Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2014
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,185 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர் ?

cauliflowerகாலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால்  குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டிச் சாப்பிடும். காரணம்… சுவையும், ருசியும்  அப்படி. குறைந்த அளவு கொழுப்பு, வைட்டமின்கள் – சி, அதிக நார்ச்சத்து கொண்ட  காலிஃப்ளவர் சில சமயம் மனிதர்களின் வாழ்க்கையை முடமாக்கிவிடும் என்றால் நம்ப முடிகிறதா?

அளவில் பெரிதாகத் தெரியும். காலிஃப்ளவரின் இதழ் இடக்குகளில் ஒளிந்திருக்கும் புழுக்கள் தான் வில்லன்கள். பெயர் பந்து புழுக்கள் (பால் வேர்ம்ஸ்) பூக்களின் நுண்ணிய தண்டுகளில் பற்றிப் பிடித்தபடி உயிர் வாழும் தன்மை கொண்டவை இந்தப் புழுக்கள். அதனால் அவற்றைக் கட்டுப்படுத்துவதும், அழிப்பதும் சிரமம் என்று சொல்லப்படுகிறது.

cauliflower cleaningஇதுகுறித்து தாவரவியல் நிபுணர் ஒருவரிடம் பேசினோம். உண்மைதான்.. காலிஃப்ளவர் பூக்கும் பருவத்தின் போதே புழுக்களின் முட்டைகள் உள்ளே நுழைந்து பல்கிப் பெரிதாகிவிடும். அளவில் மிகச் சிறியதாக இபுருப்பதால் கைகளால் எடுத்துப் போட முடியாது மாறாக, வீட்டுக் குழாயில் தண்ணீரில் அலசினாலும் போகாது. அதனால் தண்ணீரைக் கொதிக்க வைத்து புழுக்களை அழிப்பதுதான் வாடிக்கை. ஆனால் இந்த முறையிலும் அனைத்துப் புழுக்களும் மடியாது! என்று எச்சரிக்கும் தொனியில் சொல்லும் அந்த நிபுணர், உப்புக் கரைசல் அதற்கு நல்ல மாற்று என்கிற கருத்தையும் முன் வைக்கிறார்.

வீடுகளில் காலிஃப்ளவர் சமைப்பதற்கு முன்பு முடிந்தவரை கொதிக்க வைத்த தண்ணீரில் கழுவுவார்கள். சரி ஆனால் ஹோட்டல்கள், உணவு விடுதிகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் உண்டு. இது பற்றி சமூக ஆர்வலர்

ஒருவரிடம் கேட்டபோது, ஆமாம் அங்கே சமையலுக்கு காலிஃப்ளவர்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்படும். சுடுநீர், உப்புக்கரைசல் கொண்டு சுத்தப்படுத்தும் வாய்ப்பும் குறைவு. இதனால் அந்த பூக்களில் ஒட்டியிருக்கும் நுண்ணிய புழுக்கள் எளிதில் வெளியேறாது. அதனால் உணவு  உட்கொள்ளும்போது நம்மை அறியாமல் உள்ளே சென்று உடலில் பாதிப்புகள் ஏற்படுத்தும் ஆபத்து உண்டு! என்கிறார்.

சரி! சரியான முறையில் சுத்தம் செய்யாமல், காலிஃப்ளவர் எடுத்துக் கொண்டால் பாதிப்புகள் வருமா? என்ன சொல்கிறார் பிரபல நரம்பியல் மருத்துவ நிபுணர் தெய்வீகன். “காலிஃப்ளவரில் இருக்கும் புழுக்கள் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று சொல்லமுடியாது குறிப்பிட்ட புழுக்கள் மனித உறுப்புகளுக்குள் சென்றவுடன் செயலிழந்து போகும். அதையும் தாண்டி உள்ளே தங்கிவிட்டால் மட்டுமே ஆபத்து!’ என்கிறார்.

எபிலெப்ஸி:-இளம் வயதில் குழந்தைகளுக்கு காக்காய் வலிப்பு (எபிலெப்ஸி) வரும். காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் .ள்ளிட்ட காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது காரணம் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் மும்பையைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதனை மறுத்துள்ளனர்.

சுத்தம் செய்வது எப்படி? :-காலிஃப்ளவர் பூக்களின் மீது புழுக்களும் பசை போன்று ஒருவித திரவமும் ஒட்டியிருக்கும். அதனை உப்புக் கரைசலில் மூழ்க வைத்து (ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் கால் பங்கு உப்பு) சுத்தம் செய்யலாம். கூடவே அரை டம்ளர் வினிகரில் (அசிட்டிக் அமிலம்) அரைமணி நேரம் ஊற வைக்கலாம். இதன் மூலம் புழுக்களை ஒழிக்கலாம்.

பாதிப்புகள் :- தசைகளில் இறுக்கம்,மூளை நரம்புகளில் அழற்சி,வயிற்று வலி

நன்றி: புரட்சி செய்திகள்