- வழங்கியவர்: அஷ்ஷைஹ் பீர் முஹம்மது காசிமி, இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை.
- ரமளான் முழு இரவு நிகழ்ச்சி
- நாள்: 09-08-2012 வியாழன் இரவு – ஜுபைல் தஃவா நிலையம்.
பொதுவாக சகோதரர்கள் என்பது ஒரு தாய்க்கோ – தந்தைக்கோ பிறந்தவர்களாவர். பலர் ஒற்றுமையுடன் இருந்தாலும் சில சமயங்களில் போட்டா போட்டிகளும் சண்டைகளும் இல்லாமல் இல்லை.
ஆனால் மற்றொன்று உடன் பிறவாமல் – இஸ்லாமிய அடிப்படையில் ஏற்பட்ட உறவாகும். இந்த சகோதரத்துவம் மொழி, நாடு, இனம்,கலாச்சாரம் அணைத்தையும் தாண்டி உண்மையான சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதாகும். அந்த இணைப்பு தான் இஸ்லாமியர் – முஸ்லிம் என்ற உறவாகும். எந்த மூலையில் ஒரு முஸ்லிம் பாதிக்கபட்டாலும் அடுத்த பகுதியில் உள்ள முஸ்லிமின் மனம் கலங்கும்.
உதாரணமாக.. அன்று அரபகத்தில் நபிகளார் அவர்கள் ஹிஜ்ரத் செல்லுமுன் ஒவ்வொரு கூட்டத்தாரும் பல வருட காலமாக சில காரணங்களுக்காக சண்டையிட்டு வாழ்ந்து வந்தனர். ஒட்டகைக்கு தண்ணீர் கொடுத்த விவகாரம் 40 வருட காலம் பகையாக இருந்தது.
நபிகளார் மதினா வந்த போது வீடு, சொத்து, மனைவி, மக்கள் எல்லாவற்றையும் இஸ்லாத்திற்காக விட்டு வந்த ஸஹாபாக்களை அன்சாரித் தோழர்களுடன் சேர்த்து விட்டார்கள். அந்த அன்சாரித் தோழர்கள் – நாடு துறந்து வந்த மக்கா வாசிகளுக்கு தன் சொத்து சுகங்களில் பங்கு கொடுத்து தன் சகோதரராக ஏற்றுக் கொண்டனர். இரண்டு மனைவி வைத்திருந்தவர்கள் ஒரு மனைவியை தலாக் சொல்லி சகோதரருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
காலா காலம் சண்டை பிடித்து வந்த மக்களிடம் இந்த மாற்றத்தை இஸ்லாம் என்ற உணர்வு ஏற்படுத்தியது. இது தான் உண்மையான சகோதரத்துவம்.. மேலும்…. வீடியோபை பார்க்கவும்..
நன்றி: சுவனச்சோலை.காம்