|
|
அச்செடுக்க
3,399 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th April, 2011 இன்றைக்கு உலகின் ஹாட் நியூஸ் மரபணு மாற்று பயிர்கள் தான். இப்போ அப்போ என சொல்லிக் கொண்டிருந்த அலாவுதீன் பூதம் இதோ வாசல் வரை வந்து விட்டது. இனிமேல் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான். இதை வைத்துப் பயிரிட்டால் ஆஹா..ஓஹோ. பருவமழை பொய்த்தாலும் பரவாயில்லை. நிலம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த விதைகளை பயிரிட்டால் களஞ்சியம் நிரம்பும். இப்படியெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி உண்டியலுடன் முன்னே நிற்பது அதே உலகண்ணன் அமெரிக்கா தான்.
2050ல் உலகின் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,316 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th April, 2011 கடந்த ஆண்டு மெகா ஊழல்கள் ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம், CVC கமிஷனராக தாமஸ் நியமணம் என ஊழல் கொடி கட்டி பறந்தது. இன்னும் அதற்குண்டான தீர்வுதான் எட்டப்படவில்லை. தமிழக தேர்தலிலும், உலக கோப்பை கிரிக்கெட் வெற்றியிலும் மூழ்கி திளைத்துவரும் பதிவுலகம், இவரை பற்றி எழுத்தாது ஆச்சரியமே.
ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான சட்ட வரையறையை கொண்டு வரவும், மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலத்தில் லோகாயுக்த்தா அமைப்பை நிறுவவும் 73 . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
5,130 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th April, 2011 நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.
ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.
எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
9,830 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th April, 2011 புதினாச் செடிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் என்று கூறப்படுகிறது.
தமிழகச் சமையலில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இல்லாமல் பெரும்பாலான உணவு வகைகள் இல்லை. உடல் ஆரோக்கியத்துக்குச் சிறந்த புதினா இலைகள், நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரிமானம் இல்லாமை போன்ற உடல் கோளாறுகளுக்குச் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.புதினாவை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்தம் சுத்தமாகும்.தொண்டைக் கரகரப்பைப் போக்கும் பல்வேறு மருந்துகள், மிட்டாய்கள் போன்றவற்றில் புதினா எண்ணெய் (மின்ட்) பிரதான . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
8,606 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th April, 2011 போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதிக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு வீடு, வீடாக பணம் வினியோகம் செய்ய அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான உதயகுமார் என்பவருக்கு சொந்தமான, “எம்.ஜே.டி., ஆம்னி’ பஸ்சின் மேற்கூரையில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு பணம் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவில், திருச்சி ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
ஆர்.டி.ஓ., சங்கீதா. நள்ளிரவு 2.30 மணி என்றும் பாராமல், அவரது டிரைவர் துரை மற்றும் உதவியாளர் ஒருவர் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
70,181 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th April, 2011 தினமும் இதே சாம்பாரும் சட்னியும்தானா? வாய்க்கு ருசியா ஒரு குருமா, ஒரு கிரேவி… ஒண்ணு கிடையாது நம்ம வீட்டுல!’’ என்று உங்கள் இல்லத்தரசரோ, அருமைப் பிள்ளையோ அலுத்துக்கொள்ள..
‘‘நான் எங்கே போவேன் மசாலாவுக்கும், கிரேவிக்கும்! இது என்ன ஹோட்டலா?’’ என்று அங்கலாய்க்கிறீர்களா?
தூக்கியெறியுங்கள், உங்கள் கவலையை! ஹோட்டல் சுவையைவிடவும் பிரமாதமான கைப்பக்குவத்தில் எல்லா சைடு டிஷ்களையும் நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.
இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, ப்ரெட், பூரி, நாண், பரோட்டா, சாதம் என்று அத்தனைக்கும் தொட்டுக்கொள்ள . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,090 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th April, 2011 இந்தியாவில் மருத்துவர்களாக பணியாற்றும் அனைவரும், மீண்டும் வகுப்பறைக்குச் சென்று கல்வி பயில வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த விதிமுறையை கட்டாயமாக்கவும் இந்திய மருத்துவக் கழகம் திட்டமிட்டுள்ளது. மருத்துவர்கள், தங்கள் துறையில் ஏற்படும் முன்னேற்றத்தை அவ்வப்போது அறிந்து கொள்வதற்காக மருத்துவக் கல்வியை தொடர்வது (கன்டின்யூவிங் மெடிக்கல் எஜுகேஷன்) என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது.
