Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2012
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 13,849 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிட்டுக்குருவி – சில ரகசியங்கள்!

சிட்டுக்குருவிகளை காப்போம் சிறந்தவர்களாவோம்

சிட்டுக்குருவிகளின் சுறுசுறுப்பைப் பார்த்திருக்கீறீர்களா? அருகில் ரசித்திருந்தால் அதன் அருமைப் புரியும்.

ஆம். எங்கள் வீட்டில் கூட சிட்டுக்குருவிகளின் கீச்சுக் குரங்கள் எங்கும் கேட்டுக்கொண்டிருக்கும்.. குருவி கூட்டை அழித்தால் பெரும் பாவம் வந்து சேரும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வந்ததன் அர்த்தம் இப்போது விளங்குகிறது..  இப்படி எதையாவது சொல்லி அவற்றின் இனங்களை அழியாமல் பாதுகாத்து வந்தனர்.

என்னுடைய பாட்டி கூட இப்படி அடிக்கடி சொல்லி இருக்கிறாள்.. அறியா வயதில் ஏதோ விளையாட்டாய் அதன் கூட்டை கலைக்க கோல் எடுத்த போது இவ்வாறு கூறியிருக்கிறார்.. அதிலிருந்து இன்று வரையும் கூட்டைக் கலைத்தால் பாவம் என்ற அர்த்தம் மட்டும் மனதில் நன்கு பதிந்து விட்டிருக்கிறது.

எமது தோட்டத்தின் கிணற்றடியிலும் கிணற்றுக்குள்ளும் தொங்கும் சிட்டுக்குருவிகளின் கூடுகளைப் அதிசயத்தது உண்டு…கூடுகட்டும் விதம், கூட்டின் அமைப்பைப் பார்த்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கும்.. எந்த அளவிற்கு மழைப்பெய்தாலும் நனையாதிருக்கும் வண்ணம் தென்னங்கீற்றின் ஓலைகளை கொண்டு கட்டும் பாங்கு மெய்மறந்து பார்த்திருக்கிறேன்..  ஒரு குருவி ஓடிப் பறந்து தென்னங்கீற்றின் ஓலை கிழித்து (நெடுக்கு வாக்கில் ) இடம் நோக்கி வந்து பின்னும் அழகை கண்டு ரசித்திருக்கிறேன்.

இப்போது சிட்டுக் குருவிகளைக் காண்பது என்பது மிகவும் அபூர்வம்.. நகரில் இருப்பதால் வாகனங்களின் புகையும், இரைச்சலும், ஒரு வித எரிச்சலை மட்டும் தந்து கொண்டிருக்கிறது..அந்த இனிமையான இளமையான, குளுமையான கிராம்ப்புற வாழ்க்கை நினைக்கும்போது ஒவ்வொரு முறையும் சிட்டுக்குருவியும் அதன் காற்றில் ஆடும் அதன் கூடுகளும் நினைவுக்கு வந்து போகின்றன.

சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைய, குறைய உணவு உற்பத்தியும் குறையுகிறது. 60 கோடி மொபைல் போன்களுக்கு 5 லட்சம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏற்படும் மைக்ரோ வாய்ஸ் அதிர்வால் 30 சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டனவாம்.

சிட்டுக்குருவி, தேனீ உள்ளிட்டவை அழிந்து கொண்டே வருவதால், அயல் மகரந்த சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி றைந்து வருகிறது. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும், சிட்டுக்குருவிகளுக்கு விஷமாக மாறி, அவைகள் உயிரிழக்க நேரிடுகிறது.

தொடர்ந்து கட்டப்படும் கான்கிரீட் வீடுகளால் சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டுவதற்கு போதிய இட வசதி இல்லாததாலும் அவற்றின் இருப்பிடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிட்டுக்குருவிகளை பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை பெருக்க மரத்தாலோ, மூங்கிலாலோ அல்லது மண் கலசங்கள் மூலமாகவோ சிட்டுக்குருவிகளின் கூடுகளை செய்து ஜன்னல் அல்லது நிழல் தட்டி போன்ற இடங்களில் தொங்க விட வேண்டும். சிட்டுக்குருவிகள் எங்கு தென்பட்டாலும் அவற்றிற்கு தானியங்கள் மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும்.

சிட்டுக்குருவி ஜோடிகள் தென்பட்டால் அவற்றின் செயல்பாடுகளை, உணவு முறையை, முட்டையிடுவதை கண்காணிக்க வேண்டும். வேளாண்மைக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க, விழிப்புணர்வு முயற்சிகளையோ அல்லது சரியான அறிவுரைகளையோ வழங்க வேண்டும்.

நம்மால் முடிந்த அளவுக்கு சிட்டுக்குருவி இனத்தை அழிக்காமல் பெருக்க ஏற்ற வழி வகைகளை செய்வோம்.

நன்றி – தங்கம்பழனி