Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2012
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,084 முறை படிக்கப்பட்டுள்ளது!

வீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்!

அரசு மானியத்துடன் கடன் உதவி: வீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கலாம்

தமிழ்நாட்டில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சூரிய சக்தி கொள்கையை அரசு வெளியிட்டு இருப்பது பொது மக்களிடமும், நிறுவனங்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சூரிய சக்தி மின் உற்பத்திக்கான செலவு அதிகம். பராமரிப்பதும் கஷ்டம் என்ற எண்ணத்தில் பொது மக்கள் சூரிய சக்தி மின்சார தயாரிப்புக்கு தயக்கம் காட்டினார்கள். இப்போது அரசு அறிவிப்புக்கு பிறகு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. தினமும் பலர் எரிசக்தி மேம்பாட்டு முகாமை அலுவலகத்தை அணுகி ஆலோசனை பெற்று செல்கிறார்கள்.

வீட்டுக் கூரைகளில் இத்திட்டத்தை நிறுவுபவர்களுக்கு அதிக பட்சம் ரூ. 81 ஆயிரம் அல்லது திட்ட செலவில் 30 சதவீதம் என்ற அளவில் அரசு மானியம் வழங்குகிறது. ஒரு கிலோ வாட் அளவுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும். இதற்கு ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் செலவாகும். நிறுவனங்களை பொறுத்தவரை 100 கிலோ வாட் நிறுவ திறனுக்கு மானியம் கிடைக்கும் இதற்கு வங்கி கடனும் கிடைக்கும்.

ஒரு கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் வீடுகளில் 4 டியூப் லைட்டுகள், 3 மின் விசிறிகள், ஒரு டி.வி. அல்லது கம்ப்பியூட்டரை இயக்க முடியும்.  இத்திட்டத்தை நிறுவிய நாளில் இருந்து முதல் 2 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 ஊக்கத்தொகை வழங்கப்படும். அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 1-ம், அதற்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு 50 பைசாவும் வழங்கப்படும். அடுத்த ஆண்டு (2014) மார்ச் 31-ந்தேதிக்குள் இத்திட்டத்தை நிறுவுபவர்கள் மட்டுமே இந்த ஊக்கத் தொகையை பெற முடியும்.

இத்திட்டத்தை நிறுவி தருவதற்கு ஏராளமான முகவர்கள் இருக்கிறார்கள். எரிசக்தி முகமையில் மட்டும் 112 முகவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூலம் நிறுவினால் மட்டுமே அரசின் மானியம் கிடைக்கும்.

ஒரு முறை நிறுவி விட்டால் 15 ஆண்டுகளுக்கு பிரச்சிணை இருக்காது. பாட்டரிகள் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் அல்லது மாற்றும் நிலை ஏற்படும். அவ்வப்போது சூரிய தகடுகள் மீது தூசு படியாமல் துடைக்க வேண்டும். தூசு படிந்தால் உற்பத்தி திறன் குறையும்.

வீடுகளில் 1 கிலோ வாட் சூரிய சக்தி திட்டத்தை நிறுவ ரூ. 2 முதல் 2 1/2 லட்சம் செலவாகும். இதில் மானியத்தை கழித்து விட்டு மீதி தொகையை முகவரிடம் செலுத்தினால் போதும் உடனடியாக நிறுவி தருவார்கள்.

நன்றி: மாலைமலர்