Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2014
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 22,931 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஜனாஸா தொழுகை தொழும் முறை

fahad1ஜனாஸாத் தொழுகை என்பது மரணித்தவருக்காக பிராத்தனை செய்யும் ஒரு விசேஷத் தொழுகையாகும். இந்தத் தொழுகையை நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அதன்படி இந்தத் தொழுகையில் இறந்தவரின் பாவங்கள் மன்னக்கப்படவும் அவருடைய மறுமை வாழ்க்கை வெற்றியாகி சுவர்க்கம் கிடைக்கவும் இறைவனிடம் நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தபடி செய்ய வேண்டும்.

ஒரு மைத்திற்காக யாராவது ஒருவராவது இந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அந்த ஜமாத்திற்கே குற்றமாகி விடும். இது பர்ளுகிஃபாயாவாகும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு மிக அதிகமான நன்மைகள் உள்ளன.

ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்பவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு அடக்கம் செய்யப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு கீராத்கள் என்றால் என்ன? என கேட்க்கப்பட்டது அதற்கவர்கள் இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மைகள்) என்றார்கள்       அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்,அபூதாவூத்,திர்மிதி

மற்றத் தொழுகைகளுக்கு உளு அவசியம் போல இதற்கும் அவசியமாகும்.

தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ)ஆகும் அதன் துவக்கம் தஹ்ரீமா(அல்லாஹீ அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரினார்கள் அறிவிப்பவர்:- அலீ(ரலி) நூல்கள்: அபூதாவூத்,திர்மிதி,இப்னு மாஜா,அஹ்மத்

இத்தொழுகை ஜமா அத்தாக நிறைவேற்றப்பட வேண்டும்.

ஜனாஸா இமாமுக்கு முன்னால் வைக்கப்பட வேண்டும்.

ஜனாஸாத் தொழுகையை வாரிசுரிமை பெறக்கூடிய தந்தை, மகன் போன்ற உறவுக்காரர்கள் தொழுவிப்பதே சிறந்தது.

தொழுவிப்பவர் ஆண் ஜனாஸாவின் தலைக்கு நேராகவும், பெண் ஜனாஸாவின் உடம்பின் நடுப்பகுதிக்கு நேராகவும் நிற்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஜனாஸாக்கள் இருப்பின் தனித்தனியாகவோ அல்லது அனைத்திற்கும் பொதுவாக ஒரே முறையிலேயும் தொழுகை நடத்தலாம்.

மார்க்கத் தண்டனை நிறைவேற்றப்பட்டு மரணித்தவர் பெரும் பாவங்களில் திளைத்திருந்தவர், கடன்காரர், தொழுவிக்கப்படாமல் அடக்கம் செய்யப்பட்டோர், தொழுகை நடத்த எவரும் இல்லாத ஓர் இடத்தில் மரணித்தவர் போன்ற அனைவருக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம்.

ஜனாஸா தொழுகை முறை: –

1) பிற தொழுகைகளைப் போலவே ஜனாஸா தொழுகைக்கும் உடல், உடை சுத்தமாக இருத்தல், உளு செய்தல், ஜனாஸா தொழுகைக்காக நிய்யத்து செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்றவைகள் முக்கியமானதாகும்.

2) மய்யித் ஆணாக இருந்தால் இமாம் அதனுடைய தலைக்கு அருகிலும், பெண்ணாக இருந்தால் இமாம் அதற்கு மத்தியிலும் நிற்பார்.

3) தொழக் கூடியவர்கள் இமாமின் பின்னால் நிற்க வேண்டும்.

4) ஜனாஸா தொழுகைக்கு இமாம் நான்கு தக்பீர் கூறுவார்.

5) முதல் தக்பீருக்குப் பிறகு, அவூது பிஸ்மியுடன் சூரத்துல் ஃபாத்திஹா ஓதவேண்டும்

6) இரண்டாவது தக்பீருக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓத வேண்டும். (ஸலவாத்து என்பது பிற தொழுகையில் அத்தஹிய்யாத்துக்குப் பிறகு நாம் ஓதக் கூடிய ஸலவாத்து ஆகும்)

7) மூன்றாவது தக்பீருக்குப் பிறகு மய்யித்துக்காக நாம் துஆச் செய்ய வேண்டும். (கீழே பார்க்கவும்).

