Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,304 முறை படிக்கப்பட்டுள்ளது!

விபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்

இரண்டு சக்கர வாகனங்கள் என்றாலும் நான்கு சக்கர வாகனங்கள் என்றாலும் அவர்களது மிகப்பெரிய கவலை டிராபிக்ஜாம். 15 நிமிடங்களில் கடக்க வேண்டிய இடங்களை யெல்லாம் ஒன்றரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய நிலைமை.

அவசரமாக அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை. மோட்டார் கண்டுபிடித்த காலங்களில் வாகனத்தை அதிசயமாக மூக்கின் மீது விரல் வைத்து பார்த்த மக்கள் அதில் பயணம் செய்யவே பயபட்டார்கள். எங்கேயாவது மோதி விடுமோ? கவிழ்ந்து விடுமோ? என்ற அச்சம். விமானத்தில் செல்லவே பயப்பட்டார்கள். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,389 முறை படிக்கப்பட்டுள்ளது!

அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை

மருத்துவ தொழில்நுட்பங்களின் நூதன முறைகளை கையாளப்படுவது குறித்து ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக இதயநோய் சிகிச்சை முறையில் கணக்கிலடங்கா சாதனைகளை நிகழ்த்தி வருகிறது விஞ்ஞானம். முன்பெல்லாம் சாதாரண மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை என்றால்கூட மருத்துவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, சிகிச்சைக்குட்படுபவரின் நிலை, அதற்காகும் நாட்கள், உறவினர்களின் பதட்டம் இப்படியாகயிருந்த இவைகளெல்லாம் சாதாரணமாக தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதுபோல் ஆகிவிட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மக்களின் சிரமங்கள், பண விரயம், கால விரயம், பதட்டம், சிகிச்சை முறை கருவிகள் இவைகளை குறைத்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,875 முறை படிக்கப்பட்டுள்ளது!

பூகோளத்திற்கு நாடி பரிசோதனை

மனிதனின் உடல் உறுப்புகள் சரியாக இயங்குகிறதா? என்பதை அறிய பல்வேறு வகையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதயம் நன்றாக உள்ளதா? என்பதை அறிய இ.சி.ஜி மற்றும் மூளை மற்றும் பிற நரம்புகள் சரியாக வேலை செய்கிறதா? என்பதை அறிய இ.ஈ.ஜி மற்றும் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மனிதனுக்கு பல் வேறு பரிசோதனைகள் செய்யப்படுவது போல பூமிக்கும் அதன் `நாடி’த்துடிப்பு பற்றிய பரிசோதனை செய்யமுடியும்.

குளிர், கோடை, மழை காலம் இவைகளை பற்றி முன் அறிவிப்பு, மலேரியா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,334 முறை படிக்கப்பட்டுள்ளது!

காந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள்

காந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள்மனித சமுதாயத்தை நிலை குலையச் செய்யும் கொடிய நோய்கள் பல உள்ளன. இவை மனித சமுதாயத்திற்கு அவ்வப் போது பல சவால்களை எழுப்புகின்றன. தொழில் நுட்பங்கள் வளர வளர இவற்றின் சவால்கள் சாமர்த்தியமாக முறியடிக்கப்பட்டு வரப்படுகின்றன. இதற்காக பல மருத்துவ வல்லுனர்கள் தங்களது சீரிய ஆராய்ச்சிப்பணிகள் மூலம் மனித சமுதாயத்திற்கு பல தொண்டுகள் ஆற்றி வருகின்றனர். அம்மை, மலேரியா, காச நோய்கள் போன்ற கொடிய நோய்கள் பல மருத்துவர்களின் அயராத பணிகளால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,470 முறை படிக்கப்பட்டுள்ளது!

கலக்கல் கண்டுபிடிப்புகள்

எம்.பி.3 கண்ணாடிகள் எம்.பி.3 எனப்படும் இசை வடிவம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். கை அகல குறுந்தகட்டில் நூற்றுக்கணக் கான பாடல்கள், இசை மெட்டுகளை பதிவு செய்யும் வசதி கொண்டது. எம்.பி.3 (இத்தகைய எம்.பி.3 குறுந்தகடுகள் வந்த பிறகு ஆடியோ கேசட்டுகள் மற்றும் டேப்ரிக்கார்டர்கள் காணாமல் போய் விட்டன) எம்.பி.3 குறுந்த கடுகளை இயக்க ஒரு ‘பிளேயர்’ தேவைப்படும். வாக்மேன் கருவிகளில் கூட எம்.பி.3 தகடுகளை பயன்படுத்தும் கண்டு பிடிப்புகள் கூட வந்து விட்டன.

இதில் நவீன தயாரிப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,496 முறை படிக்கப்பட்டுள்ளது!

கம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’, என்பார்கள். ஒரு புறம் அதிநவீன மருத்துவ சிகிச்சை முறைகளால் மனித ஆயுட்காலம் நீடித்துக்கொண்டிருந்தாலும் மறுபுறம் புதுப்புது நோய்கள் மனித இனத்தை தாக்கிக்கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு காரணங்கள் 1) சுற்றுப்புற சூழல் மாற்றங்கள், 2) உணவு பழக்க வழக்கங்கள் போன்றவைமிக முக்கியமானதாகும்.

சாதாரணமாக நமக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் போது டாக்டரிடம் சென்று சிகிச்சை பெறுகிறோம். அப்போது கொடுக்கப்படும் ஊசி, மருந்துகள், மாத்திரைகள் நமது உடலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் சென்றடைகிறதா? . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,964 முறை படிக்கப்பட்டுள்ளது!

