Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2016
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,232 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாவீரன் நெப்போலியன்

napoalianபிரான்ஸின் ஒதுங்கிய பகுதியில் இருந்த கார்ஸிகா என்ற ஒரு தீவில் பிறந்தவன் நெப்போலியன் போனவெர்ட், ஓர் எளிய போர்வீரனின் மகன். மிக மிக எளிமையான ஏழ்மையான குடும்பப் பின்னணியில் அவன் பிறந்திருந்தான். சிறுவனாக இருந்தபோது ஓர் இராணுவப் பள்ளியின் முன்னால் ஒரு பெண்மணி குழந்தைகளுக்குத் தேவைப்படும் திண்பண்டக் கடை ஒன்றை நடத்தி வந்தாள்.  வளமான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் அந்தக் கடைக்குச் சென்று விரும்பியதை வாங்கித் தின்றுகொண்டிருந்தார்கள். வாங்கித்தின்ன எந்த வசதியும் இல்லாத நெப்போலியன் மற்றவர்களை வேடிக்கைபார்த்து ஏங்கியபடி கடையின் முன்னால் இருப்பார். பரிதாபப்பட்டு அந்தக் கடைக்காரப் பெண்மணி அவர் தின்பதற்கென்று அவ்வப்போது எதையாவது கொடுப்பது வழக்கம்.  அவனும் அதைப் பெற்றுக் கொண்டு தின்பான்.

அந்தக் கடைக்காரப் பெண்மணி ஒருநாள் நெப்போலி யனிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள்.  “தம்பி, நீ படிச்சு என்ன வேலைக்குப் போகப் போகிறாய்?” அதற்கு அவன் உடனடியாகப் பதில் சொன்னான்; “நான், பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாகப் போகிறேன்!” அந்தப் பெண்மணிக்குச் சிரிப்புத்தாள முடியவில்லை.  அடக்கிக் கொண்டே மீண்டும் கேட்டாள். “நீ சக்கரவர்த்தியானால் என்னை வந்து பார்ப்பாயா?”, “கண்டிப்பாக தவறாமல் வந்து பார்ப்பேன்!” அவன் பதில் சொன்னான்.

அந்தப் பெண்மணி வியப்புடன் சிரித்ததற்குக் காரணம் இருந்தது.  பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சக்கரவர்த்தியாக முடியும். அதுதான் அன்றைய உலகின் நடை முறை வழக்கம். அதை மீறுவது எந்த வகையிலும் எவருக்கும் சாத்தியமில்லை. ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவே அந்தப் பெண்மணி கருதினாள்.

நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை பிரெஞ்சுக்காரரான எமில் லூட்விக் எழுதியிருக் கிறார்கள். அதில் அவனுடைய இயல்பான பழக்கத்தை அவர் குறிப்பிடுவார்.  இராணுவம், போர்முறை பற்றிய புத்தகங்களை நெப்போ லியன் ஓயாமல் படித்துக் கொண்டிருப்பதைப் குறிப்பிட்டுச் சொல்வார். நெப்போலியன். தன்னுடைய மனவெளியில் போர்க்களங்களை உருவாக்கிப் போரிடும் முறைகளைக் கற்பனை யில் வடிவப்படுத்திக் கொண்டே இருப்பான். அந்தப் பயிற்சிதான் அவனை எல்லாப் போர் முனைகளிலும் வெற்றி பெறச் செய்தது. அதனாலேயே பின்னாளில் நெப்போலியன் சொன்னார். “என்னுடைய அகராதியில் முடியாது என்ற வார்த்தைக்கு இடமில்லை” அந்த அளவிற்கு நெப்போலியனுக்குத் தன்னுடைய முயற்சிகளில் தன்னம் பிக்கை இருந்தது.

பின்னாளில் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் வம்சாவழி வரலாற்றை மாற்றி அமைத்ததோடு மட்டுமல்லாமல் உலக வரலாற்றின் திசைப்போக்கையும் முழுக்க முழுக்க மாற்றி அமைத்தான்.

நெப்போலியன் பிரான்ஸின் சக்கரவர்த்தி யான பிறகு, தன்னுடைய வாக்குறுதியை நினைவில் வைத்திருந்தான்.  அந்தக் கடைக்காரப் பெண்மணியைத் தேடி அவன் கல்வி பயின்ற இராணுவப்பள்ளி இருந்த ஊருக்குச் சென்றான். அந்தப் பெண்மணி முதுமைப் பருவத்தில் அதே கடையை அப்படியே நடத்திக் கொண்டிந்தாள். நெப்போலியனை அவள் அடியோடு மறந்து போயிருந்தாள்.

பிரான்ஸின் சக்கரவர்த்தி அவளைப் பார்க்க வருவதாக அவளிடம் தெரிவித்தபோது அவள் பயந்து பதைபதைத்துப் போனாள்.  பரபரப்புடன் அவள் காத்துக் கொண்டிருந்தாள்.

நெப்போலியன் அந்தப் பெண்மணியைச் சந்தித்துத் தன்னை நினைவிருக்கிறதா என்று கேட்டான்.  பார்வை மங்கிய அந்தப் பெண்மணி அவனை மறந்து போய்விட்டதாகச் சொன்னாள்.  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டும் அவளுக்கும் அவளுடைய குடும்பத்தினருக்கும்

தேவைப்பட்டதைச் செய்தான். இது, நெப்போலியனின் வாழ்க்கை நிகழ்வு.

மாமனிதனாக உலக வரலாற்றில் இடம் பெற்றான் நெப்போலியன்.

உலக அளவில் புகழ்பெற்ற மாமனிதர் களின் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் ஏராளமாகவே உள்ளன.  வாழ்க்கையில் உயர் வடைய வேண்டும் என்று உண்மையிலேயே விருப்பம் உடையவர்கள் அவரவர் தளங்களில் இலக்குகளை அடைவது இயல்பு. மனித மனம் அளவற்ற ஆற்றலை உடையது.  அதை எந்த அளவிற்கு ஒருவர் வெளிப்படுத்துகிறாரோ அந்த அளவிற்கு அவர் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்.