8.) நான்காம் தக்பீருக்குப் பிறகு சிறிது நேரம் நின்று விட்டு வலது பக்கம் மட்டும் திரும்பி ஒரே ஒரு சலாம் கொடுக்க வேண்டும். (ஒரு சலாம் மட்டுமா அல்லது இரண்டு சலாம் கொடுக்க வேண்டுமா என்பதில் அறிஞர்களிடையில் கருத்து வேறுபாடு உள்ளது)

முதல் தக்பீருக்கு பின்
ஜனாஸா தொழுகை முதல் தக்பீருக்குப் பின் ஸூரத்துல் ஃபாத்திஹாவை (அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்…..)  முழுமையாக ஓத வேண்டும்.

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ

الرَّحْمـنِ الرَّحِيمِ

مَـالِكِ يَوْمِ الدِّينِ

إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ

اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ

صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ

غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ

பொருள்:

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

இரண்டாவது தக்பீருக்கு பின்
நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும்.

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى  إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى  إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

உச்சரிப்பு: அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வஆலா இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்,

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பராக்த அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்.

பொருள்: இறைவா! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது அவர்களின் மீதும், முஹம்மது அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் அவர்களுக்கும், முஹம்மத் அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

மூன்றாவது நான்காவது தக்பீருக்கு பின்

மய்யித்திற்காக வேண்டி தூய மனதுடன் பிரார்தனை செய்யவேண்டும்

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ

உச்சரிப்பு: அல்லஹும்ம ஃபிர்லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரீம் நஸுலஹு வவஸ்ஸிஃ மத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யழ மினத்தனஸ் வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்ஹில்ஹுல் ஜன்னத வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்

பொருள் : இறைவா இவரை மன்னிப்பாயாக. இவருக்கு அருள் பாலிப்பாயாக. இவருக்கு நற்சுகம் அளிப்பாயாக. இவரைப் பொறுத்தருள்வாயாக. இவரது விருந்துபச்சாரத்தைக் கண்ணியமாக்குவாயாக. இவர் புகும் இடத்தை (மண்ணறையை) விரிவாக்குவாயாக. மேலும் இவரை தண்ணீர், பனி, பனிக்கட்டி கொண்டு கழுவுவாயாக. வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து நீ தூய்மைப்படுத்துவதைப் போல் இவரை இவரது பாவங்களிலிருந்து நீ தூய்மைப் படுத்துவாயாக. இவரது வீட்டுக்குப் பகரமாக சிறந்த வீட்டையும், இவரது குடும்பத்தாருக்குப் பகரமாக சிறந்த குடும்பத்தாரையும் இவரது மனைவிக்குப் பகரமாக சிறந்த மனைவியையும் இவருக்கு வழங்குவாயாக. மேலும் இவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும், நரகத்தின் தண்டனையிலிருந்தும் இவரைக் காப்பாற்றுவாயாக.

ஜனாஸா தொழுகையில் ஓதக் கூடிய மற்றொரு துஆ: –

اللَّهُمَّ اغْفِرْ لحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا ، فَأَحْيِهِ عَلَى الإِسْلامِ ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ

உச்சரிப்பு:அல்லஹும்மஃபிர் லிஹய்யினா, வமய்யிதினா  வஷாஹிதினா, வகாயிபினா, வஸகீரினா, வகபீரினா, வதகரினா, வஉன்ஸானா,  அல்லஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃபைதஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான்.

பொருள் : இறைவா! எங்களில் உயிருடன் இருப்பவர்களுக்கும் இறந்து விட்டவர்களுக்கும் இங்கு வந்திருப்பவர்களுக்கும் வராதவர்களுக்கும் எங்களில் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக. இறைவா! எங்களில் எவரை நீ உயிர் வாழச் செய்கிறாயோ அவரை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக. மேலும் எங்களில் எவரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக.

இவைதான் ஒரு முஸ்லிம் மரணித்து விட்டால் அவருக்காக நாம் செய்யக் கூடிய குறைந்த பட்ச பிரார்த்தனைகளாகும்.