்கூடாது. தொடர்ந்து நெஞ்செரிச்சல் இருக்குமானால், ஒருவரின் அன்றாட பணிகள் பாதிக்கப்படும். “ஜெர்ட்” என்ற கோளாறின் அறிகுறி என்று டாக்டர்கள் கூறுகின்றனர். அல்சர், ஆஸ்துமா, கடுமையான இருமல், புற்றுநோய் போன்ற கோளாறுகளுக்கும் நெஞ்செரிச்சல் தான் அறிகுறி.

வயிற்றுக் கோளாறு தீர மாதுளம் பழம்?

வாந்தி, பேதி போன்ற கோளாறு தீர, மாதுளம் பழம் சாப்பிடலாம் என்பது பல ஆண்டாக பின்பற்றப்பட்டு வருகிறது. மலத்தில் ரத்தம் சேர்ந்து வருவதை தடுக்கவும், இதுதான் கைகண்ட மருந்தாகப் பயன்பட்டு வந்தது.

வயிற்றில் வாயுக்கோளாறு, அதன் மூலம் ஏற்படும் சூட்டை தணிக்க இந்த, இனிப்பும் துவர்ப்பும் கலந்த பழம் பயன்பட்டது. வயிற்றுக் கோளாறு போக்க இப்போது இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

வாய் அல்சர் வருவது எப்படி?

வயிற்றில் பாதிப்பு இருந்தால், வாய் அலசர் கோளாறு வரும். இது உண்மை தான். வாய் அல்சரை பரிசோதிக்கும் போது, வயிற்றில் கோளாறு இருப்பது தெரியவரும். சாப்பிடும் உணவை பொறுத்து தான் இந்த கோளாறு ஏற்படுகிறது. நார்ச்சத்து, உள்ள உணவு சாப்பிட்டால், அது வயிற்றை சுத்தம் செய்யும். அதுபோல, பி.12, இரும்பு சத்து மற்றும் போலிக் ஆசிட் குறைபாடு இருந்தாலும், வாய் அல்சர் வரும்.

 வயிற்றுக்கோளாறு “பைல்ஸ்”க்கு காரணம்:

மலச்சிக்கல் கூட, “பைல்ஸ்” எனப்படும் மூலநோய் வர முக்கிய காரணம். வயிற்றின் அடிப்பகுதியில், வீக்கம் ஏற்பட்டால், அதைச் சுற்றிய குதம் உட்பட்ட பகுதிகள் பாதிக்கப்படும். அதனால் மூல நோய் வர வாய்ப்புண்டு. மலச்சிக்கல் வராமல் இருக்க, நார்ச்சத்துள்ள கீரை, காய்கறி உணவுகளை அதிக அளவில் சேர்க்க வேண்டும். அப்போது தான், நாள் தோறும் பாதிப்பின்றி மலம் வெளியேறும். “வாக்கிங்” உட்பட, உடற்பயிற்சி நல்லது. அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால், மாத்திரை சாப்பிடாமல், டாக்டரை பார்ப்பது நல்லது.

இதய பாதிப்பு சந்தேகம் வேணாம்:

வயிற்றில் சில ஆசிட் வெளிப்படும் போது, வயிற்று பகுதி வீக்கம் காணும் போதும் லேசான நெஞ்சு வலி ஏற்படும். இதய பாதிப்பால் தான் இப்படி வலிக்கிறது என்று நினைக்கத்தோன்றும். ஆனால், அது உண்மையில்லை; வயிற்றில் காஸ் பரவுவதால் அப்படி வலி ஏற்படுகிறது. வயிற்றில் காஸ் மூலம் ஆரம்பிக்கும் வலி, இதயம் வரை போகிறது. அதனால், இதய வலி என்று நினைக்கக்கூடாது. “லைப் ஸ்டைல்” மாறி, சாட், பீட்சா போன்ற “ஜங்க் புட்” சாப்பிடுவதால் இப்படி ஏற்பட வாய்ப்புண்டு.

நெஞ்செரிச்சல் காபியால் வருமா?

காபியும் இதற்கு ஒரு காரணம். அதில் உள்ள அதிக அமிலச்சத்து, நெஞ்செரிச்சல் ஏற்பட காரணமாகிறது. புத்துணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக காபி இருந்தாலும், சிலருக்கு நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். பல ஆண்டாக காபி சாப்பிடுவோர் இருக்கின்றனர்; ஆனால், நெஞ்செரிச்சல் வருமானால், அதை நிறுத்துவதே நல்லது.

கார உணவு அல்சர் தரும்:

கார வகை உணவு சாப்பிட வேண்டியது தான்; அதற்காக, அடிக்கடி அதையே சாப்பிட்டு வந்தால், வயிற்றில் பாதிப்பு வரும்; அதுவே, அல்சராக மாறும் வாய்ப்பு அதிகம். அதைப் போல்தான் மன அழுத்தமும். அதிக மனஅழுத்தம் இருந்தால், அது வயிற்றில் எதிரொலிக்கும். ஒன்று மாற்றி ஒன்றாக வயிற்றில் கோளாறு வரும். பல வகை வயிற்று அல்சர்கள் இருக்கின்றன. தொற்று கிருமி மூலமும் வரும்; வலி நிவாரணிகளை அடிக்கடி சாப்பிடுவோருக்கு கூட அல்சர் வரும்.

 உண்ணாவிரதம் நல்லது தான்:

மாதத்துக்கு ஒரு முறை உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது தான்; கம்ப்யூட்டரை “ரீசெட்” செய்வது போல, உடலின் பாகங்களை சீரமைக்க, இப்படி ஒரு நாள் விரதம் பயன்படுகிறது. உடலில் வயிறு, குடல் பகுதிகளில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதன் இயக்கம் சீராகிறது. வயிறும், குடலும் செரிமானம் தர மிக முக்கியம். தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகின்றன. இதற்கு விரதம் பயன் தருகிறது.

Source: Kanavy.com