Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2013
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,980 முறை படிக்கப்பட்டுள்ளது!

மொழிகளின் தோற்றம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு எழுத தெரியாது. ஏனென்றால் அப்பொழுது எழுத்துக்களோ, மொழிகளோ உருவாகவில்லை.

தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த செய்கைகளை பயன்படுத்தினார்கள். பின்னர் படங்களை காட்டினர். உந்தாரனமாக ஒரு புலியை பற்றிய தகவலை தெரிவிக்க, புலியின் உருவத்தை காட்டினர்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலும், மேசப்போடோமியாவிலும் வாழ்ந்து வந்த மக்கள் இப்படிதான் செய்து வந்தனர். அவர்கள் வரைந்த இந்த உருவங்களுக்கு ” பட எழுத்துக்கள் ” என்று பெயர்.  எகிப்தில் உள்ள பிரமீடுகளிலும் பட எழுத்துக்களை இன்றும் காணலாம். காலப்போக்கில் பட எழுத்துக்களில் இருந்து “குறி எழுத்துக்கள்” பிறந்தன. மரம் என்ற சொல்லைக் குறிப்பதற்கு மரம் போல படத்தை வரையாமல், ஏதேனும் குறி ஒன்றை எழுதும் வழக்கம் வந்தது. பேச்சில் வரும் ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஆயிரக்கணகான குறிகள் எழுதப்பட்டன.  பழங்காலத்தில் வாழ்ந்த பாபிலோனியர்களும், ஆசாரியரும் எழுதிய குறி எழுத்துக்கள், உளி வெட்டுக்கள்போல காணப்பட்டன.

சீன மொழிகள் எழுத்துக்கள் குறிஎலுத்துக்கலாகும் அம்மொழியில் 5000 திற்கும் மேற்பட்ட குறி எழுத்துக்கள் உள்ளன. குறி எழுத்துக்களை கற்பதும், எழுதுவதும் எளிதல்ல. மேல்நாட்டில் முதன் முதலாக எழுத்துக்களை எழுத கற்றுக் கொண்டவர்கள் பெணீசியர்கள். இவர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் வாழ்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து கிரேகர்கள்  எழுத்துக்களை கற்றுக்கொண்டார்கள். கிரேகர்கள் அந்த எழுத்துக்களை ரோமானியர்களுக்கு கற்றுத்தந்தனர்.

இந்திய மொழிகள்

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எழுத்துக்கள் யாவும் இரு மொழி குடும்பங்களில் அடங்கும். ஒன்று ஆரிய மொழி குடும்பம், இதன் ஆதி மொழி சமஸ்கிரதம். மற்றொன்று திராவிட மொழி குடும்பம். இதன் ஆதி மொழி தமிழ்.

தமிழுக்கும், சமஸ்கிரததிர்க்கும் தனிதனி எழுத்துக்கள் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  “வட்டெலுதுக்கள்” என்ற தமிழ் எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்தன. இந்த எழுத்துக்கள் வட்ட வடிவத்தில் இருக்கும்.

சமஸ்கிரதம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழில்களில் கூட்டெலுதுக்கள் உண்டு. இவை இரண்டு மூன்று எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்கும். ஆனால் தமிழில் கூட்டெலுதுக்கள் கிடையாது. தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன, இந்த எழுத்துக்கள் சொல்லில் எவ்வாறு சேருகின்றன என்பதற்கு, “தொல்காப்பியம்” என்னும் பழம்தமிழ் இலக்கணத்தில் விதிகள் உண்டு.

காகிதம்

பழங்கால மக்கள் கருங்கற்கள் மீதும் சுவர்களின் மீதும் எழுத்துக்களை செதுக்கினர். பிறகு பதபடுத்தபட்ட தோலின் மீதும், மரப்பட்டைகளின் மீதும், பானை ஓடுகளின் மீதும், பனை ஓலைகளிலும் எழுதும் வழக்கம் வந்தது. இந்தியாவில் மக்கள் எப்போது எழுத்துக்கள் கட்டரு கொண்டனர் என்று திட்டவட்டமாக கூறமுடியாது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிந்துசமவெளி மக்கள் களிமண் பலகைகளில் எழுதி வந்தனர்.

தமிழ் மிக பழமையான மொழிகளில் ஒன்று. அதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிக சிறந்த இலக்கியங்கள் தோன்றியுள்ளன. எனவே தமிழ் மக்கள் அதற்க்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக் கலையை நன்கு அறிந்திருக்க வேண்டும். பழங்காலத்தில் தமிழ் நூல்கள், பனை ஓலையில் எழுதப்பட்டன. எழுதும் ஓலையை தேர்ந்தெடுத்து, அதை ஒழுங்காக வாரிக் கட்டுவதே ஒரு கலையாக இருந்தது.

மன்னர்கள் கட்டிய அணைகள், சுட்ருசுவர்கள் மீதும் செப்பேடுகளிலும் எழுதப்பட்டன. அயல் மொழியின் கருத்துக்களும், சொற்களும் தமிழில் கலந்தன. இதனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் எழுத்துக்களை எழுதும் முறையில் பல மாறுபாடுகள் ஏற்பட்டன. அச்சு எந்திரங்கள் வந்த பிறகு தமிழ் மொழியின் வடிவங்கள் மாறாமல் இருந்து வருகிறது.

தமிழ், ஆங்கிலம் உட்பட பெரும்பாலான மொழிகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன.  உருது எழுத்துக்களையும், அரேபிய எழுத்துக்களையும் வலமிருந்து இடமாக எழுதுகிறார்கள். சீனர்கள் மேலிருந்து கீழாக எழுதுகின்றனர்.

நன்றி: தகவல் தளம்