Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2016
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,356 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை குட்டீஸ் ரெசிபி 2/2

பீஸ் ஸ்டஃப்டு சப்பாத்தி

16  தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பச்சைப் பட்டாணி – ஒரு கப் (வேகவைத்து நீரை வடிக்கவும்), கொத்த மல்லித் தழை – அரை கட்டு, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறு துண்டு, நெய் – எண்ணெய் கலவை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் சிறி தளவு உப்பு, தேவையான நீர் சேர்த்துப் பிசையவும், வேகவைத்த பச்சை பட்டாணியுடன் கொத்தமல்லித் தழை, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து. சின்னச் சின்ன உருண்டைகள் தயார் செய்யவும்.

பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிதளவு எடுத்து கிண்ணம் போல் செய்யவும். அதனுள் பட்டாணி விழுது உருண்டையை வைத்து மூடி (வெளியே விழுது வராதபடி) சப்பாத்தி களாக தேய்க்கவும்.  தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் நெய் – எண்ணெய் கலவையை ஊற்றி, இரு புறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். பீஸ் ஸ்டஃப்டு சப்பாத்தியை அப்படியே சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்பலாம்.
——————————————————————————————————————-
ஓட்ஸ்  கேழ்வரகு ரொட்டி

  17தேவையானவை:  ஓட்ஸ், கேழ்வரகு மாவு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் – தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு, தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:  கேழ்வரகு மாவு, ஓட்ஸுடன் நெய்யைத் தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து சிறிதளவு நீர் விட்டுக் கலந்து நன்கு பிசையவும். கொஞ்சம் மாவை எடுத்து சிறு உருண்டயாக்கி, வாழையிலை (அ) பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதன்மீது உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டவும். தோசைக்கல்லின் மீது நெய் தடவி, ரொட்டியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, திருப்பிப் போட்டு எடுக்கவும். இதற்கு, ஃப்ரூட் ஜாம் பெஸ்ட் காம்பினேஷன்.
——————————————————————————————————————–
பச்சைப்பயறு கட்லெட்

18தேவையானவை: உருளைக்கிழங்கு – ஒன்று, முளைகட்டிய பச்சைப்பயறு – கால் கப், சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கி, வேகவைத்த கேரட், பீன்ஸ், கோஸ் (மூன்றும் சேர்த்து) – ஒரு கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு, பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வறுத்துப் பொடித்த சீரகத்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முளைகட்டிய பச்சைப்பயறை சேர்த்து வதக்கவும். பிறகு, பயறுடன் வேகவைத்த காய்கறிகள், பச்சைப் பட்டாணி, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய், கொத்த மல்லித் தழை, மசித்த உருளைக்கிழங்கு, சோள மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன கட்லெட்டுகளாக தட்டி… தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கட்லெட்டுகளைப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து, சாட் மசாலாவை லேசாகத் தூவி, சாப்பிடக் கொடுக்கவும்.
————————————————————————————————————–
ஹாட் அண்ட் ஸ்வீட் டோக்ளா

19தேவையானவை: கடலை மாவு – 2 கப், சர்க்கரை – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், சமையல் சோடா – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4 (மிகவும் பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:  கடலை மாவுடன் 2 கப் தண்ணீர், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கட்டியில்லாமல் கரைக்கவும். சமையல் சோடா மாவில் வெதுவெதுப்பான நீர் விட்டுக் கரைத்து அதை கடலை மாவுக் கரைசலில் ஊற்றி நன்கு கலக்கவும்.

இட்லித்தட்டில் எண்ணெய் தடவி, அதில் இந்த மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போட்டு ஆறவிடவும். இதுதான் டோக்ளா. சர்க்கரையை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, டோக்ளா மீது பரவலாக ஊற்றவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து… தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை கலந்து இறக்கி, இந்தக் கலவையை டோக்ளா மீது பரவலாகத் தூவவும்.
—————————————————————————————————————-
பனீர்  சீஸ் பன்

தேவையானவை:  நல்ல தரமான பன் – 6, சீஸ் துருவல், பனீர் துருவல் – தலா அரை கப், கேரட் துருவல், கோஸ் 20துருவல் – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – சிறிதளவு.

