Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2016
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,417 முறை படிக்கப்பட்டுள்ளது!

எங்க ஏரியா உள்ள வராதே

  vandalur60066எங்க ஏரியா உள்ள வராதே… மனிதர்களை எச்சரிக்கும் விலங்குகள்!

பாதுகாப்பிற்கு முன்னுரிமை!

கடந்த வருடம் டெல்லி உயிரியல் பூங்காவில்,  வெள்ளைப்புலியை சுற்றுலாப் பயணிகள் தடுப்பு சுவருக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். தனது நண்பர்களுடன் வந்திருந்த ஹிமான்சு என்ற மாணவர்,  விஜய் என்ற  வெள்ளைப்புலி அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு விதிமுறைகளை மீறி தடுப்புச்சுவரை தாண்டி  சென்றுள்ளார். அப்போது தவறி ஆழமான அகழிக்குள் விழுந்தவரை, வெள்ளைப்புலி தூக்கிச் சென்றதில் அவர் உயிரிழந்தார்.  அந்த சம்பவம் அங்கிருந்த ஒருவரால் மொபைல் கேமராவில் பதிவுசெய்யப்பட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி, உலகமே அதிர்ச்சியில் உறைந்து நின்றது. இந்த சம்பவம் இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியது.

வண்டலூர் உயிரியல் பூங்கா

” 1985 ல் வண்டலூர் உயிரியல் பூங்கா தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு இந்தியாவின் உள்ள மற்ற வனவிலங்கு பூங்காக்களையும், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பூங்காக்களையும் பார்வையிட்டு, அதில் உள்ள நிறைகுறைகளை ஆய்வுசெய்து இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டது. பாதுகாப்பு, ஹைடெக் வசதிகள், பார்வையாளர்களின்  திருப்தி, வனவிலங்குகளின் பாதுகாப்பு இவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

vandalur60055புலி, சிங்கம் போன்ற ஆபத்து நிறைந்த விலங்குகளை பார்வையாளர்கள் நெருங்க முடியாது. ஒரு சிறிய தீவு போன்ற இடத்தில் ஓய்வு எடுப்பதற்கான திறந்தவெளி இருப்பிடம் இருக்கும். அதைச்சுற்றி 10 மீட்டர் அகலத்தில் அகழியும், 10 மீட்டர் உயரத்தில் தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்பக்கமாக 2 அடி உயரத்தில் சுற்றுச்சுவர். 10 அடி உயர கம்பிவலை என மிகவும் பாதுகாப்போடு விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.

ஒருவர் விழவேண்டும் என்று நினைத்து அனைத்தையும் தாண்டி வேண்டுமானால் அவர் விழமுடியுமே தவிர, யாரும் தவறிகூட அகழியில் விழ முடியாது” என்கிறார் வண்டலூர் உயிரியல் பூங்காவின் உதவி இயக்குனர் சுதாகரன்.

விலங்குகளிடம் இருந்து சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்?

டெல்லியில் அகழியில் விழுந்ததைப்போல ஒருவர் அகழியில் விழுந்தால், மேலே இருப்பவர்கள் கூச்சலிடுவதை முதலில் தவிர்க்க வேண்டும். கற்களை கொண்டு விலங்கின் மீது எறியக் கூடாது. இதனால் அதன் வேட்டை பண்பு தூண்டப்படுகின்றது. அப்போது அகழியில் விழுந்தவர் எங்கும் நகராமல் எவ்வித அசைவும் இல்லாமல் படுத்துக்கொண்டு இருக்கலாம்.

vandalurlion6001எல்லா வனவிலங்கு பூங்காக்களிலும் மயக்க ஊசி எப்போதும் தயார் நிலையில் இருக்கும். தகவல் வந்ததும் கெட்டாமைன், சைலசின் என்ற இரு மருந்துகளை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து விலங்குகளுக்கு செலுத்த வேண்டும். அந்த மருந்தை கலந்து தயார் நிலையில் வைக்கமுடியாது. மயக்க ஊசி செலுத்தினாலும் அமைதியான சூழல் இருந்தால்தான் அந்த மருந்து உடனடியாக வேலை செய்யும். அருகில் உள்ளவர்கள் கூச்சலிட்டால் அந்த மருந்து வேறு ஹார்மோன்களின் தூண்டுதலால் காலதாமதமாக செயல்படத் தொடங்கும்.

காட்டு விலங்குளானாலும் சரி, பூங்காவில் இருக்கும் விலங்கானாலும் சரி மனிதனை தாக்குவதை முடிந்தவரை தவிர்த்துவிட நினைக்கும். விலங்குகளுக்கென்று பாதுகாப்பு எல்லைக்கோடு இருக்கின்றது. அந்த கோட்டிற்குள் நாம் செல்லக்கூடாது. அதன் அருகே செல்லும் போது நம்மை தாக்கவருவதாக விலங்கு நினைத்துவிடும்.

