Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,803 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்தக் கணம் மட்டுமே உங்களுடையது!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 18

நம்முடைய வாழ்க்கை எத்தனை நீண்டதாகவும் இருக்கலாம். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் நிகழ்காலம் மட்டுமே.

கடந்து போன காலத்தை இனி மாற்ற முடியாது. நல்லதோ, கெட்டதோ முடிந்ததெல்லாம் வாழ்க்கையின் வரலாறு ஆகி விட்டது. கடந்த காலத்தில் பயணித்து நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நம் விருப்பப்படி மாற்றி விட முடியாது.

எதிர்காலம் என்றுமே ஒரு கேள்விக்குறி தான். இனி மிஞ்சி இருக்கும் காலம் எத்தனை, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,899 முறை படிக்கப்பட்டுள்ளது!

“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!

நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூசன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,656 முறை படிக்கப்பட்டுள்ளது!

கர்வம் என்றும் முட்டாள்தனமே!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 17 வெற்றி மிக இனிமையானது. அதிலும் வெற்றி மீது வெற்றி வந்து சேர்கையில் அது கொடுக்கும் பெருமிதம் அலாதியானது. அது தற்செயலாக வராமல் நம் சிந்தனை, உழைப்பு ஆகியவற்றின் விளைவாக ஏற்படுகிறது என்றால் அந்த பெருமிதமும், மகிழ்ச்சியும் நியாயமானதும் கூட. வாழ்க்கையில் நிறைய முன்னேறிய பிறகு, நிறைய சாதித்த பிறகு அந்த நிறைவு கிடைக்குமானால் அதை நாம் பாடுபட்டதற்கான உண்மையான கூலி என்றே கருத வேண்டும். ஆனால் சில சமயங்களில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,713 முறை படிக்கப்பட்டுள்ளது!

தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!

தெருவில் நீங்கள் நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று தெய்வம் உங்கள் எதிரில் தோன்றி, “உனக்கு என்ன தேவை” – என்று கேட்கிறது. உங்களது மனக் கண்ணில் இந்தக்காடசியைக் காட்சிப்படுத்திப் பார்த்து.. உங்களது தேவையைச் சொல்ல முயலுங்கள்…அப்போது தான் நம் தேவை எதுவென்று நாமே உணராமல் இருக்கும் உண்மை நிலை நமக்குப் புரியவரும்.

நாம் எல்லோருமே வெற்றியைத் தேடித்தான் விரைந்து கொண்டிருக்கிறோம்.. மகிழ்ச்சிக்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறோம். நிம்மதியை நாடித்தான் நடந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் வெற்றி,மகிழ்ச்சி, நிம்மதி – . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,625 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரசனைகளை இழந்து விடாதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 16

வாழ்க்கை நம்மை உருட்டிக் கொண்டே செல்கையில் எத்தனையோ உன்னதமான தன்மைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம். குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் இருந்த எத்தனையோ ரசனைகள் சொல்லாமலேயே நம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றன. ஒரு காலத்தில் மனதைக் கொள்ளை கொண்ட இயற்கைக் காட்சிகளும், அழகான பாடல்களும் காலப் போக்கில் நம்மில் பெரும்பாலோரால் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ பழைய நினைவுகளாக மட்டுமே அவை தங்கி விடுவது தான் பெரிய சோகம். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,731 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாற்றங்கள் – கவிதை

கருவறையில் இருக்கையிலே இருட்டறை தான் என்றாலும் உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை. வெளிச்சமும் பிடிக்கவில்லை வெளியுலகம் வருவதற்கோ துளியளவும் விருப்பமில்லை. உள்ளேயே இருப்பதற்கா கருவாய் நீ உருவானாய் என்றே பரிகசித்தே படைத்தவன் பாரினில் பிறக்க வைத்தான்.

அழுதே நாம் பிறந்தோம் பாதுகாப்பை இழந்தே நாம் தவித்தோம். பிறந்தது இழப்பல்ல பெற்றது ஒரு பேருலகம் என்றே பிறகுணர்ந்தோம். சிரிக்கவும் பழகிக் கொண்டோம் உறவுகளை நாம் பெற்றோம் நண்பர்களைக் கண்டெடுத்தோம் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்தும் நாம் கற்றும் கொண்டோம்.

ஒன்றை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,262 முறை படிக்கப்பட்டுள்ளது!

வீட்டிலேயே செய்யலாம் பிசினஸ்!

தகிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க குளிர்பான கடைகளில் குவிகிறது கூட்டம். மக்களின் இந்தத் தேவையையே தனது பிசினஸூக்கான அஸ்திவாரமாக்கி ஜெயித்தவர்தான் சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த சௌமியா.

