Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,214 முறை படிக்கப்பட்டுள்ளது!

உறக்கமும் நினைவாற்றலும்

இரவெல்லாம் கண்விழித்துப் படித்துக்கொண்டிருகிறான் மகன். “கொஞ்சநேரம் தூங்குப்பா! அப்புறம் படிக்கலாம்” என்று தாய் சொல்வது இயற்கை. தற்கால பாடத்திட்டத்தில் அதை மகன் மறுப்பதும் இயற்கைதான். ஆனால் தாயின் வேண்டுகோள் அறிவியல் பூர்வமாக உண்மையானதும் நேர்மையானதும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறக்கத்திற்கும் நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள். உறக்கநிலையில் உள்ள மூளைசெல்களில் எவ்வாறு நினைவாற்றலை மேம்படுத்தும் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை அந்த முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

அதாவது, உறக்கத்தின் விளைவாக செல்கள் அளவில் மாற்றங்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,713 முறை படிக்கப்பட்டுள்ளது!

கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்!

கோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ் இங்கே.

காலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு வரலாம். நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். இது சருமத்தையும் மென்மையாக வைத்திருக்க உதவும். வியர்வை நாற்றத்தைப் போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்துக் குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும். தினசரி ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடம்பும் தளதள வென்று இருக்கும். பேரீச்சம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 49,083 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்!

உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 உணவு பட்டியல் வருமாறு:

கீரை வகைகள்:

உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவற்றில் வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலிக் அமிலம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,961 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெருகிவரும் மனஅழுத்த மரணங்கள்!

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பி.பீ.ஓ, கே.பி.ஓ என்று நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும் இன்னொருபுறம் புதுப்புது நோய்களும் மனிதர்களை தாக்கத்தான் செய்கின்றன.

இந்த சின்ன விஷயம் கூட மனிதர்களை இந்த அளவுக்குப் பாதிக்குமா என்று சொல்லும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் பிரச்சினைகளுடனே மனிதர்கள் பயணம் செய்வதால் மன அழுத்தம் மனிதர்களை வெகுவாகப் பாதித்து வருகிறது.

இதிலும், இவ்வகையான நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் 24 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

மன அழுத்தம் நோய் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,905 முறை படிக்கப்பட்டுள்ளது!

சாத்துக்குடியின் மருத்துவக் குணங்கள் !

மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது.

தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.

பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,727 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன?

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,410 முறை படிக்கப்பட்டுள்ளது!

லாபம் தரும் புதினா விவசாயம்

புதினாச் செடிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் என்று கூறப்படுகிறது.

தமிழகச் சமையலில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இல்லாமல் பெரும்பாலான உணவு வகைகள் இல்லை. உடல் ஆரோக்கியத்துக்குச் சிறந்த புதினா இலைகள், நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரிமானம் இல்லாமை போன்ற உடல் கோளாறுகளுக்குச் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.புதினாவை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்தம் சுத்தமாகும்.தொண்டைக் கரகரப்பைப் போக்கும் பல்வேறு மருந்துகள், மிட்டாய்கள் போன்றவற்றில் புதினா எண்ணெய் (மின்ட்) பிரதான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,308 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு

நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு சாப்பிட்டால் போதும்

ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமானது என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதிய சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,274 முறை படிக்கப்பட்டுள்ளது!

நொறுங்கும் எலும்புகள் (ஆஸ்டியோபோரோசிஸ்)

நவம்பர் 20ம் தேதி ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ நாள், அதாவது, எலும்புகள் நொறுங்கும் நோயை தடுக்க விழிப்புணர்வூட்டும் நாள்.

ஆஸ்டியோபோரோசிஸ் பற்றி சில புள்ளிவிவரங்கள் நம்மை அதிர வைக்கும்.

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது கால்சியம் சத்தில்லாமல், எலும்புகள் தேய்ந்து, நொறுங்கி, எலும்பு முறிவு ஏற்படுத்துவது என்பதே.

35 வயதுக்கும் மேல் குறிப்பாக பெண்களுக்கு எலும்பு தேய ஆரம்பிக்கும். 50 வயதை தாண்டினால், இத்தைகைய நோய் தலைதூக்க ஆரம்பிக்கும். ஆனால் எல்லாருக்கும் வராது. மிக மோசமான நிலையில் தான் வரும். ஒரு நாளைக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,812 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிகரெட்டுக்கு நோ சொல்லுங்க!

வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டு, போய் ஒரு தம் அடித்துவிட்டு வரலாம் என்று எழுந்து செல்பவரா நீங்கள்? சற்றுப் பொறுங்கள். அதற்கு முன் இந்தக் கட்டுரையை படியுங்கள். சிகரெட் நுனியில் நீங்கள் பற்ற வைக்கும் தீ, நீங்கள் உங்களுக்கே வைத்துக்கொள்ளும் தீ என்பது புரியும்.

முதலில் சில புள்ளிவிவரங்கள்.

உலகம் முழுவதும் தற்போது 110 கோடி பேருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. 2025வாக்கில் இந்த எண்ணிக்கை 160 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் உலகில் 1 . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,151 முறை படிக்கப்பட்டுள்ளது!

கலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது?

எந்த விழாக்களானாலும் பார்ட்டியானாலும் சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர் பானங்கள் இடம் பெறாமல் இருப்பதில்லை. இந்த வண்ன திரவங்களால் உடலுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக அவற்றுள் அடங்கியுள்ள நச்சுப் பொருட்கள் உடலுக்கு கேடு செய்கின்றன என்ற விழிப்புணர்வாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

பற்கள் பாதிப்பு அடைகின்றன: பொதுவாக எல்லா குளிர் பானங்களும் அமிலச்சுவையுடன் இருக்கின்றன.இதில் கலந்துள்ள அமிலங்கள் பற்களின் எனாமலைப் பதம் பார்த்து கரைத்து விடுகின்றன.மேலும் அதிலுள்ள சர்க்கரை சத்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,243 முறை படிக்கப்பட்டுள்ளது!

கலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்

உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்.

இவற்றைப் படிக்கத் துவங்குமுன் ஒரு சில வார்த்தைகள். கலப்படத்தைக் கண்டுபிடிப்பதற்கென இங்கே விவரிக்கப்படுகிற வழிகள் எல்லாம் முடிவானவை என்று சொல்வதற்கில்லை. கலப்படத்தைக் கண்டு பிடிக்கும் முறையான ஒரு ஆய்வகம் தரும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு இவை ஈடாகாது.

உணவு குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் போன்றே கலப்படமும், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அக்கலப்படத்தை இனங்கண்டு கொள்வதற்க ஓரளவு இங்கே வழி . . . → தொடர்ந்து படிக்க..