சுவனத்திற்கு செல்ல மிகவும் முக்கியமான காரணிகளில் ஒன்று தான் ஈமான் ஆகும். மற்ற எந்த செயல்கள் செய்தாலும் ஈமான் இல்லை என்றால் – முஃமினாக இல்லை என்றால் நிச்சயமாக சுவர்க்கம் தடையாக அமையும். இந்த உலகத்தை அல்லாஹ் ஒரு அலங்காரமாக – ஒரு சோதனையாக அமைத்து உள்ளான். இந்த உலகிற்காக நம்மை போட்டி போட சொல்லவில்லை .. மாறாக மகத்தான வெற்றி என்று சுவர்க்கத்தை குறிப்பிடுகிறான். ஆக அல்லாஹ் மறைவான அந்த சுவர்க்கத்திற்காக போட்டி போடச் சொல்கிறான். இந்த உலகத்தை நபிகளார் அவர்கள் ஒரு பிரயானியாக பாவிக்கச் சொன்னார்கள். இந்த உலகம் என்பது நிலையான அந்த சுவாகத்தை அடைவதை விட்டும் நம்மை தடுத்து விடும். எனவே நமது இலக்கு என்பது சுவர்க்கத்தை அடையவதற்காக அமைய வேண்டும். மேலும் சுவர்க்கம் என்பது சிரமங்களால் சூழப்பட்டடுள்ளது. கஸ்டம் இல்லாமல் சுவர்க்கத்தை அடைய முடியாது. அதற்கான காரணிகளில் மிகவும் முக்கியமானது ஈமானாகும். அதாவது மறைவானவற்றை நம்மக் கூடியவர்கள் தான் ஈமான் கொண்டவர்களாவர். சுவர்க்கம் என்பது நிராகரிப்பவர்களுக்கு அல்லாஹ் ஹராமிக்கி விட்டான். ஈமான் என்பது மிகவும் பெருமதியானதாகும். எனவே தான் மறுமையில் துளியேனும் ஈமான் கொண்டவாகள் சுவர்க்கம் புகுவார்கள். மேலும் இதுபற்றி மேலும் அறிய ஷேக் அஸஹர் ஸீலானி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்…