யானைகள்

யானைகள் மந்தமான பார்வை உடையவை. அடிக்கும் கலரில் உடையணிந்து இருந்தால் பார்வைக்கு எளிதில் தெரிந்துவிடும். முடிந்தவரை உடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் யானையின் காதுகள் கூர்மையாக கேட்கும் திறன் கொண்டவை. மேடான பகுதிகளில் வேகமாக ஓடக்கூடியது. மோப்ப சக்தியும் யானைக்கு உண்டு. அதனால் காற்றின் திசையிலேயே ஓட வேண்டும். யானையிடம் ஒருவர் மாட்டிக் கொண்டால் சரிவான பகுதியை நோக்கிதான் ஓடவேண்டும். முடிந்தால் தனது உடையை கழட்டி எறிந்து விடலாம்.

சில விலங்குகள் அந்த உடையை பிடித்து வைத்துக் கொள்ளும். சிறுத்தை மரத்தில் ஏறும் தன்மை உடையவை. சிறுத்தையிடம் சிக்கினால் மரத்தில் ஏறக்கூடாது. நீளமான கம்பு வைத்துக்கொள்ளலாம். தனது உருவத்தை பெரிதுபடுத்தி காட்டலாம். இதெல்லாம் 100 சதவீதம் பலன் கொடுக்கும் என்று உறுதியாக கூறமுடியாது. விலங்குகளிடம் இப்படி செய்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்று எவ்வித வரையரையும் கிடையாது. ஆயிரம் முறை ஒரே செய்கையை செய்யும் அந்த விலங்குகள், ஆயிரத்தி ஒன்றாவது முறையும் அதையே செய்யும் என்று சொல்லமுடியாது. சுயகட்டுப்பாடு என்பது மனிதனுக்கு மிக அவசியம்.

உயிரியல் பூங்காவில் செய்யக்கூடாதவை என்னென்ன?

  • பூங்காவிற்கு வருபவர்கள் விலங்குகளை சீண்டவோ, உணவு வழங்கவோ, துன்புறுத்தவோ கூடாது.
  • புகை, மது, வெற்றிலைப்பாக்கு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • வளர்ப்பு பிராணிகளை உள்ளே கொண்டுவரக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
  • விசில் அடிப்பது, கூச்சலிடுவது, செல்போனில் சத்தமாக (லவ்வு ஸ்பீக்கர்) பாட்டு கேட்டுக்கொண்டே செல்லது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.  பார்வையாளர்கள் அவர்களின் எல்லையை தாண்டக் கூடாது. அருகே போய் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. கம்பி வேலிக்குள் கையை விடக் கூடாது.
  • சிங்கம், புலி போன்ற விலங்குகள் என்றால் உறும வேண்டும்… பாய வேண்டும்… என்று கற்பனை செய்து கொண்டு வருகின்றார்கள். பார்வையாளர்களின் கற்பனைக்கு தகுந்தவாறு அந்த விலங்கு இல்லாமல் போனால் அவற்றை நோக்கி சிலர் உறுமுகின்றார்கள். சிலர் சத்தமிட்டு அந்த விலங்குகள் போன்று கூச்சலிடுகின்றார்கள்.
  • முதலை, ஆமை போன்ற சில விலங்குகள் அமைதியாக இருந்தால், உயிரோடு இருக்கின்றதா என கல்வீசி சிலர் சோதித்துப்பார்ப்பார்கள். இவை விலங்குகளை துன்புறுத்தும் செயல்.
  • அவர்களின் கற்பனையை விலங்குகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஓய்வு எடுப்பது, நடப்பது, விளையாடுவது, தூங்குவது போன்றவையும் விலங்குகளின் இயல்பான செயல்கள்தான். அதையும் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். தூங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தை தொந்தரவு செய்யக்கூடாது.
  • சர்க்கஸில் உள்ள விலங்குகளையும், பூங்காக்களில் உள்ள விலங்குகளின் தன்மையும் ஒப்பிடக் கூடாது. சர்க்கஸ் விலங்குகள் காட்சி முடிந்ததும் போய் ஓய்வெடுத்துக் கொள்ளும்.  குளிர் ரத்த பிராணிகளின் செயல்பாடுகள் மந்தமாக இருக்கும். அமைதியாக படுத்துக்கொண்டிருப்பது அதன் இயல்பான தன்மை. அதைத்தான் ரசிக்க வேண்டும்.
  • சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் கோடையை கொண்டாடுகின்றார்கள். சென்னை குட்டீஸ்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. உங்களின் துறுதுறு குழந்தைகளை கட்டுப்படுத்தி பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறதா? உங்களுக்காகவே இந்த கட்டுரை…

செய்ய வேண்டியவை

அவசர கோலத்தில் ஓரிரு மணி நேரத்தில் சுற்றி பார்த்துவிட்டு செல்லும் நோக்கத்தோடு வண்டலூர் பூங்காவிற்கு வரக்கூடாது. நாள் முழுக்க செலவிட்டால்தான் பயனுள்ளதாக இருக்கும்.  உணவுப் பொருட்கள் கொண்டுவர உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தேவையான அளவு குடிக்க தண்ணீர் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

ஆங்காங்கே இளைப்பாற, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

மருந்து சாப்பிடுபவர்கள் தங்கள் மருந்து பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். அவசர உதவிக்கான தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.