Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2016
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,222 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை குட்டீஸ் ரெசிபி 1/2

p103”மணலைக்கூட கயிறா திரிச்சுடலாம் போல இருக்கு… ஆனா, குழந்தைங்களை நேரத்துக்கு சாப்பிட வைக்கிற கலை புரிபட மாட்டேங்குதே!” என்று ஆதங்கப்படும் இல்லத்தரசிகள் ஏராளம்! இவர்களுக்காக சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால், இந்த இணைப்பிதழில் 30 வகை ‘குட்டீஸ் ரெசிபி’களை வழங்கிறார்.

”எப்பவும் செய்யுற டிஷ்களையே கொஞ்சம் வித்தியாசமாகவும், கலர்ஃபுல்லாவும் செய்துகொடுத்தா, பசங்க அள்ளிக்குவாங்க! இட்லி மஞ்சூரியன், ஹாட் அண்ட் ஸ்வீட் டோக்ளா, மினி வெஜ் ஊத்தப்பம், பனீர் – வெஜ் ரோல்ஸ், பனானா சப்பாத்தி என்று வகை வகையா நான் கொடுத்திருக்கிற அயிட்டங்களை சமைச்சுத் தந்தீங்கன்னா… வீட்டில் சாப்பிடும்போது தட்டையும், ஸ்கூல்ல டிபன் பாக்ஸையும் துண்டு துணுக்குகூட மிச்சம் வைக்காம காலி செஞ்சுடுவாங்க” என உற்சாகத்துடன் கூறுகிறார் ஆதிரை.
——————————————————————————————————————
பிரெட் க்ரிஸ்பிஸ்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10, வெங்காயம் – 2, தக்காளி – 3, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கடுகு, பெருஞ்சீரகம் – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு1, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு,  பிரெட் துண்டுகளை வறுத்து எடுத்து, தனியே வைக்கவும். பின்னர் வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி. அதில் அரை கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி, இறக்கவும்.
இது, லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது.
—————————————————————————————————————
வெஜ் சாண்ட்விச்

தேவையான2வை: சால்ட் பிரெட் ஸ்லைஸ் – 10, கேரட் துருவல், கோஸ் துருவல் (இரண்டும் சேர்த்து) – ஒரு கப், வெங்காயம், குடமிளகாய், தக்காளி –  தலா ஒன்று, வெண்ணெய் – 100 கிராம், புதினா – சின்ன கட்டு (சுத்தம் செய்துகொள்ளவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு, இஞ்சி  விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். குடமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும்,  வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட் துருவல், கோஸ் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். புதினாவை லேசாக வதக்கி மிக்ஸியில் அரைத்து அதனுடன் வெண்ணெய், இஞ்சி விழுது சேர்த்து நன்கு குழைத்து, பிரெட் துண்டின் மேல் பரவலாகத் தடவவும். அதன் மேல் வதக்கிய காய்களை பரவலாக வைத்து, மல்லித்தழைத் தூவி மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து டோஸ்டரில் டோஸ்ட் செய்யவும் (தவாவில் சூடுபடுத்தியும் தயார் செய்யலாம்).
————————————————————————————————————
டொமேட்டோ  கார்ன் புலாவ்

தேவையானவை:  பாசுமதி அரிசி – ஒரு கப், வேகவைத்த கார்ன் – அரை கப், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 3, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை 3மிளகாய் – 2, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய்ப் பால் – அரை கப், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். அரிசியுடன் தேங்காய்ப் பால், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, ஊற வைத்த அரிசி கலவையை ஊற்றவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு அடுப்பை சிறிதாக்கி, 10 நிமிடம் கழித்து இறக்கவும். வேக வைத்த கார்னை மேலே தூவி… பரிமாறவும்.
————————————————————————————————————–
மினி வெஜ் ஊத்தப்பம்

தேவையானவை:  இட்லி மாவு – 4 கப், கேரட் துருவல். கோஸ் துருவல் (இரண்டும் சேர்த்து) – ஒரு க4ப், பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் (இரண்டும் சேர்த்து) – ஒரு கப், இட்லி மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கி… கோஸ் துருவல், கேரட் துருவல், உப்பு சேர்த்து மேலும் வதக்கி, இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் மாவை குட்டி குட்டி ஊத்தப்பமாக (சற்று தடிமனாக) ஊற்றி, மேலே இட்லி மிளகாய்ப்பொடி தூவி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாக எடுக்கவும். சாஸ் உடன் பரிமாறவும்.
—————————————————————————————————————
பிரெட் வெஜ் ஆம்லெட்

தேவையானவை:  பிரெட் ஸ்லைஸ் – 10, கடலை மாவு – ஒரு5 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) –  ஒரு கப், மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, எண் ணெய், உப்பு  – தேவையான அளவு.

 செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். கடலை மாவு டன் வதக்கிய காய்கறி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். தவாவை சூடாக்கி, சிறிது எண்ணெய் ஊற்றி, பிரெட் ஸ்லைஸை போட்டு, அதன் மேல் ஒரு கரண்டி கடலை மாவை பரவலாக ஊற்றவும். 2 நிமிடங் கள் கழித்து மெதுவாக திருப்பிப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக எடுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளைத் தூவி, பரிமாறவும்.
—————————————————————————————————————
மசாலா குஸ்கா

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், பால் – 2 கப், பெரிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (நறுக்கிக்கொள்ளவும்), பச்சை மி6ளகாய் – 3, புதினா, கொத்தமல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி பச்சை மிளகாய், புதினா, கொத்த மல்லித் தழை ஆகியவற்றை வதக்கி…  மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்து… அரைத்து வைத்த வெங்காயம் – தக்காளி விழுது மற்றும் இஞ்சி – பூண்டு விழுது, சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரிசி, பால் சேர்த்து நன்கு கிளறி, தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும், ‘வெயிட்’ போட்டு, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, 10 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும்.
இதற்கு, ஆனியன் ராய்தா மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் சூப்பர் காம்பினேஷன்.
—————————————————————————————————————
பனீர் ஃப்ரைடு ரைஸ்

7 தேவையானவை:  பாசுமதி அரிசி – 2 கப், பனீர் – 100 கிராம், பூண்டு – காய்ந்த மிளகாய் அரைத்த விழுது – 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்துக் கொள்ளவும். பனீரை பொடியாக நறுக்கவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டு – காய்ந்த மிளகாய் விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். நறுக்கிய வெங்காயம், பாதியளவு வெங்காயத்தாள், பனீர் துண்டுகள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு பாசுமதி சாதம், மீதமுள்ள வெங்காயத்தாள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
—————————————————————————————————————
ஃப்ரூட் பகளாபாத்

தே8வையானவை: பச்சரிசி – 2 கப், பால் – அரை கப், புளிப்பில்லாத புதிய கெட்டித்தயிர் – இரண்டரை கப், இஞ்சி – பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முந்திரி – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, மாதுளை முத்துக்கள் – ஒரு கப், பச்சை திராட்சை – 20, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  பச்சரிசியை நன்கு குழைய வேகவிடவும். சாதம் சூடாக இருக்கும்போதே அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, பால், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், முந்திரி ஆகியவற்றை தாளித்து சாதத்தில் சேர்க்கவும். அத்துடன் கெட்டித்தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக, மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்து நன்கு கிளறவும். இதை டிபன் பாக்ஸில் போட்டு லஞ்சுக்கு கொடுத்து அனுப்பலாம்.
—————————————————————————————————————
பச்சைப்பயறு பாத்

தேவையானவை:  பச்சைப்பயறு, பச்சரிசி – தலா அரை கப், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2, மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், 9கொத்தமல்லித் தழை – சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரி – 8, பட்டை – சிறு துண்டு, லவங்கம் – ஒன்று, நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சைப்பயிறு, பச்சரிசியை நன்கு கழுவி 2 கப் நீர் ஊற்றி ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் – நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம் தாளித்து… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் ஊற வைத்த அரிசி – பயறை சேர்த்து குக்கரை மூடவும். பின்னர் நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். குக்கரைத் திறந்து ‘பொலபொல’வென இருக்கும் மணக்கும் சாதத்தின் மேல் மிளகுத்தூள், சீரகத்தூள், முந்திரி தூவி, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, கிளறி இறக்கவும்.
—————————————————————————————————————
க்ரீன் இட்லி

தேவையானவை:  குட்டி இட்லி – 20 (அல்லது பெரிய இட்லியை 4, 5 துண்டுகளாக நறுக்கிக் 10கொள்ளலாம்) புதினா, கொத்தமல்லி – தலா ஒரு சிறு கட்டு, தேங்காய் துருவல் – அரை கப், புளி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 5 (அல்லது காரத்துக்கேற்ப), கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்லியை மண்போக அலசி, சுத்தம் செய்யவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து… புதினா, கொத்தமல்லி, புளி, தேங்காய் துருவல், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஆறவைத்து, அரைத்துக் கொள்ளவும். நெய்யை காய வைத்து, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… அரைத்து வைத்த சட்னி, குட்டி இட்லிகளைப் போட்டுக் கிளறி இறக்கவும்.
—————————————————————————————————————
குயிக் வெஜ் புலாவ்

