‘தக்காளி.. வெங்காயம், உருளக்கெழங்கு, மெளகா.., பூடு..’ வாய்க்குள் முணுமுணுத்தபடியே சின்னத் தாளில் விலையை மட்டும் எழுதிக் கொண்டே வந்த ஆறுமுகம் பூண்டில் நிறுத்தி விட்டு செல்லத்தை நிமிர்ந்து பார்த்தான்.
“இன்னிக்கு பாருங்க. வீட்டுக்காரம்மாக்கு ஒடம்பு சரியில்ல. சனிக்கிழமையானா டீச்சரம்மாக்கு பூண்டு வேணுமேன்னு அவ பொலம்புனதைக் கேட்டுட்டு, காந்திதான் உரிச்சுக் கொடுத்துச்சு. ரெண்டே பாக்கெட்தான் இன்னிக்கு. ஒளிச்சுல்லா வச்சிருந்தேன் ஒண்ண உங்களுக்கின்னே” என்றான்.
“ஆஹா. காந்தி உரிச்சதா. நல்லாப் படிக்கிறாளா . . . → தொடர்ந்து படிக்க..