Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2016
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,374 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்

inverter14 மின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்: விரிவான அலசல்

மின் வெட்டு தமிழகம் முழுதும் பல வருடங்களாக தீராத ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

தற்போது வரலாறு காணாத அளவு மின்வெட்டு படு மோசமாய் உள்ளது. சென்னையில் செவ்வாய் கிழமை அனைத்து நிறுவனங்களுக்கும் “மின் விடுமுறை” மார்ச் மாதம் முதல் அமுல் படுத்தியதால், பல நிறுவனங்கள் செவ்வாய் அன்று அலுவலகம் விடுமுறை விட்டு ஞாயிறு வேலை நாள் ஆக்கியுள்ளனர். வாரம் இரு நாள் விடுமுறை விடும் நிறுவனங்கள் செவ்வாய் (மின் தடைக்காக) மற்றும் ஞாயிறு விடுமுறை அறிவித்துள்ளன.

வீட்டில் கரண்ட் இன்றி எப்படி சமாளிப்பது? இங்கு தான் வருகிறது இன்வர்டர் !

எங்கள் குழந்தை சின்னவளாக இருந்த போது பல முறை இரவில் கரன்ட் போய் விடும். அப்போது குழந்தையும் தூங்காமல் நாமும் தூங்க முடியாமல் செம கடுப்பாய் இருக்கும். சில நேரம் அந்த ஒரு நாள் எங்காவது அருகில் இருக்கும் லாட்ஜில் ரூம் போட்டு தூங்கலாமா என்று கூட யோசித்துள்ளேன். (ஒரு முறையும் செய்ததில்லை).

சொந்த வீடு கட்டி குடியேறும் போது செலவோடு செலவாக inverter வாங்கி விட்டோம். வீடு கட்டும் போதே இதற்காக வயரிங் செய்ய சொல்லியாகி விட்டது. Inverter நிறுவன ஆட்களும் ஒரு முறை வந்து பார்த்து Inverter எங்கு வரும், வயரிங் எப்படி தேவை என சொல்லி சென்றனர். ஆறு வருஷத்துக்கு முன் புது வீடு போகும் போதே இன்வர்டர் உடன் எங்கள் வாழ்க்கை துவங்கியது.

இன்வர்ட்டர் குறித்த அனுபவங்களை உங்களுக்கும் உதவும் என்பதால் இங்கு பகிர்கிறேன்:

batteryஇன்வர்டரில் முக்கியமானவை இரண்டு: ஒன்று இன்வர்டர் என்கிற மெஷின். அடுத்தது அதன் பேட்டரி. இவை இரண்டும் சேர்ந்து கிட்டத்தட்ட இருபதாயிரம் ரூபாய் போல் ஆகும். இது மூன்று மின் விசிறி மற்றும் மூன்று டியூப் லைட் எட்டு மணி நேரம் ஓட உதவும் என்கிறார்கள். ஒரு டியூப் மற்றும் ஒரு மின் விசிறி வரை மட்டும் என்றால் விலை இன்னும் குறைவாக 10,000 to 15,000 ருபாய் ஆகும் என நினைக்கிறேன்.

 “மூன்று மின் விசிறி மற்றும் மூன்று டியூப் லைட்” என்று சொன்னாலும், வீட்டில் உள்ள அனைத்து மின் விசிறி மற்றும் டியூப் லைட்கள் எரிகிற மாதிரி நாங்கள் செய்து விட்டோம். அதாவது அவர்கள் அனைத்து இடங்களுக்கும் கனக்ஷன் தந்து விடுவார்கள். நாம் எங்கு தேவையோ அதை மட்டும் உபயோகித்து கொள்ளலாம். இதனால் கரண்ட் இல்லா விட்டாலும் எந்த ரூமுக்கு வேண்டுமானாலும் வழக்கம் போல் போய் வரலாம். கரண்ட் இல்லாமல், இன்வர்டர் ஓடுகிறது என்றால் ஒரு மின்விசிறி மற்றும் ஒரு டியூப் லைட் மட்டும் ஓடுகிற மாதிரி தான் நாங்கள் பார்த்து கொள்வோம். தேவையின்றி இன்வர்டரை அதிகம் உபயோகிப்பதில்லை.