அதன்படி, மருத்துவக் கல்வியை தொடரும் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,662 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th April, 2011 பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆய்வு நடந்து வரும் நிலையில் A320 ரக ஏர்-பஸ் விமானம் ஒன்றை விமான எரிபொருளுடன் 30% காட்டாமணக்கு எண்ணெய் கலந்து ஓட்டி புதிய சாதனையை மெக்சிகோ நடத்திக் காண்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (2-4-2011) இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
டீசலுடன் தாவர எண்ணெயைக் கலந்து ரயில் என்ஜின்களில் இயக்கலாம் என்பதை இந்தியா போன்ற நாடுகள் நிரூபித்துள்ளன. இதற்காக இந்தியாவில் ரயில்பாதை ஓரங்களில் காட்டாமணக்குச் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டன. என்ன . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
4,506 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th April, 2011 சகோதர, சகோதரிகளே மனிதர்களாகிய நாம் அல்லாஹ் படைத்த படைப்பினங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த படைப்பாக இருக்கிறோம் காரணம் தவறு செய்கிறோம், தவறை உணர்கிறோம், செய்த தவறுக்கு இறைவனிடமும் சம்பந்தப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கோருகிறோம், மீண்டும் தவறுகள் நேராத வண்ணம் நமக்கு நாமே ஒரு வேலியை போட்டுக் கொள்கிறோம். நாம் சிந்திக்கின்றோம், உணர்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம், பேசுகிறோம், ஆடுகிறோம், பாடுகிறோம், ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் சுற்றித்திரிகிறோம். அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அது அணுவாக இருந்த போதும் ஆராய்ச்சி செய்துபார்க்கிறோம் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,518 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd April, 2011 படுப்பதுவோ… போர்த்துவதுவோ… கண்ணடைப்பதுவோ அல்ல உறக்கம்,நடந்ததுவும்… நடப்பதுவும்… நடக்க இருப்பதுவும்- என நர்த்தனமாடும் மனச் சலனங்கள் ஓய்வதே… உறக்கம்!
திறந்த கண்களும்… பரந்த பார்வையும்… உரத்த நோக்கும் அல்ல விழிப்பு,
பிறர் வலி உணர்தலும்… உணர்ந்து நீக்கலும்… நீக்கி இருத்தலுமே விழிப்பு!
காண்பதும்… கேட்பதும்… நுகர்தலும்… மூச்சிழுத்து விடுவதும் அல்ல வாழ்க்கை
நினைப்பதும்… செய்வதும்… செய்ததை உலகம் நினைத்திருக்கச் செய்வதுமே வாழ்க்கை!
உயிர் கழிதலும்… உணர்வழிதலும்… மெய் வீழ்தலும்… அல்ல மரணம்,
உயிர்களுக்கு உதவாமல்… இல்லாமலிருத்தல்போல்… . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
4,672 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd April, 2011 நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு சாப்பிட்டால் போதும்
ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமானது என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதிய சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
2,943 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st March, 2011 நிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் ‘பளிச்’சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங்கள் பலவற்றைத் தந்துள்ள அவரின் புகழ்பெற்ற வழிகாட்டுதல்களில் சில:
வெற்றிக்கு இருப்பது ஒரே வழி. அதுதான் நேர்வழி. உங்கள் நிறுவனத்தின் வழிமுறைகள் நேராக, நேர்மையாக அமையட்டும். எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நிகரில்லாத ஆலோசனைகளை நல்க முடியும். படித்த விஷயங்களை நிறுவனத்தில் எல்லோரும் எல்லோரோடும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள். சரியான ஆட்களை சரியான பொறுப்புகளில் அமர்த்துங்கள். திட்டமிடுதலின் . . . → தொடர்ந்து படிக்க..
|
|