செய்முறை:  பன்னை படுக்கை வாக்கில் 2 துண்டாக வெட்டவும். அதன் கீழ்ப்பகுதியில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி ஒரு சின்ன பள்ளத்தை ஏற்படுத்தவும். பனீர், சீஸ் துருவலுடன் பச்சை மிளகாய், கேரட் துருவல், கோஸ் துருவல், கொத்தமல்லித் தழை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். பன்னின் (கீழ்ப்பகுதி) பள்ளத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் துருவல் கலவையை அழுத்தி வைத்து மேல்பாக பன்னால் மூடவும். தவாவை சூடேற்றி ஸ்டஃப் செய்த பன்னை அதன்மேல் வைத்து, சுற்றிலும் வெண்ணெய் தடவி, வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு, நன்கு சூடானதும் எடுத்து சாப்பிடக் கொடுக்கவும். லேசாக வறுத்த எள்ளை மேலே தூவியும் பரிமாறலாம்.
—————————————————————————————————————
சீஸ்  வெஜிடபிள் ஆம்லெட்

 21தேவையானவை:  மைதா மாவு – அரை கப், துருவிய பனீர் – 50 கிராம், பால் – அரை கப், பச்சை மிளகாய் – 2, வெங்காயம், குடமிள காய் – தலா ஒன்று, கேரட் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், சீஸ் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் – தேவையான அளவு, மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு, நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். மைதாவை பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும். இதனுடன் துருவிய பனீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், கொத்தமல்லித் தழை, கேரட் துருவல், சீஸ் துருவல் ஆகியவற்றை கலந்து வைக்கவும்.

தோசைக்கல்லில் நெய் தடவி மைதா – பனீர் கலவையை சற்று கனமாக ஊற்றி மேலும் சிறிது நெய் விட்டு, அதன் மீது காய்கறி – சீஸ் கலவையை தூவி ஒரு மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் அதன் மீது தக்காளி சாஸை லேசாக தடவி, சாப் பிடக் கொடுக்கவும்.
——————————————————————————————————————
டொமேட்டோ ஆம்லெட்

22தேவையானவை: கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா அரை கப், கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம், தக்காளி – தலா 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்),  நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு,  மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:  உப்பு, எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். அதனுடன் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் நன்கு கரைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி, மாவை சின்னச் சின்ன ஆம்லெட்டுகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
—————————————————————————————————————–
க்ரிஸ்பி பால்ஸ்

23தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், மோர் – 2 கப், சின்ன வெங்காயம் – 8 (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள், சீரகம் – தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  அகலமான வாணலியில் மோரை ஊற்றி (அடுப்பை ‘சிம்மி’ல் வைத்து) லேசாக சூடு பண்ணவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு அரிசி மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். இதில் சின்ன வெங்காயம், கொத்தமல்லித் தழை சேர்த்து, கலவை சற்று கெட்டியான பதம் வரும் வரை கிளறவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு மாவை இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.  கையில் எண்ணெய் தொட்டு, செய்து வைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள டொமேட்டோ கெட்சப் ஏற்றது.
——————————————————————————————————————
பனீர்  வெஜ் ரோல்ஸ்

24தேவையானவை: சப்பாத்தி – 8, துருவிய பனீர் – 200 கிராம், குடமிளகாய், பெரிய வெங்காயம் – தலா ஒன்று, வெங்காயத்தாள் – 4, சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி – கால் டீஸ்பூன், கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பொடி யாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:  குடமிளகாய், பெரிய வெங்காயம், வெங்காயத் தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முதலில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு குடமிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். துருவிய பனீரை அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதில் சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி… கொத்தமல்லித் தழை, ஆம்சூர் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்… ஃபில்லிங் ரெடி.
சப்பாத்தியின் நடுவில் இந்த ஃபில்லிங்கை நீளவாக்கில் நிரப்பி, பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளை மேலே தூவி நன்கு இறுக்கமாக சுருட்டி, அலுமினிய பாயில் (அ) பட்டர்பேப்பரில் வைத்து சுருட்டி… லஞ்ச் பாக்ஸில் போட்டு கொடுத்து அனுப்பலாம்.
——————————————————————————————————————-
பனானா சப்பாத்தி

25தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பச்சை வாழைப்பழம் – ஒன்று (நன்கு மசித்துக் கொள்ளவும்), நெய் – 2 டீஸ்பூன், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – நெய் கலவை – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: எண்ணெய் – நெய் கலவை நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, தேவையான நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். பிறகு வட்ட வட்ட சப்பாத்திகளாகத் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு… எண்ணெய் – நெய் கவலையை சுற்றிலும் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். சாப்ஃட்டான இந்த சப்பாத்திக்கு ஃப்ரூட் ஜாம் தொட்டுக்கொள்ளலாம்.
———————————————————————————————————————
வொயிட் சென்னா ரோஸ்ட்

26தேவையானவை:  வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப், பச்சரிசி – 2 கப்,  பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 3, இஞ்சி – சிறு துண்டு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய்,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளை கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊறவைக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய சென்னாவை நன்கு கழுவி… அரிசி, இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை தாளித்து, மாவில் சேர்த்துக் கலக்கவும். மாவை தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும். இதற்கு டொமேட்டோ கெட்சப் தொட்டு சாப்பிட்டால்… சூப்பர் சுவையில் இருக்கும்.
—————————————————————————————————————
ஹனி சப்பாத்தி

27தேவையானவை:  கோதுமை மாவு – 2 கப், தேன் – தேவையான அளவு, கறுப்பு எள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – நெய் கலவை – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:  கோதுமை மாவுடன் தேன், நெய், எள், உப்பு சேர்த்துக் கலந்து தேவையான நீர் தெளித்து நன்கு பிசைந்துகொள்ளவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக  திரட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் – நெய் கலவையை சுற்றிலும் ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.
——————————————————————————————————————
பிங்க் பூரி

28தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப), கரம் மசாலாத்தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு, பீட்ரூட் வேகவைத்த நீர் – தேவையான அளவு.

செய்முறை:  காய்ந்த மிளகாய், சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனை கோதுமை மாவுடன் கலந்து உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, பீட்ரூட் வேகவைத்த நீர் தெளித்து நன்கு பிசையவும். இந்த மாவை சிறு பூரிகளாகத் தேய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள வெள்ளரி ராய்தா பெஸ்ட் சாய்ஸ்.
——————————————————————————————————————
காலிஃப்ளவர் ரோஸ்ட்

29தேவையானவை: தோசை மாவு – 2 கப், சின்ன காலிஃப்ளவர் – ஒன்று, பெரிய வெங்காயம், தக்காளி – தலா 2, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ் பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரி – 6, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கடுகு, பெருஞ்சீரகம் – தலா அரை டீஸ் பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை மிகவும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும். பெரிய வெங்காயம், தக் காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல் – முந்திரியை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து… பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக் கிய தக்காளி, காலிஃப்ளவர், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தேங்காய் – முந்திரி விழுது சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, அதன்மீது இந்த காலிஃப்ளவர் மசாலாவைத் தடவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மடித்து எடுக்கவும். இதை ஆனியன் ராய்தா தொட்டு சாப்பிடலாம்.
—————————————————————————————————

ஃப்ரூட்ஸ்  நட்ஸ் பூரி

தேவையான30வை: கோதுமை மாவு, பால் – தலா 2 கப், பொடியாக நறுக்கிய ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் (மூன்றும் சேர்த்து) – 2 கப், வறுத்த முந்திரி, திராட்சை – தலா 10, சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து, சிறு பூரிகளாகத் திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பாலை சுண்டக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் இறக்கி ஆற விடவும். பிறகு, அதில் பொடியாக நறுக்கிய பழத்துண்டுகள், முந்திரி, திராட்சை சேர்த்து, பூரி மீது ஊற்றி சாப்பிடக் கொடுக்கவும்.

—————————————————————————————————

30 வகை குட்டீஸ் ரெசிபி 1/2