மனிதன் இவ்வுலகில் இறைவனுக்கு கட்டுப்பட்டு செய்கின்ற நன்மைகள் அனைத்தும் மனிதனுக்கே உரியதாகும். இவைகளுக்கு மறுமையில் கூலி கொடுக்கப்படும். யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது. எனினும் அல்லாஹ் மனிதர்களுக்கு கொடுத்துள்ள அருட்கொடைகளை கணக்கிட்டால் இந்த நல்ல காரியங்கள் ஒன்றுமேயில்லை.
அதே போல் உலகில் படைக்கப்பட்ட அனைவர்களும் ஒன்று சேர்ந்து முழுமையான இறையச்சத்துடன் இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாலும், அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரத்திலோ, அவனது கண்ணியத்திலோ அல்லது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பண்புகளிலோ கடுகளவும் அதிகரிக்கப்போவது இல்லை. அதுபோலவே உலகில் படைக்கப்பட்ட அனைவர்களும் ஒன்று சேர்ந்து இறைவனை மறந்து தனது மனோயிச்சைப்படி முழுமையாக வழிகெட்ட நிலையில் வாழ்ந்தாலும் அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரத்திலோ, அவனது கண்ணியத்திலோ அல்லது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பண்புகளிலோ கடுகளவும் குறை எற்படப்போவதும் இல்லை. மனிதன் செய்கின்ற நன்மைகள் அனைத்தும் அவனுக்கே உரியதாகும். ஆனால் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் கருணை மட்டும் இல்லையென்றால்…… (தொடர்க….)
வாராந்திர பயான் நிகழ்ச்சி
- வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராகா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா
- நாள் : 17-10-2013 வியாழக்கிழமை இரவு
- இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம்