Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2014
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,371 முறை படிக்கப்பட்டுள்ளது!

சறுக்கும் பாதைகள் (உண்மையான கதை)

முண்டங்களின் சுவாசம் (உண்மையான கதை)

“Facebook”. இந்த சொல் இன்று ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் செதுக்கப்பட்டிருக்கிறதெனலாம். அன்ரொய்ட் போன்களினதும் அப்பிள் போன்களினதும் வருகையின் பின்னர் இவை மனித மூளைகளிலும் செதுக்கப்பட்ட வார்த்தைகளாகி விட்டன.

மஸ்ஜித்துக்கு ஒரு வேளை தொழுவதற்கு செல்கிறானோ இல்லையே ஐவேளை Facebook ல் லாக்-இன் ஆகிறான் தவறாமல்! அவ்வளவிற்கு இதன் தாக்கம் இன்றைய முஸ்லிம் உம்மாவை பாதித்திருக்கிறது. வரம்புகள் மீறப்படும் பொழுது, மனதில் குடிகொண்டுள்ள வக்கிரமான அல்லது தீராத ஆசைகள் வெளிக்கிளரும் பொழுது இந்த Facebook வழியாக பல அநியாயங்களும் பாவங்களும் நிகழ்ந்து விடுகின்றன. அதற்கு ஒரு உதாரணம் இந்த கதை….

தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் ஒரு தேசத்தில் நிகழ்ந்த நிகழ்வு இது. ஒரு முஸ்லிம் தந்தை. நல்ல மனிதர். நாணயமானவர். இறைபக்தியும் உள்ளவர். நிறைய தான தர்மங்கள் செய்பவர். பணக்கார வணிகர். அழகான இரண்டு பருவ வயது பிள்ளைகள். நல்ல குடும்பம். நல்ல வாழ்க்கை. அவரிற்கு எல்லாம் இருந்தது. ஒன்றை தவிர. அது, அவரது மனைவியின் அழகு. அதில் அவரின் ஆன்மா திருப்தியடையவில்லை. அதற்காக அவர் இன்னொரு பெண்ணை வைத்து கொள்ளவும் இல்லை. மானத்திற்கு அஞ்சி அல்லது தனது மனைவிக்கு அஞ்சி!

டிஜிட்டல் உலகம் அவரையும் விட்டு வைக்கவில்லை. சம்சுங் S3 கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கினார். எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதால். ஒரு நண்பர் அதில் ஸ்கைப் போவது எப்படி, Facebook போவது எப்படி என காட்டிக்கொடுத்தார். கூடவே ஒரு ஐடீயும் திறந்து கொடுத்தார். ஆரம்பங்களில் பொழுது போக்கிற்காக சோசியல் சைட்களிற்கு சென்றவர் நாட்கள் செல்ல செல்ல அடிக்கடி செல்ல ஆரம்பித்தார்.

ஆரம்பம் என்னவோ எல்லோரையும் போல குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் share பண்ணுவதில் ஆரம்பித்தது. யார் யாரோ அனுப்பும் இஸ்லாமிய படங்களையும், முஸ்லிகள் பற்றிய படங்களையும் share பண்ணுவது ஒரு இபாதத் என்ற எண்ணத்தில் தான் இவரும் வீழ்ந்தார். திக்ர் செய்ய தேவையில்லை. தஸ்பீஃ செய்ய தேவையில்லை. ஏன் இமாம் ஜமாத் கூட தேவையில்லை. பேஸ்புக்கை திறந்து நாலைந்து குர்ஆன், ஹதீஸ்களை share பண்ணுவதன் மூலம் இஸ்லாமிய தஃவாவை செய்த நினைப்பு இவரையும் தொற்றிக்கொண்டது.

கொமென்ட்ஸ் போடுவதில் ஆரம்பித்து கவுன்டர் ரீப்பிளை கொடுப்பது வரை அவர் எல்லைகள் நீண்டு சென்றன. நிறைய நண்பர்கள் அட் ஆனார்கள். பின்னர் நிறைய நண்பியரும் அட் ஆனார்கள். இப்போது இவரது முகநூலில் இருப்பது இவர் படம் கூட அல்ல. ஒரு நடிகரின் படம். அழகிய பெண்கள் தன்னை நேசிக்க வேண்டும் என்பதற்காக அவர் உள் மனம் போடச்சொன்ன அழகான படம் அது.

நண்பர்கள் பட்டியலில் ஒரு பெண் அறிமுகமானாள். முதலில் உரசல் வார்த்தைகள். அப்புறம் கலக்கல் வார்த்தைகள். இறுதியில் இருவர் இதயமும் டிஜிட்டல் திரையில் கலந்து காதலித்தன. அவர் எதிர்பார்த்த, அவரிற்கு கிடைக்காத அவரது Dream Wife ன் அனைத்து தராதரங்களும் இந்த பெண்ணிடம் இருந்தது. அவளிற்கும் அப்படித்தான். அவள் எதிர்பார்த்த சோரோவை இவரில் பார்த்தாள். Facebook தானே. வேண்டியவரை சட் பண்ணினார்கள். எல்லைகள் மீறி அளவு கடந்த வார்த்தைகளால் காமத்தை சொப்பிங் செய்தார்கள். இருவரின் அந்தரங்கமும் இருவருக்கும் தெரியும் இப்போது.

Facebook என்றாலே பொய்களின் மாயஜாலம் தானே. தான், தன் சூழுல், தான் பற்றிய வரலாறுகள் என எல்லாமே அழகான பொய்களால் வடிவாக கோர்க்கப்பட்ன. இதில் ஒருவரிற்கு ஒருவர் ஈடில்லாமல் பொய் பேசினார்கள்.

கல்யாணம் எனும் எல்லை வரை ஒருவர் முகத்தை ஒருவிற்கு காட்டவில்லை. த்ரில்லிங் தேவை என்பதால். இவரின் வயது 48. பெண்ணின் வயதோ 17. ஆனால் இவையெல்லாம் இன்றைய டெக்னிகல் வேர்ல்ட்டில் நத்திங். அமெரிக்காவின் நியூ வேர்ல்ட் ஓடர் போல இது நியூ ல்வ் ஓடர் அல்லவா. இறுதியில் தங்கள் முகங்களை ஸ்கைபில் நேரடியாக பார்த் பேசுவதற்கு நாள் குறித்தார்கள். ஸ்கைப்பை ஓன் பண்ணி பரஸ்பரம் முகத்தை பார்த்தார்கள்.

அப்போது தான் அந்த பேரதிர்ச்சி காத்திருந்தது. இவ்வளவு நாளும் தான் உருகியது தன் மகளுடன் என்பது அந்த தந்தைக்கு தெரிந்தது. இவ்வளவு நாளும் நான் மருகியது தன் தந்தையுடன் என்பதும் அந்த மகளிற்கு புரிந்தது. இருவருமே வெட்கத்தாலும் வேதனையாலும் அவமானத்தாலும் கூனி குருகி புளுவாய் துடித்து போனார்கள். அவ்வளவிற்கு அவர்கள் நாட்கணக்காக காமரசம் சொட்டும் வார்த்தைகளை பகிர்ந்திருந்தார்கள். அடல்ட் இமேஸ்களை பரஸ்பரம் செயார் செய்திருந்தார்கள். சாகவும் முடியாத வாழவும் முடியாத யாருக்கும் சொல்லவும் முடியாத ஒரு நிலை.

அடிப்படையில் இருவரும் நல்லவர்கள். மனசாட்சி உடையவர்கள். சமூகத்தில் மரியாதையாக நோக்கப்படுபவர்கள். தங்கள் கேவலத்தை அவலத்தை யாருக்கும் சொல்லி அழ முடியாத நிலைமை.

வீட்டினுள் தந்தையின் முகத்தை பார்க்க மகளிற்கு முடியாத நிலை. மகளின் முத்தை நோக்க தந்தைக்கும் முடியாத நிலை. தீயிடை வீழ்ந்த புளுவாக துடித்து போனார்க்ள். யார் யாருக்கு ஆறுதல் சொல்வது. அந்த அளவிற்கு செக்ஸ் சட்டிங் அல்லவா பேஸ்புக்கில் செய்துள்ளார்கள். ஒவ்வொரு நாளும் வீடு வந்தவுடன் ஓடி வந்து தன் தொடையில் அமரும் அன்பு மகளா என் காமக்கிழத்தி என நினைக்கும் போது தந்தை செத்தே போய் விட்டார்.

இறுதியில் அவர் இதனை தான் மதிக்கும் ஒரு மார்க்க அறிஞரிடம் சொல்லி அழுதுள்ளார். தான் 10 அல்லது 15 வருடங்கள் டுபாய் மலேசியா என்று போய் வேலை செய்ய போவதாகவும், மகளிற்கு திருமணம் நடந்த பின்னர் நாடு வர விருப்பதாகவும் சொல்லி அழுதுள்ளார். அவரை ஆறுதல்படுத்திய மார்க்க அறிஞர், மகளை மதரஸா ஒன்றில் சேர்த்து விடுமாறு கூறி அது அவளிற்கு வாழ்வின் தர்பியத்தை வழங்கும் என்றும் காலப்போக்கில் அது சரியாகி விடும் என்றும் கூறி இதற்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்குமாறும் சொல்லியுள்ளார்.

இது ஒரு நல்ல மனிதன் கெட்ட வழியில் செல்ல முயன்ற கதை. எம்மில் எத்தனை இலட்சம் கெட்ட ஆன்மாக்களை உடைய மனிதர்கள் இருக்கின்றோம்.

இப்போது சிந்தியுங்கள் நாம் Facebook-ல் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை. நம் மனசாட்சியே எமக்கு நீதிபதி.

source: khaibarthalam.blogspot