கிட்டத்தட்ட சென்னை முழுக்க பல கடைகளுக்கும் சப்ளை ஆகின்றன, இவர் கைகளால் தயாராகும் பிரிசர்வேட்டிவ் ஜூஸ் வகைகள்!

”குடும்பம், குழந்தைகள்னு இயல்பா நகர்ந்துட்டு இருந்துச்சு வாழ்க்கை. குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் எனக்குள்ள பிசினஸ் ஆசை முளை விட்டுச்சு. அந்த ஆசைக்கு நான் காலேஜ் படிச்சப்ப கத்துக்கிட்ட இந்தத் தொழில் ‘ஜூஸ்’ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,920 முறை படிக்கப்பட்டுள்ளது!

தமிழ்நாட்டின் மொத்த கடன் 1 இலட்சத்து 1349 கோடி

55 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டத்தில் நாகரீகமே எட்டிப்பார்க்காத ஒரு குக்கிரமத்தில் நடத்த உண்மை சம்பவம். சாலை வசதியே இல்லாத ஊர்ஃ அந்த கிராமத்தில் இருந்த ஒரு பண்ணையார் வீட்ல் அவர்கள் குடும்பத்தினர் எங்காவது போய் வர கூண்டு வண்டி வைத்து இருந்தனர். அந்த ஊரில் காரை பார்க்காதவர்களே பலர் உண்டு.ஒரு நாள் அந்த பெரியவரின் ஒரு மகன் அந்த காலங்களில் 1944 மாடல் என்று கூறப்பட்ட ஒரு பழையகாரைக் கொண்டு வந்து, அதற்கு மாலை போட்டு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,033 முறை படிக்கப்பட்டுள்ளது!

அடுத்தவர் நகலாய் மாறி விடாதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 15

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை படித்தேன். அதில் “ஒரு தாயிற்கும் தந்தைக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இருந்தால் கூட அவர்கள் குழந்தைகளில் ஒன்றைப் போலவே எல்லா விதங்களிலும் இன்னொரு குழந்தை இருக்க முடியாது” என்று உயிரியல் விஞ்ஞானி ஒருவர் எழுதியிருந்தார். இறைவனின் சிருஷ்டிகளில் தான் என்னவொரு அற்புதம் இது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி அற்புதம். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,508 முறை படிக்கப்பட்டுள்ளது!

உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 13

நம்மில் பலருக்கு அடுத்தவர்கள் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதாக ஒரு மனத்தாங்கல் இருக்கிறது. அதனால் நமக்கு உரிய கௌரவம் தராமல் இருப்பதாக வருத்தமும் இருக்கிறது. ஆனால் உண்மையில் மிகவும் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் அடுத்தவர் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதோ, நமக்குரிய கௌரவம் தராமல் இருப்பதோ அல்ல. நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு, நம்மை நாமே முழுமையாக கௌரவிக்கத் தவறி விடுவது தான்.

ஒவ்வொரு மனிதனும் தன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,982 முறை படிக்கப்பட்டுள்ளது!

அஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை

இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி

ஏப்ரல் மாதம். பெங்களூர் ஐ.ஐ.எஸ்-சில் இருந்த அந்தப் பெண்ணின் கண்களில் பட்டன குல்மொஹர் பூக்கள். முதுநிலை பொறியியல் வகுப்பில் இருந்த அந்த ஒரே பெண் தன் சக மாணவர்களுக்கு சளைத்தவரில்லை. சொல்லப் போனால் அவர்களையெல்லாம் முந்திக் கொண்டும் இருந்தார்.

அமெரிக்காவில் கம்ப்யூட்டர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் வந்திருந்தது. அமெரிக்கக் கனவுகள் அரும்பியிருந்த நேரம்.

கல்லூரி வளாக அறிவிப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,863 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 11

ஒரு நகரத்தில் ஒரு வணிகர் இருந்தார். அவர் படிப்பறிவில்லாதவர். அவர் கடையில் விற்காத பொருள்கள் குறைவு. எல்லாவற்றையும் தன் கடையில் வாங்கி வைத்திருந்து விற்பார். சில பொருட்கள் அவர் கடையில் மட்டுமே கிடைக்கும் என்கிற அளவுக்கு பிரபலமாக இருந்தானர். பல வருடங்களாக வெற்றிகரமாக வியாபாரம் நடத்தி வந்த அவர் உடல்நிலை தளர ஆரம்பித்தது. கண்பார்வை மங்க ஆரம்பித்தது. காதுகளும் சரியாக கேட்காமல் போகவே தன் தொழிலை மகனிடம் ஒப்படைக்க . . . → தொடர்ந்து படிக்க..