Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,545 முறை படிக்கப்பட்டுள்ளது!

முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!!

சந்தையில் யாரும் அறிமுகம் செய்யாத புதிய விசயங்களையே வெற்றிக்கான மூலதனமாக வைத்துக் கொண்டு தான் தேர்ந்தெடுத்த துறையில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி வெற்றி பெற்றவரும், தன் வாழ்வைக் கடவுள் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் படைத்திருக்கிறார் என்றும், நமக்கு எப்போதும் பிறவித்திறன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை; நாம் தேர்ந்தெடுக்கும் துறை, வேலை, வாழ்க்கை இப்படி எல்லாவற்றிலும் முழு ஈடுபாடுகாட்டி முன்னேற்றத்தை நாடினால் எந்த வானமும் நமக்கு வசப்பட்டே தீரும் என்றும், தான் தேர்ந்தெடுத்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,968 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெற்றிக்கு முன் வரும் தடைகள்!

ஆன்மாவிற்கான சிக்கன் சூப் கதைகள் (Chicken Soup for the Soul ) பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை, அன்பு, அறிவு, வாழ்வியல் ஆகியவற்றை விளக்கும் உண்மைக்கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு அவை. அந்தத் தலைப்பில் 200 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பதினோரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. நாற்பதற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த அளவு வெற்றியடைந்த அந்த நூல்களில் முதல் நூலைப் பதிப்பிக்க அதன் தொகுப்பாளர்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 10,733 முறை படிக்கப்பட்டுள்ளது!

எல்லாம் ஒரு நாள் முடியும்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 25

இது வரை படித்த பாடங்கள் எல்லாம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் வாழ வழி காட்டுபவை. நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் வாழக் கற்றுக் கொடுப்பவை. இந்த பாடங்களைப் புரிந்து கொள்வது சுலபம். ஆனால் இவற்றை வாழ்ந்து காட்டுவது சுலபமல்ல. பெரும்பாலானோரும் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறோம். சிலவற்றிலோ பற்பல முறைகள் சறுக்கி விடுகிறோம். எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று சிறப்பு பெறுவது யதார்த்த உலகில் அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதை வாழ்ந்து பார்க்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,620 முறை படிக்கப்பட்டுள்ளது!

காலம் அறிந்து செயல்படுங்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 23

வெற்றிக்கு மூன்று விஷயங்கள் தேவை. அவை திறமை, உழைப்பு, காலம். இந்த மூன்றில் முதலிரண்டு தேவைகள் புரிந்த அளவுக்கு மூன்றாவது தேவையான காலம் புரியாமல் இருப்பதே பல திறமையாளர்களும், உழைப்பாளர்களும் தோல்வியடையக் காரணம். என்னிடம் இத்தனை திறமை இருந்தும் பயன்படவில்லையே, என்னுடைய இத்தனை உழைப்பும் வீணானதே என்று புலம்பும் பலரும் தக்க காலத்தில் தகுந்த விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.

வெற்றிக்கான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,723 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்க்கையில் தோல்வியா? சற்று திசை திருப்புங்கள்! வெற்றி நிச்சயம்

தோல்வி என்பது ஒரு விஷயத்தை மீண்டும் பரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பு. எங்கோ தவறி இருக்கிறோம் என்பதைப் புலப்படுத்தும் நமக்குத் தெளிவுபடுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பல நேரம் நாம் செல்லும் திசையைத் திருப்புவதற்காக அத்தகைய தோல்விகள் ஏற்படுவதுண்டு.

தோல்வியின் நன்மை

ஒரு இளைஞர் இருந்தார். ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு அவளுடன் தான் பழகி வருவதாகவும் அந்தப் பெண்ணுக்கும் தன்னை பிடித்திருப்பதாகவும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,481 முறை படிக்கப்பட்டுள்ளது!

கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 19

இந்தக் காலத்தில் வாழ்க்கையின் வெற்றி என்பது சேர்த்து வைக்கும் செல்வத்தையும், சொத்துகளையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. நிறைய சம்பாதிப்பவன், நிறைய சொத்து சேர்த்து வைத்திருப்பவன் வெற்றியாளன் என்றும் அதிர்ஷ்டசாலி என்றும் கருதப்படுகிறான். அதனாலேயே வாழ்க்கையின் ஓட்டம் முழுவதுமே பணம் சேர்ப்பதற்கான ஓட்டமாகி விடுகிறது.

