Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2015
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,939 முறை படிக்கப்பட்டுள்ளது!

கர்ப்பப்பை இறக்கம் !

சுகப்பிரசவமும் கர்ப்பப்பை இறக்கமும்

இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்…

சுகப்பிரசவத்தில் ஏற்படும் பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.

பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும். அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். அடிக்கடி முதுகு வலியும் இருக்கும்.

முதல் மற்றும் இரண்டாவது நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும்.

3வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. இந்நிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி, சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.

இது தவிர சிலருக்கு பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம். இது பரம்பரையாகத் தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது, முதல் நிலை பாதிப்பாக இருப்பின், ‘ஸ்லிங்’ எனப்படுகிற அறுவைசிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது… இவையெல்லாம் பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள் ஆகும்.

*‘‘பிரசவத்துக்குப் பிறகு இடுப்பு எலும்புத் தசைகள் தளர்ந்து போகும். சுகப்பிரசவத்தின் போது, ரொம்பவும் சிரமப்பட்டு, குழந்தையை வெளியேத்தறது, கஷ்டமான பிரசவம், ஆயுதப் பிரசவம்… இதெல்லாம் இடுப்பெலும்பு தசைகளை லூசாக்கும். பிரசவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யாம இருக்கிறது, எடை தூக்கறது, ரொம்பவும் உடம்பை வருத்தற மாதிரியான வேலைகளைச் செய்யறது மூலமாகவும் தசைகள் தளர்ந்து, கர்ப்பப்பை தன்னோட இடத்துலேர்ந்து இறங்கிடும்.

*கர்ப்பப்பை இறக்கம் ஆரம்பக் கட்டத்துல இருந்தா சரி செய்யறது சுலபம். வலை மாதிரியான ஒன்றோட ஒரு முனையை கர்ப்பப்பையோட பின் பக்கத்துலயும்,இன்னொரு முனையை இடுப்பெலும்புலயும் சேர்த்து தச்சிட்டா, கர்ப்பப்பை தன்னோட இயல்பான இடத்துக்கே வந்துடும். இந்த சிகிச்சைக்குப் பிறகு எடை தூக்காம இருக்க வேண்டியது முக்கியம்.

கர்ப்பப்பை இறக்கத்தை ஆரம்பத்துலேயே கவனிக்காம விட்டா அது தனக்கு பக்கத்துல உள்ள மூத்திரப் பை, மலப்பைகளையும் சேர்த்து இழுக்க ஆரம்பிக்கும். சிறுநீர் பை இறங்கத் தொடங்கினா அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வும், முழுமையா சிறுநீரை வெளியேத்தாத உணர்வும் ஏற்படும். தவிர அந்தப் பைக்குள்ள எப்போதும் சிறுநீர் தங்கி இன்ஃபெக்ஷன் உண்டாக்கும்.

*எப்போதும் சிறுநீர் தங்கி, இன்ஃபெக்ஷனை உண்டாக்கும். அது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தலாம். இதே மாதிரிதான் மலப்பை இறக்கத்துலயும் பிரச்னைகள் வரும். கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யறப்ப, சிறுநீர் பை, மலப் பைகளையும் சேர்த்து தூக்கி வச்சுத் தைக்க வேண்டியிருக்கும்.

*எதையுமே கவனிக்காம விட்டா, பிரச்னை தீவிரமாகி, கர்ப்பப் பையையே அகற்ற வேண்டி வரலாம்.பிரசவமான பெண்களுக்கு மட்டுமில்லாம, கல்யாணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கலாம். அவங்களுக்கு கொலாஜன் திசுக்கள்
பலவீனமாகி, அதன் விளைவா, கர்ப்பப்பை இறங்கலாம். சிலருக்கு பிறவியிலேயே தசைகள் பலவீனமா இருந்து, இப்படி நடக்கலாம். கர்ப்பப்பை இறக்கத்தை இப்ப லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமா ரொம்ப சுலபமா சரி செய்ய முடியும்’’ என்கிறார் மாலா ராஜ்.
கருப்பை இருக்கும் இடத்தில் இல்லாமல், சற்று அல்லது அதிகமாக கீழிறங்கி இருக்கும் நிலையே கருப்பை இறக்கம். இது பிரசவ கால அஜாக்கிரதையால் பெரும்பாலும் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பை என்பது ஒரு உள்ளுருப்பாகும். இது பெரும்பாலும் வெளியே வருவதில்லை. கருப்பையை முக்கிய தசைகள் கீழிருந்து தாங்கிக் கொண்டு இருக்கின்றன. கருப்பை சரியான இடத்தில் பத்திரமாக இருக்கும் வகையில், பல்வேறு அரண்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
பல காரணங்களால், கருப்பையை தாங்கிக் கொண்டிருக்கும் தசைகள் தளர்வடைந்தாலோ, கருப்பை அரண்கள் வலுவிழந்தாலோ, உள்ளுருப்பாக இருக்கும் கருப்பை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்குகிறது.
இதுவே கருப்பை இறக்கம் எனப்படும். இது நான்கு வகைகளில் அமைகிறது.

