Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2014
S M T W T F S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,398 முறை படிக்கப்பட்டுள்ளது!

டூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது?

toothpasteசமையல் எண்ணெய், பால், கிரைண்டர், வலி நிவாரணி போன்ற பொருட்கள் மற்றும் வங்கிச் சேவை, செல்போன் சேவை குறித்து சர்வே மற்றும் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருந்தது சென்னையைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு நிறுவனமான கான்சர்ட். எந்த பற்பசை (டூத் பேஸ்ட்) சிறப்பானதாக இருக்கிறது என்பது குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

நாம் சிறுவர்களாக இருக்கும்போது நம் தாத்தா/பாட்டி அல்லது அப்பா/அம்மா, ”டூத் பேஸ்ட்டை சாப்பிடாதே..!” என்று கண்டிப்பார்கள். அந்த எச்சரிக்கை யையும் மீறி அதன் சுவையால் ஈர்க்கப்பட்டு பாதி பேஸ்ட்டை சாப்பிட்டவர்கள் பலர். இப்போதும் அந்த எச்சரிக்கையை நம் குழந்தை களிடம் சொல்கிறோம். காரணம், அதிலிருக்கும் கெமிக்கல்.

இதனால் நம் உடல்நலம் பாதிப் படையுமா என்கிற கேள்விக்கான விடையை கடைசியாகப் பார்ப்போம். அதற்கு முன், பல் தேய்ப்பது பற்றி சில சுவாரஸ்ய மான விஷயங்களைப் பார்ப்போம்.

தினசரி காலை, இரவு என இரு முறை பல் துலக்குவது கட்டாயம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், பலரும் காலையில் கடனே என ஒருமுறை பல் தேய்ப்பதோடு சரி. பல் தேய்க்கும்போது குறைந்தது இரண்டு நிமிட நேரமாவது தேய்க்க வேண்டும். ஆனால், இந்தியர்கள் சராசரியாக 20 நொடிகள் மட்டுமே பல் தேய்க்கிறார்கள்.

பற்பசையின் தரம் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு டூத் பிரஷ்ஷின் தரமும் முக்கியம். சுமார் 3-6 மாதத்துக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. இனி பற்பசைக்கு வருவோம்.

இதில் பசை, ஒயிட்னர்கள், தண்ணீர், நிறப் பொருட்கள் போன்றவை அடங்கி இருக்கின்றன. இந்திய தர நிறுவனத்தின் தர அளவீடுகளின் அடிப் படையில் பற்பசைகளின் தரம் இருக்கிறதா என ஆராயப் பட்டது. இந்த ஆய்வு மற்றும் சர்வே மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை யின் அனுமதியின்பேரில் நடத்தப்பட்டது. கோல்கேட், குளோஸ்-அப், ஹிமாலயா, டாபர் போன்ற முன்னணி பிராண்ட்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

toothpaste

பற்பசைகளில் பேக்கிங் மற்றும் லேபிலிங் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இவை நன்றாக இருக்கிற டூத் பேஸ்ட்கள்  அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. காலையில் கண் விழிக்கும்போது நம்மவர்கள், அழகிய பொருளை பார்க்க விரும்புவதை இது சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.

டூத் பேஸ்ட்டில் நுரை வர சோடியம் லரியல் சல்பேட் சேர்க்கப்படுகிறது. இது அதிகமானால் பல் ஈறுகள் பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும், கல்லீரல் மற்றும் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. காரீயம், ஆர்ஸனிக் போன்ற கன உலோகங்கள் குறைவாக இருப்பது உடல் நலனுக்கு நல்லது.

அதே நேரத்தில், டூத் பேஸ்ட்டில் உள்ள ஃபுளோரைட் பற்சொத்தையை தடுக்க உதவுகிறது. பற்பசை சாப்பிடுவதால் ஒன்றும் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. நாம் குடிக்கும் காபி-யின் பாதிப்பை விட குறைவுதான்.

டூத் பேஸ்ட்கள், வாய் துர்நாற்றத்தைப் போக்குவது, பல் கரை மற்றும் காரை போக்குதல், பூச்சி தொல்லை, பற்சொத்தை போன்றவற்றிலிருந்து நம் பற்களை காப்பதோடு, பற்களை பளிச்சிடவும் வைக்கிறது.

எது பெஸ்ட் நிறுவனம் என்பது அட்டவணையில் விரிவாக தரப்பட்டுள்ளது. வாசகர்கள் படித்து பயன் பெறவும்.

-சி.சரவணன்

 பற்களில் காரை படிந்துள்ளதா? இனி கவலை எதற்கு?

toothscaleஎன்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒரு முறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூ ரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(potassium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்தவேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்..