நமக்கு வேண்டிய அளவு இருந்தாலும், நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவு செல்வம் இருந்தாலும் அதை விட அதிக அளவு சம்பாதிப்பவனையும், சேர்த்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,628 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள். அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். விட்டுக் கொடுங்கள். சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள். நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள். உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,570 முறை படிக்கப்பட்டுள்ளது!

கர்வம் என்றும் முட்டாள்தனமே!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 17 வெற்றி மிக இனிமையானது. அதிலும் வெற்றி மீது வெற்றி வந்து சேர்கையில் அது கொடுக்கும் பெருமிதம் அலாதியானது. அது தற்செயலாக வராமல் நம் சிந்தனை, உழைப்பு ஆகியவற்றின் விளைவாக ஏற்படுகிறது என்றால் அந்த பெருமிதமும், மகிழ்ச்சியும் நியாயமானதும் கூட. வாழ்க்கையில் நிறைய முன்னேறிய பிறகு, நிறைய சாதித்த பிறகு அந்த நிறைவு கிடைக்குமானால் அதை நாம் பாடுபட்டதற்கான உண்மையான கூலி என்றே கருத வேண்டும். ஆனால் சில சமயங்களில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,627 முறை படிக்கப்பட்டுள்ளது!

தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!

தெருவில் நீங்கள் நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று தெய்வம் உங்கள் எதிரில் தோன்றி, “உனக்கு என்ன தேவை” – என்று கேட்கிறது. உங்களது மனக் கண்ணில் இந்தக்காடசியைக் காட்சிப்படுத்திப் பார்த்து.. உங்களது தேவையைச் சொல்ல முயலுங்கள்…அப்போது தான் நம் தேவை எதுவென்று நாமே உணராமல் இருக்கும் உண்மை நிலை நமக்குப் புரியவரும்.

நாம் எல்லோருமே வெற்றியைத் தேடித்தான் விரைந்து கொண்டிருக்கிறோம்.. மகிழ்ச்சிக்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறோம். நிம்மதியை நாடித்தான் நடந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் வெற்றி,மகிழ்ச்சி, நிம்மதி – . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,901 முறை படிக்கப்பட்டுள்ளது!

அஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை

இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி

ஏப்ரல் மாதம். பெங்களூர் ஐ.ஐ.எஸ்-சில் இருந்த அந்தப் பெண்ணின் கண்களில் பட்டன குல்மொஹர் பூக்கள். முதுநிலை பொறியியல் வகுப்பில் இருந்த அந்த ஒரே பெண் தன் சக மாணவர்களுக்கு சளைத்தவரில்லை. சொல்லப் போனால் அவர்களையெல்லாம் முந்திக் கொண்டும் இருந்தார்.

அமெரிக்காவில் கம்ப்யூட்டர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் வந்திருந்தது. அமெரிக்கக் கனவுகள் அரும்பியிருந்த நேரம்.

கல்லூரி வளாக அறிவிப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,624 முறை படிக்கப்பட்டுள்ளது!

நாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள்

நமது நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடி கட்டிப்பறக்கும் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜீம் பிரேம்ஜி, ஒரு விழாவில் மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்களை விளக்கினார். அவை…

1. பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்

உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதேபோல மிகப்பெரிய சவாலைச் சந்திக்கும் போது, நீங்கள் அதைவிட்டு ஓடிவிட நினைக்கலாம். அல்லது பிரச்சினையை மற்றவர்களிடம் தள்ளிவிட நினைக்கலாம். அல்லது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,310 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒரு மாபெரும் வெற்றிக்கதை

கொடுமையான வறுமையில் வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பெரும் பணக்காரராக முன்னேறுவது அரசியலில் ஈடுபடாத ஒரு மனிதருக்கு அவ்வளவு சுலபமானதல்ல. ஆனாலும் மன உறுதியும், கூர்மையான அறிவும், புத்திசாலித்தனமான உழைப்பும் இருந்து விதியும் அனுகூலமாக இருந்து அப்படி சாதனை படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதெல்லாம் வெற்றிக் கதைகளே. ஆனால் அந்த வெற்றியின் பலனை தான் முழுமையாக அனுபவித்து மீதியைத் தன் சந்ததிக்கு விட்டுப் போவதாகவே அந்த வெற்றியாளர்களின் வாழ்க்கைக் கதைகள் இருந்திருக்கின்றன. தர்ம காரியங்களுக்காக ஒரு குறிப்பிட்ட பெரும் தொகையைத் . . . → தொடர்ந்து படிக்க..