  1. எப்போதாவது முக்கும் போதும், இரும்பும் போதும், தும்பும் போதும் சிறிதளவு அடி இறங்குவது.
  2. மற்றொன்று நாக்கின் நுனி போல எப்போதுமே ஓர் சதைப் பகுதி அடியில் தோன்றும். இந்த நிலையில் படுத்துக் கொள்ளும் போது அது உள்ளே சென்று விடும்.
  3. மூன்றாவதாக, சற்று வெளியில் தொங்கும் சதையானது,எப்போதுமே வெளியே தொங்கியவாறு இருத்தல். இந்த நிலையில், சிறுநீர் கழிக்கவும் சிக்கல் ஏற்படும்.
  4. நான்காவது நிலைதான் மிகவும் மோசமான நிலையாகும். இதில், கருப்பை வெளியே தொங்கும்.

இதனால் பெண்களுக்கு பல சிரமங்கள் ஏற்படும். இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் போது, பெண்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லது. முதல் கட்டத்திலேயே பெண்கள் மருத்துவரை அணுகுவதால், சில தகுந்த உடற்பயிற்சிகள் மூலமாக சரி செய்யலாம் என்பது ஆறுதலான விஷயமாகும்.
யோனி வழியே வெளிவரும் கருப்பைகள்
‘‘சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் பாதிக்கிறது. நீண்டநேரம் வலியுடன் அவதி, கஷ்டப்பட்டு, முக்கி, குழந்தையை வெளித்தள்ளுவது, பிரசவத்துக்குப் பிறகு ஓய் வெடுக்காதது என இதற்குப்  பல காரணங்கள். பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல் வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத்  தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.

கருப்பை இறக்கம் (uterovaginal prolapse)என்பது வயதான பெண்களில் ஏற்படுகின்ற பொதுவான ஒரு பிரச்சனையாகும். இதன் போது கருப்பைப் பையானது பெண்ணின் யோனி வழியே கீழ் இறங்கும்.

கீழிறங்கிய கருப்பை பெண்ணின் பிறப்பு உறுப்பினுள்ளே (vagina)இருக்கலாம் அல்லது சற்று தீவிரமடையும் போது பெண்ணுறுப்பின் வெளியே கருப்பையின் ஒருபகுதி வெளியே வரலாம், இந்தப் பிரச்சனை தீவிரமடையும் போது கருப்பை முழுமையாக வெளியேறலாம்.

முற்று முழுதாக கீழிறங்கிய கருப்பை

இந்தப் நோயானது அதிகமான குழந்தைகளை சாதரணமாக பெற்று எடுத்தவர்களிலேயே பொதுவாக ஏற்படும். அதாவது சீசர் முறை மூலம் குழந்தைகளை பெற்று எடுத்தவர்களுக்கு
இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் குறைவு.

மேலும் அதிகமான குழந்தைகளைபிறப்பு வழியே பெற்றெடுக்கும் போது இந்த கருப்பை இறக்கம்
ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும். சிலவேளை இந்த கருப்பை இறக்கத்தோடு மூத்திரப்பையும்(blader) சேர்ந்து கீழ் இறங்கலாம். சில பெண்களுக்கு கருப்பையோடு குடலின் ஒரு பகுதியும் சேர்ந்து கீழ் இறங்கலாம்.

கருப்பையின் ஒரு பகுதியோடு சிறுகுடலின் ஒரு பகுதியும்இறங்கியுள்ளது

அரிதாக கருப்பை இறக்கம் இல்லாமல் மூத்திரப்பை மட்டும் கீழ் இறங்கலாம். இப்படி கருப்பை பை
இறக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் யோனி வழியே pessaryஎனப்படும் வளையங்களை
உட்செலுத்தி தற்காலிக தீர்வு வழங்கப்படலாம்.

தற்காலிக தீர்வு வழங்கும் வளையங்கள் பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன்
வேலையைக் காட்டத்தொடங்கும். அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெ ளியே வருகிற உணர்வு இருக்கும். கசிவும் அடிக்கடி இன்ஃபெக்ஷ னும் முதுகு வலியும் இருக்கும். முதல் மற்றும் இரண்டாவது நிலைகளில், இறங்கிய கர்ப்பப் பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும்.
3வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. இந்நிலையில் கர்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப்போகிற சிறு நீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி, சிறுநீரகங்களே பழுத டைவது போன்றவையும், மலச்சிக்கலும்,மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.

இது தவிர சிலருக்கு பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம். இது பரம்பரையாகத் தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது, முதல் நிலை பாதிப்பாக இருப்பின்,‘ஸ்லிங்’ எனப்படுகிற  அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது… இவையெல்லாம் பிரச்சினை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள்…’’

ஆனாலும் நிரந்தரமாக இந்த பாதிப்பில் இருந்து மீள வேண்டுமானால் சத்திர சிகிச்சை மூலம் கருப்பைப் பை நிரந்தரமாக அகற்றப் பட வேண்டும்.