Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2013
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,443 முறை படிக்கப்பட்டுள்ளது!

பண மதிப்பு வீழ்ச்சியும், வெளிநாட்டுக் கல்விச் செலவும்…

“டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வீழ்ச்சி” என்பதை பத்தோடு பதினொன்றான செய்தியாக பார்க்கும் மனப்பான்மைதான் மக்களிடம் அதிகமாக உள்ளது. டாலர் மதிப்பு என்பது ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், பங்குச்சந்தை வணிகம் சம்பந்தப்பட்டது, பெரும் வணிகர்கள் சம்பந்தப்பட்டது என்ற எண்ணம் தான் பெரும்பான்மை மக்களிடையே காணப்படுகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும்பொழுது, மகிழ்ச்சி அடைபவர்கள் என்று சொல்வதை விட சற்றே திருப்தி அடைபவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் தான். பாதிக்கப்படுபவர்கள் என்று எடுத்துக்கொண்டால், இன்றைய சூழ்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

பாதிக்கப்படுபவர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க இடம் வெளிநாட்டில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்?

இந்தியாவிலிருந்து அமெரிக்க நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் படிப்பிற்காக மாணவர்கள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்பொழுது அவர்கள் இந்திய ரூபாயை எடுத்துச் செல்ல முடியாது. அந்த நாட்டின் பணத்தைத் தான் எடுத்துச்செல்ல வேண்டியதாக இருக்கும். அப்பொழுது அந்த நாட்டின் ரூபாய் மதிப்பும், இந்திய நாட்டு மதிப்பும் சமமாக இருந்தால் நமக்கு பாதிப்பில்லை.

ஆனால் பொருளாதாரம், வணிகம், தங்கம் கையிருப்பு போன்ற காரணிகளால் ரூபாய் மதிப்பு நிகராக இருப்பதில்லை. ஒவ்வொரு நாட்டிலும் இவை மாறுபட்டு இருப்பதால் பெரும்பாலும் எந்த நாட்டு பண மதிப்பும் மற்றோரு நாட்டின் பண மதிப்புக்கு நிகராக இருப்பதில்லை. பண மதிப்பில் மாற்றங்கள் வரும்பொழுது, நமது பணத்தின் மதிப்பு நாம் மாற்றும் பண மதிப்பிற்கு குறைவாக இருந்தால் அதிக ரூபாயும், அதிகமாக இருந்தால் குறைவான அளவில் ரூபாயும் கொடுக்க வேண்டியது இருக்கும்.

எடுத்துக்காட்டாக, இந்த வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 54 ரூபாயாக இருந்தது. அதாவது நமக்கு ஒரு அமெரிக்க டாலர் வேண்டுமானால், நாம் அதற்கு 54 ரூபாய் கொடுக்க வேண்டும். அதே போன்றுதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ மதிப்பும்.

ஜனவரி 2013ல்

53 ரூபாய் = 1டாலர்
72 ரூபாய் = 1 யூரோ

ஆகஸ்டு 2013ல்

65 ரூபாய் = 1 டாலர்
87 ரூபாய் = 1 யூரோ

தற்பொழுது டாலருக்கு 12 ரூபாயும், யூரோவுக்கு 15 ரூபாயும் அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவரின் கல்விச்செலவு எடுத்துக்காட்டாக 10,000 டாலர் அல்லது யூரோவாக இருந்தால்,

ஜனவரி 2013ல்

10,000 டாலர் = 5,30,000 ரூபாய்
10,000 யூரோ = 6,50,000 ரூபாய்

ஆகஸ்டு 2013ல்

10,000 டாலர் = 7,20,000 ரூபாய்
10,000 யூரோ = 8,70,000 ரூபாய்

எட்டு மாதத்திற்குள்ளாகவே அமெரிக்கா போன்ற நாடுகளில் படிப்பவர்கள் 1,20,000 ரூபாய் அதிகமாகவும், ஐரோப்பிய நாடுகளில் படிப்பவர்கள் 1,50,000 ரூபாய் அதிகமாகவும் கொடுக்க வேண்டியுள்ளது.

தொழில் புரிபவர்களே இநதிய ரூபாய் 50 பைசா வீழ்ச்சி அடைந்தாலும் பாதிக்கப்படும்பொழுது, கடன் வாங்கி, வீட்டை, நகையை அடமானம் வைத்து பெரும் கனவுகளோடு தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பி இருக்கும் பெற்றோர் ரூபாய் மதிப்பு இவ்வளவு வீழ்ச்சி அடைந்தால் எவ்வளவு பாதிக்கப்படுவர்.