தேவையானவை:  பாசுமதி அரிசி – 2 கப், பால் – 2 கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்11ஸ் (இரண்டும் சேர்த்து) – ஒரு கப், பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம், பச்சை மிளகாய் – தலா 2, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை நீள நீளமாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் நன்கு வதக்க வும். இதனுடன் பால், தண்ணீர் ஒரு கப், பாசுமதி அரிசி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, குக்கரை மூடவும். பின்னர் நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கி.. பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி, பரிமாறவும்.
—————————————————————————————————————
கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி

12_002 தேவையானவை:  கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், வேகவைத்து உதிர்த்த சோளம் – ஒரு கப்,  பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), நெய், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை:  வேகவைத்து உதிர்த்த சோளத்தை மிக்ஸியில் சற்று கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவுடன் சிறிதளவு நெய், உப்பு, தேவையான நீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண் ணெய் விட்டு, காய்ந்ததும் பச்சை மிளகாய் – பூண்டு விழுதைப் போட்டு வதக்கி… அரைத்த சோளம், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஆறிய தும் இந்த கலவையை சின்னச் சின்ன உருண்டைகளாக தயார் செய்யவும். பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவில் இருந்து சிறிதளவு எடுத்து கிண்ணம் போல் செய்து, இதனுள் கார்ன் விழுது உருண்டையை வைத்து மூடி, மெல் லிய சப்பாத்தியாக தேய்க்கவும். தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் – நெய் கலவையை ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.
—————————————————————————————————————
கலர்ஃபுல் சில்லி பரோட்டா13

தேவையானவை:  பரோட்டா – 10, மைதா – அரை கப், சோள மாவு – முக்கால் கப், ஃபுட் கலர் (சிவப்பு) – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறு துண்டு, குடமிளகாய் – ஒன்று, பூண்டு – 6 பல், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். குடமிளகாயை நீளநீளமாக, மெல்லியதாக நறுக்கி, வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும். மைதாவுடன், அரை கப் சோள மாவு, உப்பு, ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். பரோட்டாக்களை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, கரைத்த மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி… மிளகாய்த்தூள், பொரித்தெடுத்த பரோட்டா துண்டுகள் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள கால் கப் சோளமாவை கொஞ்சம் நீர் விட்டு கரைத்து பரோட்டா கலவையில் ஊற்றிக் கிளறி இறக்கவும். வதக்கி வைத்த குடமிளகாயை மேலே தூவவும்.
தயிர் பச்சடி, இதற்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.
—————————————————————————————————————-
இட்லி மஞ்சூரியன்

தேவையானவை:  இட்லி – 5 அல்லது 6 (விரல் நீள துண்டுகளாக நறுக்கவும்), மைதா மாவு, கடலை 14மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் – தலா ஒரு டீஸ்பூன், கேசரி கலர் – ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு, இஞ்சி – பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கேசரி கலர், சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து, கெட்டியாக கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இட்லித் துண்டுகளை மாவுக் கரைசலில் முக்கியெடுத்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவவும்.
இதற்கு தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட்டால்… சுவை அபாரமாக இருக்கும்.
—————————————————————————————————————-
சாஃப்ட் பரோட்டா15

தேவையானவை:  மைதா மாவு – 2 கப், தயிர், பால் – தலா கால் கப், சமையல் சோடா – கால் டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  மைதா மாவுடன் நெய், சர்க்கரை, உப்பு, சமையல் சோடா சேர்த்துப் பிசிறி, தயிர், பால் மற்றும் தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். அதன் மீது ஒரு டீஸ்பூன் எண்ணெய் தடவி 3 மணி நேரம் ஊறவிடவும். ஊறிய மாவில் ஒரு உருண்டை எடுத்து மெல்லியதாக, வட்டமாக திரட்டி அதன் மீது பரவலாக எண்ணெய் தடவி மடித்து சுருட்டவும் (புடவை கொசுவம் போல). பிறகு, சப்பாத்தி குழவியால் சற்று கனமாகத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். இதேபோல 4, 5 பரோட்டாக்களை சுட்டு ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து இரண்டு கைகளாலும் இரண்டு ஓரங்களிலும் சேர்த்துத் தட்டி எடுத்து வைக்கவும்.
வெஜ் குருமா இதற்கு சரியான ஜோடி.
——————————————————————————————————————

30 வகை குட்டீஸ் ரெசிபி 2/2