Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2013
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,913 முறை படிக்கப்பட்டுள்ளது!

சீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை

091117-ws-1பண்டைய உலகில், 7 தனிப்பட்ட கட்டிடவியல் முறைகள் இருந்தன. இவற்றில் சில நீண்டகாலத்துக்கு முன்பே தடைபட்டன அல்லது பரவலாகாமல் போயின. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பண்டைய எகிப்து, மேற்காசிய, இந்திய மற்றும் அமெரிக்க கட்டிடங்கள். சீன, ஐரோப்பிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையே உலகின் மூன்று முக்கிய கட்டிடவியல் முறைகளாக கருதப்படுகின்றன. இதில் சீன மற்றும் ஐரோப்பிய கட்டிடவியல் முறைகள் மிக நீண்டகாலம் தழைத்துச் செழித்து, மிகப் பரந்துப்பட்ட அளவில் பரவலாயின. எனவே, இவையிரண்டும் மிகப்பெருமளவில் புகழ் பெற்றன, சாதனைகள் பல படைத்தன.

சீனக் கட்டிடவியல் முறையை பற்றி அறிகையில், கட்டிடங்கள் அல்லது கட்டுமானங்கள் பல வகைகளாக பகுக்கப்படுகின்றன என்று நாம் அறிந்தோம். நகரம், மாளிகை, கோயில், நினைவுக்கல்லறை கோபுரங்கள், துறவியர் மடங்கள், புத்த விகாரைகள், கற்குகைகள், தோட்டங்கள், அரசு அலுவலகங்கள், மக்கள் பொதுவாகக் கூடுமிடங்கள், இயற்கைக் காட்சியிடங்கள், கோபுரம் மற்றும் மாடங்கள், அரச அரண்மனைகள், குடியிருப்பு வீடுகள், பெருஞ்சுவர், பாலங்கள் என அவை வகைப்படுத்தப்படுகின்றன.

மனிதன் விலங்காய் அலைந்து, கிடைத்தை உண்டு, பின் வேட்டையாடி புசித்து களைத்து வாழ்ந்து பின், என்றோ எப்படியோ, விதை முளைக்கும் இயற்கை அதிசயத்தை அறிந்து, ஆதி வேளாண்மை உருவாகி, அதன் பின் அலைந்து திரியவேண்டாம், ஓரிடத்தில் தங்கி வாழலாம் என்ற ஒரு புரிதலுக்கு பகுத்தறிவின் வளர்ச்சியால் வந்தடைந்தபின் தனக்கென இருப்பிடத்தை கட்டத்தொடங்கினான். இத விளைவாகவே குகைகள் உள்ளிட்ட மிக மூத்த கட்டுமானங்கள் அல்லது கட்டிங்கள் உருவாயின. அந்த வகையில், சீனாவின் மிக முந்தைய கட்டிடங்கள் அல்லது கட்டுமானங்கள் பழைய மற்றும் நவ கற்காலத்தில் அதாவது ஏறக்குறைய 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியதாக தெரிகிறது. நவ கற்காலத்தின் நடுப்பகுதி மற்றும் பிற்பகுதியில், குகைகளினுள்ளே கட்டிடவியலின் மிக முந்தைய அழகியல் தோன்றியதாம். அதாவது வெறுமனே இருக்க இடம் என்பதை விட, அதிலும் கொஞ்சம் அழகியல் அம்சங்களை உட்புகுத்தும் மனித ஆவலை கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகைகள் உணர்த்துகின்றன என்கிறார்கள்.