இன்வர்டர் டிவிக்கும் கூட கனக்ஷன் தந்து விடலாம். லோக்கல் கேபிள் டிவி எனில் அங்கு கரண்ட் இல்லை எனில் உங்கள் வீட்டில் இன்வர்டர் இருந்தாலும் நிகழ்ச்சி வராது. ஆனால் டிஷ் அல்லது சண் டைரக்ட் இருந்தால் கரண்ட் இல்லா விட்டாலும் டிவி பார்க்க முடியும். சீரியல் பார்ப்போருக்கு டென்ஷன் இல்லை பாருங்க :)))

இந்த இருபதாயிரம் ருபாய் ரேஞ்சில் உள்ள இன்வர்டரில் மிக்சி, ஹீட்டர், ஏசி போன்றவை ஓட்ட முடியாது. அதற்கு அநேகமாய் இன்னும் அதிக சக்தி உள்ள இன்வர்டர் தேவை அல்லது ஜெனரேட்டர் இருந்தால் தான் முடியும். இந்த இன்வர்டரில் பேன், டியூப் லைட், கணினி, டிவி இவை மட்டும் தான் இயங்கும். எந்தெந்த இடங்களில் ஏ.சி அல்லது ஹீட்டர் இருக்கோ அந்த லைன் முழுதுக்கும் இன்வர்டர் கனக்ஷன் தர மாட்டார்கள். உதாரணமாய் பாத் ரூமில் ஹீட்டர் உள்ளதால், அந்த ரூம் முழுதும் இன்வர்டர் கனக்ஷன் இருக்காது. இதனால் ஹீட்டர் மட்டுமின்றி, பாத் ரூம் விளக்குகளும் எப்போதும் இன்வர்டர் மூலம் எரியாது !

நடு இரவில் கரண்ட் போய் விட்டால், கரண்ட் போனதே நமக்கு தெரியவே தெரியாது. எப்போது கரண்ட் போனது, எப்போது திரும்ப வந்தது என தெரியாமல் நிம்மதியாக தூங்கலாம். இது தான் இன்வர்டரின் மூலம் கிடைக்கும் பெரிய பயன் என்பேன். அடுத்து பரீட்சைக்கு தயார் செய்யும் குழந்தைகள், கரண்ட் இல்லா விடில் சிரமமின்றி படிக்க முடியும். ( நாம் எல்லாம் பள்ளியில் படித்த போது மெழுகு வர்த்தி அல்லது சிம்னி விளக்கில் படிப்போம்…..)

ஒரு முறை இன்வர்டர் வாங்கினால் அடுத்தடுத்து வரும் செலவு குறித்து பார்ப்போம்:

இன்வர்டரில் உள்ள பேட்டரிக்கு ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். நீங்கள் இன்வர்டர் வாங்கும் நிறுவனத்துக்கு சொன்னாலே வந்து ஊற்றி விடுவார்கள். வரும் பையனுக்கு அவன் வந்து போக பெட்ரோல் செலவுக்கென மட்டும் ஐமபது ருபாய் தர வேண்டும். உங்களுக்கு ரெண்டு மாதத்துக்கு ஒரு முறை ஐம்பது ரூபாய் செலவு. இது மட்டும் தான் தொடர்ந்து வரும் recurring expenditutre.

இதில் உள்ள பேட்டரி ரெண்டு அல்லது மூன்று வருடம் தான் வரும். பின் அதனை மாற்ற வேண்டும். இது தற்போதைய விலையில் எட்டாயிரம் வருகிறது. மேலும் நாம் வாங்கும் இன்வர்டர் instrument ஐந்து அல்லது ஆறு வருடம் தான் உழைக்கும். பின் மாற்ற வேண்டும். இது பத்தாயிரம் ரூபாய் ஆகும்.

ஆக ரெண்டு அல்லது மூன்று வருடத்துக்கு ஒரு முறை எட்டாயிரம் (பேட்டரி ); ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பத்தாயிரம் ரூபாய் (புது இன்வர்டர்) ஆகிய செலவுகளுக்கு நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். புதுசாய் இன்வர்டர் விற்பனை செய்வோர் இதனை உங்களிடம் சொல்ல மாட்டார்கள். நாம் சில வருடங்கள் இன்வர்டருக்கு பழகி விட்டால், பின், மூக்கால் சற்று அழுதவாறே இந்த செலவு செய்ய தயார் ஆகி விடுவோம்.

நாங்கள் இன்வர்டர் வாங்கியது மைக்ரோடெக் (Microtech ) பிராண்ட். இதன் செயல்பாடு ஓகே. பெரிய அளவு பிரச்சனை இல்லை. மற்ற நிறுவன இன்வர்டர்கள் எப்படி வேலை செய்கிறது என தெரியவில்லை. பேட்டரி வாங்குவதானால் Exide போன்ற நல்ல பேட்டரியாக வாங்க வேண்டும்.

இன்வர்டர் வாங்கும் போது மறக்காமல் கவனிக்க வேண்டியவை:

1 . டியூபுலர் பேட்டரி வாங்குவது நலம். சற்று விலை அதிகம் எனினும் அதிக வருடங்கள் வரும். இதற்கு Replacement வாரண்டி ஐந்து வருடம் போல் தருகிறார்கள் !

2 . இன்வர்டர் & பேட்டரி விலை மற்றும் வாரண்டி நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். மூன்று நான்கு இடங்களில் விசாரித்து விட்டு பெஸ்ட் டீல் எதுவோ அதை பார்த்து வாங்குங்கள்

3 . கணினி உள்ளிட்ட இடங்களுக்கு கனக்ஷன் தந்து விட்டதா என பாருங்கள். எங்களுக்கு கணினிக்கு கனக்ஷன் முதலில் தரலை. சில ஆண்டுகளுக்கு பின் அதை தனி வேலையாக செய்ய வேண்டியதாயிற்று !

