Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,102 முறை படிக்கப்பட்டுள்ளது!

உழுந்தம்பருப்பு சாதம் + தேங்காய் துவையல்.

உழுந்தம்பருப்பு சாதம்.
தேவையான பொருட்கள்.
1. பச்சரிசி————– 4 (கிண்ணம்) அதாவது தேவையான அளவு.
2. உளுத்தம்பருப்பு( தோல் நீக்கியது)———– 1 கிண்ணம்.
3. தேங்காய் பூ————— 1 முறி தேங்காய்
4. உப்பு ————— தேவையான அளவு.
குறிப்பு:  அரிசி, உளுத்தம் பருப்பு 4:1 என்ற விகிதம்.
செய்முறை:
  • பச்சரிசியை நன்றாக மூன்று முறை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
  • உளுத்தம் பருப்பையும் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • ஒரு முறி தேங்காயை நன்றாக திருகி பூ தயார் செய்யவேண்டும்.
  • அதன் பின் நான்கு கிண்ணம் சாதத்திற்கு எவ்வளவு தண்ணீர் வழக்கமாக வைப்பீர்களோ அதே அளவு தண்ணீர்ல் அரிசி, பருப்பு தேங்காய் இவை மூன்றையும் போட்டு,  சிறிது உப்பையும்(ருசிக்கு ஏற்ப) சேர்த்து குக்கரில் சாதத்தை வேக வைக்கவும்.
தேங்காய் துவையல்

1.நன்றாக முற்றிய தேங்காய் பூ —– 1 முறி.
2.கோலிக்காய் அளவுக்கு புளி
3.சிறிது பெருங்காயத்தூள்
4. மிளகாய் வற்றல் ——— காரத்துக்கு ஏற்ப
5. உளுந்து ——- 1 ஸ்பூன்
6.கடுகு 1/2 ஸ்பூன்
7. கருவேப்பிலை கொஞ்சம்

செய்முறை:
உளுந்து, கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை தனித்தனியாக இருப்பு சட்டியில்(கடாயில்) போட்டு வறுத்து வைத்துக்கொள்ளவும். அத்துடன் தேங்காய் பூ, புளி, கருவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் இவறை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டியாகவும், நைஸ் ஆகவும் அம்மியில்(மிக்ஸியில்) அரைக்கவும். இப்பொழுது துவையல் ரெடி.

சுட்ட அப்பளம்: தேவையான அப்பளத்தை எடுத்து அடுப்பில் சுட்டு எடுக்கவும்.

சாப்பிடும் முறை:

  •  சாதம் இளம் சூட்டில் இருக்கும் போது, நீங்கள் சாப்பிடும் சாதத்தின் அளவில் மூன்றில்  ஒரு பங்கு அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். அதில் முக்கால் எலுமிச்சை அளவுக்கு கருப்பட்டியை(வெல்லம்) எடுத்து நன்றாக தூளாக்கி அதில் போடவும். ஒரு கரண்டி நல்லெண்ணையை ஊற்றி நன்றாக சாதத்தை பிசைந்து சாப்பிடவும்.
  • அதன் பின் சாதத்தில் தேவையான அளவு துவையலை போட்டு, ஒரு கரண்டி நல்லெண்ணையை ஊற்றி சாதத்தை நன்கு பிசைந்து சுட்ட அப்பளத்துடன் சேர்த்து சாப்பிடவும்.
  • கடைசியாக தேவையான அளவு சாதத்தில் லூஸான தயிர் ஊற்றி பிசைந்து துவையலையும், சுட்ட அப்பளத்தையும் . தொட்டு சாப்பிடவும்.

நன்றி: சட்டம் நம்கையில்

குறிப்பு: உளுந்து, உழுந்து இரண்டுமே சரியான சொற்களாதத் தெரிகின்றன. தவறு எனில் சுட்டிக்காட்டவும்.