விமானங்களில் மென்பொருட்கள்

ரைட் சகோதரர்கள் முதன் முதலில் விமானத்தை கண்டுபிடித்தபோது அதில் இருந்த கருவிகள் அனைத்தையும் விமானியே இயக்கும் வகையில் இருந்தது. காலப்போக்கில் நவீன கண்டுபிடிப்புகள் வரத் தொடங்க… ஆகாய விமானமும் நவீனமயமானது. குறிப்பாக கம்ப்யூட்டர் கருவி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதை பெருமளவில் விமானங்களில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். விமானங்கள் ஓடுதளத்தில் இருந்து பறக்க தொடங்குவது முதல் தரை இறங்குவது வரை அனைத்து செயல்களும் கம்ப்யூட்டர் வழிகாட்டுதலில் அதன் கட்டுப்பாட்டில் விமானங்கள் இயங்குகிறது. நடுவானில் பறக்கும்போது ‘ஆட்டோ பைலட்’ என்ற வசதியை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,372 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூப்பர் விமானங்கள்

விமானப்பயணம் என்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதிகமான கட்டணம் காரணமாக விமானப்பயணம் என்பது சாமானியருக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள ‘விலை குறைப்பு’ நடவடிக்கை மூலம் குறைந்த கட்டணத்தில் விமான பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு நடுத்தர மற்றும் சாதாரண வர்க்கத்தினருக்கும் கிடைத்துள்ளது.

விமானப் பயணம் ஒரு சிலருக்கு திகில் நிறைந்ததாகவே இருக்கிறது. நடு வானில் பறந்து கொண்டிருக்கும் போது ஏதாவது ஆகிவிட்டால் என்ன ஆகுமோ? என்ற மனபயம் காரணமாக விமானத்தில் ஏற மறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,754 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்

தகவல் தொடர்பு துறையில் ‘இன்டர்நெட” எனப்படும் (இணையம் சார்ந்த) தொழில்நுட்பம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடிதங்கள், பேக்ஸ், தொலைபேசி மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டது போல் தற்போது இணைய தளங்கள் மூலம் தகவல்கள் பரிமாற்றம், மின் அஞ்சல்கள் அனுப்புதல், பெறுதல் போன்றவை அதிகரித்து வருகிறது.

ஒருவர் இன்டர்நெட் வசதிகளை அதற்கான மையங்களில் பெறலாம். அல்லது அலுவலகம், வீடுகளில் அதற்கான வசதிகளை செய்து கொள்ளலாம். இன்டர்நெட் இணைப்பை பெற டெலிபோன் இணைப்பு அவசியமாகும். தற்போது டெலிபோன் இணைப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,876 முறை படிக்கப்பட்டுள்ளது!

கார் தயாரிப்பில் சீனிக்கிழங்கு

கார் மற்றும் வாகனங்கள் இரும்பு மற்றும் அலுமினியம் போன்ற உலோகப் பொருட்கள் மூலமும் பிளாஸ்டிக் ரப்பர் போன்ற செயற்கை தயாரிப்புகள் மூலமும் தயாரிக்கப்படுகிறது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கையாக (மண்ணில்) மட்கிப் போகும் தன்மை கொண்டவை அல்ல. சில பிளாஸ்டிக் உதிரிப்பாகங்கள் இயற்கைக்கும் சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை.

இத்தகைய ஆபத்துகளில் இருந்து விலகி சுற்றுப்புற சூழலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாத பொருட்களைக் கொண்டு கார் மற்றும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,882 முறை படிக்கப்பட்டுள்ளது!

என்றும் இளமை

பரந்து விரிந்த இந்த உலகில் எல்லையே இல்லாதது எது என்று கேட்டால் – ‘மனிதனின் ஆசை”, என்பது பதிலாக வரக்கூடும். பிறந்ததில் இருந்து மரணத்தை சந்திக்கும் வரை ஆசைகளை தேடி மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான்.

மனித மனம் விசித்திரமானது. அதன் ஆசைகளும் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால், எல்லோருக்கும் பொதுவான ஆசை ஒரு சில இருக்கும். அது தான் – ‘என்றும் மாறாத இளமையுடன் நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும்.”

நவீன மருத்துவத்தின் மூலம் நோய்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,907 முறை படிக்கப்பட்டுள்ளது!

உங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்

எந்த ஒரு மனிதனுக்கும் தனிமை, அந்தரங்கம் என்பது இல்லாத அளவுக்கு ‘கண்காணிப்புகள்’ அதிகரித்துள்ளன. ‘பாதுகாப்பு’ என்ற காரணத்தில் தொடங்கிய கண்காணிப்புகள் இன்று பல்வேறு வடிவங்களில் உருமாறிவிட்டது. மனிதனைச் சுற்றி ஏராளமான ‘கேமிரா’ கண்கள், ‘சென்சார்’ கருவிகள் சூழ்ந்துள்ளன. வாகனத்தில் செல்லும்போது சாலை விதிகளை மீறினால் போதும்… ஏதோ ஒரு மூலையில் விழித்துக் கொண்டிருக்கும் ‘கேமிரா’ அதை படம் பிடித்து அபராதம் செலுத்த வைத்து விடும்.

இப்படி மனித இனத்தைச் சுற்றி இருக்கும் ‘சென்சார்’கள் மூலம் தனிமைக்கு ஆபத்து . . . → தொடர்ந்து படிக்க..