கல்விக் கட்டணம், உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், இந்தியாவிற்கு வந்து போகும் செலவு என ஒவ்வொரு செலவும் இந்த விலை வீழ்ச்சியினால் அதிகரிக்கிறது. வருடத்திற்கு எட்டு லட்சம் என்று கணக்கிட்டு பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிய பெற்றோர், இன்று கூடுதலாக 1.80 லட்சத்திற்கும் அதிகமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். மூன்று வருட இளநிலை படிப்பிற்கு சென்றவராயிருந்தால், அடுத்த இரு வருடத்திற்கும் சேர்த்து 3.60 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நடக்கும் மாணவர் சேர்க்கையில் மேல் படிப்பிற்கு செல்லலாம் என்று திட்டமிட்டு இருக்கும் பல மாணவர்களும் தங்கள் ஆசைகளை கைவிடும் நிலையில் உள்ளனர். ஏற்கனவே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோரும் மீதி பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தவிக்கின்றனர்.

ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார சூழ்நிலைகளே வாய்ப்புகளையும், வாய்ப்பின்மையையும் ஏற்படுத்துகின்றது. மக்கள் தொகைப் பெருக்கம், தேவைப்பாடு, வேலைவாய்ப்பு, லட்சியத்திற்கான வாய்ப்புகள், ஒரே பாடப்பிரிவை பலரும் எடுக்கும் நிலை, கல்வித்தரம் என பல்வேறு காரணங்களால் ஒரு நபர் தங்கள் நாட்டை விட்டு வெளி நாடுகளுக்கு செல்லும் முடிவை எடுக்கின்றனர். இந்தத் தேவைகள் இங்கேயே கிடைத்தால் வெளிநாடு செல்வதற்கான அவசியம் இருக்காது. ஆனால் அதற்காக நாம் நீண்டதூரம் பயணிக்க வேண்டியது இருக்கிறது.

என்ன செய்யலாம்?

முடிந்த வரையில் செலவுகளை குறைத்தும், திட்டமிட்டும் ஒரளவு இந்த பண வித்தியாசத்தை சரி செய்யலாம். அதற்காக சில முன், பின் தயாரிப்புகளை மாணவர்களும் பெற்றோர்களும் செய்யவேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ வெளிநாட்டு கல்விக்கு தயாராகும்பொழுது திட்டமிடும் தொகையை விட கூடுதலாக 25 சதவிகிதத் தொகையை கணக்கிடுங்கள். அதே போன்று பண மதிப்பு குறித்து தெளிவுடையவராக இருந்தால், பண மதிப்பு அதிகரிக்கும்பொழுது தங்கள் பிள்ளைகளின் வெளிநாட்டுக் கணக்குக்கு தங்கள் கையில் இருக்கும் பணத்தை செலுத்துங்கள். சிறிது சிறிதாக பணத்தை சேமித்து வரும் பொழுது, பண மதிப்பின் ஏற்ற இறக்கங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

மாணவர்களும் தங்கள் பெற்றோரின் இக்கட்டான சூழ்நிலையை நினைவில் கொண்டு சில கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் தான் பெற்றோருக்கும் பேருதவியாக் இருக்கும்.

1) கல்லூரி உணவகங்களில் மட்டும் சாப்பிடுங்கள்.
2) வீட்டில் சமையுங்கள்.
3) உணவகங்களில் “ஹேப்பி ஹவர்” என ஒதுக்கப்படும் நேரத்தில் சாப்பிடுங்கள், அந்த நேரத்தில் உணவுகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
4) பசியுடன் பொருட்கள் வாங்காதீர்கள், ஏனெனில் அந்த நேரத்தில் தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்குவீர்கள், அது செலவினை அதிகப்படுத்தும்.
6) விலை குறைவான கடைகளில் பொருட்களை வாங்குங்கள்.
7) அத்தியாவசியமான பொருட்கள் எது என தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.
8) கடைகளில் தரப்படும் தள்ளுபடி காலங்களுக்காக காத்திருங்கள்.
9) மாணவர்களுக்கான அடையாள அட்டையைப் பயன்படுத்தி பயணங்களில் சேமியுங்கள்.
10) தேவையில்லாத பயணங்கள், சுற்றுலாக்களை தவிருங்கள்.
11) இரவு நேர கொண்டாட்டங்களைத் தவிருங்கள்.
12) மாணவர் சலுகைகளை தேடிப் பெறுங்கள்.

நன்றி: தினமலர்