Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2016
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,596 முறை படிக்கப்பட்டுள்ளது!

சாதிக்க விரும்புவோருக்கு ஒரு வழிகாட்டி!

பெரும்பாலான மக்கள் தோல்வியடைவது திறையின்மையாலோ அல்ல!  மாறாக விருப்பின்மையாலும் வழிகாட்டுதல் இன்மையாலும், ஒழுக்கமின்மையாலும் தான் என்று கூறகின்றார்.

hinderance1உலகில் சில மனிதர்கள் மதிப்பு வாய்ந்த சொத்தான மக்களில் மேல் முதலீடு செய்து எப்படி வெற்றி பெறுவது என்பதை அவர்கள் கற்றுக்  கொண்டுவிட்டனர்.  எந்த வியாபாரத்திற்கும் மனித வளமே உங்களுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்க முடியும்.  மிகப்பெரிய கடன் சுமையாக ஆகவும் முடியும் என்கிற நமது மனப்பாங்கே நமது வெற்றியின் அஸ்திவாரமாகும்.  ஒரு பெரிய கட்டிடம் ஒரு பலமான அஸ்திவாரத்தின் மேல் நிற்பதைப்போலவே வெற்றியும் கூட பலமான அஸ்திவாரத்தின் மேல் நிற்கின்றது.

வாய்ப்பு என்பது நமது காலடிகளுக்கு கீழேயே உள்ளது.  நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த வாய்ப்பைத் தேடி வேறெங்கும் போக வேண்டியதில்லை. அந்த வாய்ப்பை கண்டுணர்வதேயாகும்.

இக்கரைக்கு அக்கரை பச்சைபசுமையாக தென்படும் பொழுது அக்கறையில் உள்ளவர்கள் இக்கரையை பசுமையெனப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். என்னால் அதைச் செய்ய முடியாது என ஒருவர் கூறினால் அதற்கு இரண்டு விதமான பொருள்கள்.  அதை எப்படி செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அது பயிற்சி சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். அதை செய்ய விரும்பவில்லை என்றால் அது அவர்களுடைய மனப்பாங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனை.

மற்றும் எதிர்மறை எண்ணமுள்ளவர்கள் தமது தோல்விகளுக்கு எப்போதும் உலகத்தையும், தங்களது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், கணவன், மனைவியையும், பொருளாதாரத்தையும், அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவார்கள்.  இத்தகைய எண்ணங்களிலிருந்து விலக வேண்டும் என்றால் உங்களிடம் உள்ள அழுக்கை சுத்தப்படுத்தக் கொள்ளுங்கள்.

மக்களோடு ஒட்டி வாழுங்கள்.  உங்களுடைய கனவுகளையெல்லாம் ஒன்று சேர்த்து முன்னேறிச் செல்லுங்கள்.வெற்றியின் அறிகுறிகள்அடிக்கடி மகிழ்ச்சியாய் சிரிப்பதும், பிறரை மிகவும் நேசிப்பதும், புத்திசாலிகள் மரியாதைக்குப் பாத்திரமாவதும் குழந்தைகளின் பாசத்தை பெறுவதும், நேர்மறையான விமர்சகர் தான் அங்கீகார  பொய்யான நண்பர்களின் வஞ்சகத்தைப் பொறுத்தல், அழகை ஆராதித்தல், பிறரிடத்து, அமைந்துள்ள சிறப்புகளை கண்டுபிடிப்பது, அழகானதொரு குழந்தையை அடைதல், ஒரு ஆன்மாவை  மீட்டல், ஒரு பழத்தோட்டத்தை உருவாக்கல், ஒரு சமூக நிலையை உயர்த்தல் போன்ற பணியை செய்து முடித்தல், உற்சாகத்தோடு விளையாடி சிரித்தல், பெருமகிழ்ச்சியோடு பாடி இருத்தல், ஒரு உயிர் நன்மையடைந்ததை அறிந்திருத்தல், உண்மையான நேர்மையான நல்ல விஷயங்களை எண்ணுதல் மூலம் நாம் மனப்பாங்கைப்பெற முடியும்.  அசாதாரண மனிதன் வாய்ப்பை நாடுகிறான்.  ஆனால்… சாதாரண மனிதன் பாதுகாப்பை நாடுகிறான் .

hinderance2நமக்கு என்ன தேவையோ அதன் மேல் மனதை வைக்க வேண்டும்.  வெற்றியாளர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவர் பண்புகளை ஏற்றுக்கொண்டு பன்படுத்தின் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.  அது போல் தோல்வியடைந்தவர்களிடம் சில பண்புகள் இருக்கின்றன.  அதனை தவிர்த்தால் தோல்வியை தவிர்க்கலாம்..  சில அடிப்படைக் கொள்கையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் வரும் விளைவே வெற்றியைத் தருவதாகும். வெற்றி என்பது ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கை அடைதல்.  வெற்றி என்பது மன ஊக்கம்.  இலக்கை அடையும் விருப்பம், எப்படியும் இலக்கை அடைந்தே ஆகவேண்டும் என்ற மனப்பாங்கு. கடின உழைப்பு போன்றவற்றால் உண்டாகும் நல்ல தீர்வின் வெளிப்பாடாகும். உயிர் வாழ்வது மட்டும் போதாது வாழ்கையை முழுவதுமாக வாழ வேண்டும். மேலோட்டமாக தொடுவது மட்டும் போதாதது உணரவேண்டும்.

வெற்றிக்குத்த தடைகள்

  1. தான் என்ற அகந்தை
  2. வெற்றி/ தோல்வி பயம்
  3. திட்டமின்மை
  4. இலக்குகளை வகுத்துக்கொள்ளாதிருத்தல்
  5. வாழ்க்கை மாறுதல்கள்
  6. வேலைகளைத் தள்ளிப் போடுதல்
  7. குடும்பப் பொறுப்புகள்
  8. பொருளாதாரப் பாதுகாப்பு விஷயங்கள்
  9. ஒருமுகப்படுத்தாமை
  10. குழம்பி இருத்தல்
  11. பணத்திற்காக நோக்கத்தைக் கைவிடுதல்
  12. அதிகமான வேலைகளைத்தனியாகவே செய்வது
  13. அதிகப்படியான கடமைப் பொறுப்பு
  14. கடமைப் பொறுப்பின்மை
  15. பயிற்சியின்மை
  16. தொடர்ந்து முயற்சி செய்யும் உறுதி இல்லாமை
  17. முன்னுரிமைகளின்மை வெற்றியின் விளிம்பு ஒரு சிறு அளவுக்கு உட்பட்டதே!