4 . வாங்கிய பின் ஓரிரு மாதத்துக்கு ஒரு முறை பேட்டரிக்கு “ஆசிட் ” மறக்காமல் ஊற்றவும். இல்லா விடில் லைப் அதிகம் வராது.

5. இன்வர்ட்டர் மற்றும் பேட்டரி இரண்டும் ஒரே இடத்தில வாங்குவதே நல்லது. வெவ்வேறு இடம் என்றால், ரிப்பேர் வரும்போது ஒவ்வொருவரும் மற்றவர் மேல் குறை சொல்வார்கள். ரிப்பேர் சரியாகாது.
**********************************
ஐந்து வருடங்களுக்கு முன் நாங்கள் இன்வர்டர் வாங்கிய போது இரவில் தெரு முழுக்க கரண்ட் இல்லாத போது, எங்கள் வீட்டில் மட்டும் லைட் எரிவது வித்யாசமாக தெரியும். இப்போது தெருவில் பாதி வீடுகளில் இன்வர்டர் உள்ளது !! எங்களுக்கு சர்வீசுக்கு வரும் ஆட்களே இன்வர்டருக்கு டிமாண்ட் மிக அதிகமாகி விட்டது என்கின்றனர். எல்லாம் ஆற்காட்டார் மற்றும் அம்மா மகிமை !

இந்த பதிவின் பின்னூட்டமாக ராமலட்சுமி அவர்கள் சொன்னதை இங்கேயே பகிர்ந்திட விரும்புகிறேன் (சிலருக்கு கமன்டுகள் வாசிக்கும் பழக்கம் இருப்பதில்லை. இந்த தகவல் அனைவருக்கும் சேர, இங்கேயே பகிர்கிறேன் ):

திருமதி. ராமலட்சுமி

 எனது அனுபவத்தைப் பகிர்வது சிலருக்கு உபயோகப்படலாமென எண்ணுகிறேன். 5 வருடங்களாக APC BI1000I உபயோகிக்கிறோம். அப்போது 30 K ஆயிற்று. 4 ஃபேன், லைட் மற்றும் மிக்ஸி க்ரைண்டர் என 5 ஆம்ப் எல்லாம் வேலை செய்யும்.

நமது எல்லா 5 ஆம்ப் இணைப்புகளுக்கும் இன்வெர்டருடன் இணைப்புக் கொடுத்து விடுவார்கள். 15 ஆம்ப்பில் இயங்கக்கூடிய கீசர், ஏசி, மைக்ரோவேவ் மட்டும் உபயோகிக்க முடியாது.

முடிந்தவரை குறைந்தபட்சமாகவே உபயோகிப்போம். டாடா ஸ்கை என்பதால் டிவி தடைபடாதென்றாலும் ப்ளாஸ்மா மிக அதிகமாக மின்சாரத்தை இழுப்பதால், லோகல் கேபிளில் ஒளிபரப்பு இருந்தால் இன்னொரு டிவியில் முக்கிய செய்தி என்றால் மட்டும் பார்ப்பது வழக்கம்.

முக்கியமாக நான் பகிர்ந்திட விரும்புவது:

1. AMC (வருடப் பராமரிப்பு ஒப்பந்தம்) எடுப்பது சாலச் சிறந்தது. இதனால் வாங்கிய 2 வருடத்தில் ஃபேனில் கோளாறு வந்த செயலிழந்தபோது புதியது மாற்றித் தந்தார்கள். இல்லையெனில் தனியாக 12K கொடுக்க நேர்ந்திருக்கும்.

2. ஃப்ளாட்களில் வசிப்பவர்கள் ஹாலில் அல்லது பெட்ரூமில் வைக்க நேரலாம். இதிலிருந்து சிலசமயங்களில் கசிகிற அமிலப் புகை உடல்நலத்துக்கு மிகக் கேடு. இந்தப் பிரச்சனை முதலிரண்டு வருடம் இடையிடையே ஏற்பட அதன் பிறகு பராமரிப்பே தேவைப்படாத Exide invasafe 400-க்கு மாறி விட்டோம். 2 பாட்டரிகள் வாங்க வேண்டிவரும். விலை சற்று அதிகமானாலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என்பதால் இந்தப் பரிந்துரையை பரீசிலிக்கலாம். இரண்டரை வருடங்கள் வரை வருகின்றன (பெங்களூரில் அதிகமாய் மின் தடை இல்லாததால்).
********************
மின் வெட்டால் மிக அவதி படுகிறீர்கள் என்றால், மேலே சொன்ன செலவுகளுக்கு ஓகே என்றால், இன்வர்டர் வாங்குவது பற்றி நிச்சயம் யோசியுங்கள் !