ஆக இந்த நீண்ட நெடிய வரலாற்றில், அதன் வளர்ச்சியில் சீன கட்டிடவியல் அதன் அடிப்படை அம்சங்களை, சாரங்களை தொடர்ந்து நிலைநிறுத்தி வந்துள்ளது. கிமு 17ம் நூற்றாண்டு முதல் கிமு 11ம் நூற்றாண்டு வரையான ஷாங் வம்சக்காலத்தில் பெரிய அளவிலான மாளிகைகள், நினைவு கோபுரங்கள் போன்றவை தோன்றின. வசந்தம் மற்றும் இலையுதிர்காலம், மேற்கு ஷோ வம்சக்காலத்தில்தான் நகரங்கள் உருவாயின. மேலும் ஓடுகளின் பயன்பாடும் பரவாலாகத் தொடங்கியது. சீன கட்டிடவியல் வரலாற்றில் ஓடுகளின் பயன்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். பாரம்பரிய கட்டிடங்கள் அல்லது கட்டுமான வடிவங்கள் படிப்படியாக குறைந்து 20ம் நூற்றாண்டு வாக்கில் நின்றுபோயின.

சீனக் கட்டிடக்கலையானது கிழக்காசியாவில் பெரிதும் பரவியது எனலாம். குறிப்பாக ஜப்பான், கொரியா, வியட்னாம், மங்கோலியா ஆகியவை. ஆக, சீனாவை மையமாகக் கொண்ட இந்த நாடுகளின் கட்டுமான வடிவங்களும் உள்ளடங்கிய கிழக்காசிய கட்டிடவியல் உருவானது. மிங் மற்றும் ச்சிங் வம்சக்காலத்தில் சீனக் கட்டிடவியல், குறிப்பாக தோட்டக்கலை, மேற்கத்திய வடிவங்கள் அல்லது கட்டிடவியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. பின்னாளில் அது ஐரோப்பாவுக்கு அறிமுகமாகி, ஓரளவு அங்கே செல்வாக்கு பெற்றது. ஹான் மற்றும் ஜின் வம்சக்காலத்தின் போதே கூட தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்தான கட்டிடவியல் அம்சங்களை சீனக் கட்டிடவியல் உள்வாங்கியது, மட்டுமின்றி காலப்போக்கில், நீண்ட வரலாற்றில், அவை சீனக் கட்டிடவியலின் முக்கிய பகுதியாக இணைந்தன.

20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலான சீன கட்டிடவியல் வளர்ச்சி

கட்டிடவியல் என்பது ஒரு நாட்டின், இடத்தின் பண்பாட்டின் வெளிப்பாடாக, பிம்பமாக அமைந்துள்ளது எனலாம். எனவே காலம் மாறும்போது பண்பாட்டில் ஏற்படும் மாற்றங்களை போல, கட்டிடவியலிலும் மாற்றங்கள் நிகழத்தான் செய்கின்றன. சீனாவில், நிலபிரபுத்துவ பொருளாதாரம் சீர்குலைந்து மேற்கத்திய சக்திகளின் படையெடுப்புகள் நிகழ, ச்சிங் வம்சம் வீழ்ந்து, நவசீனா பின்னாளில் உருவாக்கப்பட, சீனச் சமூகம் மிகப்பெருமளவிலான, முன்கண்டிராத மாற்றங்களுக்கு முகங்கொடுத்தது. ஆக, இன்றைக்கு ஒருவித சிக்கலான வடிவமாக, பழையதும் புதியதும் இணைந்த, சீன பாணியும் மேற்கத்திய பாணியும் கலந்த ஒரு சிறப்பு பாணியாக, அம்சமாக தற்கால சீனக் கட்டிடவியல் நிற்கிறது.

முன்கண்டிராத தொழிற்சாலைகள், வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், தேவாலயங்கள், தூதரங்கள், புதிய வீடுகள் ஒரு பக்கம் புதிதாக அறிமுகமாக, கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களும், குறிப்பாக இரும்புருக்கு அல்லது எஃகு, இரும்பு, காரை முதலியவையும் சீன கட்டிடவியலில் அறிமுகமாயின. மட்டுமல்ல, கட்டுமான முறைகள், சாதனங்கள், தொழில்நுட்பங்கள் முதலியவை, முந்தைய மரம் சார்ந்த, மனித உழைப்பு சார்ந்த கட்டுமான வடிவத்தை மாற்றின.

நன்றி: சீன வானொலி நிலையம்