Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,467 முறை படிக்கப்பட்டுள்ளது!

பனை மரம் -Palmyra Palm

தமிழகத்தின் மாநில மரம் பனை (Palmyra Palm). புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பல பயனுள்ள பயன்களைத் தருகின்றது.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,323 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாணிக்கக் கற்கள் நிறைந்த கூபர் பெடி!

நவரத்தினங்களுள் ஒன்று கோமேதகம் ஆகும். இது பசுவின் சிறுநீரான கோமியத்தின் நிறத்தைப் போன்று இருப்பதால், கோமேதகம் எனப் பெயர் வந்ததாக கூறுவர். மாணிக்கக் கல்லின் தலைநகரம் என அழைக்கப்படும் “கூபர் பெடி’(COOPER PEDY). தெற்கு ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் அடிலெய்டிலிருந்து 846 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. உலகின் மிகச்சிறந்த மாணிக்கக் கற்களை இங்குதான் தோண்டி எடுக்கின்றனர்.

கூபர்பெடி பூமிக்கு கீழே அமைந்துள்ள ஒரு நகரம். ஆமாம், இந்தப் பகுதியே ஒரு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,445 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்!

திரி என்றால் மூன்று. கடுகம் என்றால் மருந்து. மூன்று மூலங்களினால் ஆன மருந்துதான் திரிகடுகம். பழந்தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்த இந்த மருந்தைப் பற்றி, இன்றைய தலைமுறையினருக்கு எத்தனை தெரியும் என்பது கேள்விக்குரியது. திரிகடுகம், திரிகடுகு என்றழைக்கப் படும் இந்த மருந்துதான் பழந்தமிழரின் நோயற்ற பெருவாழ்வுக்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் இருந்ததென்றால் மிகையில்லை.

“சுக்கு”,”மிளகு”,”திப்பிலி” என்கிற இந்த மூன்றும் கூடியதுதான் திரிகடுகம். ஆம், எளிதாய் கிடைக்கிற இந்த மூன்று தாவரப் பொருட்களே நோயற்ற . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,787 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரூ.3 லட்சம் பலே வருமானம் தரும் பால் காளான்!

இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு… அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.

‘பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது… . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 184,359 முறை படிக்கப்பட்டுள்ளது!

மருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்

‘அத்திப் பூத்தாப்போல இருக்கே?’ என்று ஒரு பழமொழி உண்டு. உண்மையில் அபூா்வமாக பூப்பதாக நினைக்க வேண்டாம். அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும். அதனால் இதை “காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்” என்ற விடுகதையிலும் சொல்வர்.

மூலிகையின் பெயர்- அத்தி தாவரப்பெயர் – FICUS . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,881 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிங்கப்பூரில் குடிநீர் பிரச்னை தீர்ந்தது எப்படி?

ஒரு மாநகரத்தின் மக்கள் தொகைக்கேற்ப, அதன் அடிப்படை வசதிகள் திட்டமிடப்பட வேண்டும். திட்டமிடப்படாமல், நகரத்தை விரிவாக்கினால், இயற்கை வளங்கள் அழிவதோடு, பஞ்சமும், இயற்கைப் பேரழிவும் உண்டாகும்,” என்கிறார், அறம் முருகேசன், 50. அவர், பத்தாண்டுகளுக்கும் மேல், சிங்கப்பூரில் கட்டட வடிவமைப்பாளராக பணியாற்றியவர்.

சிங்கப்பூரில் எப்படி?

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சிங்கப்பூரை பொறுத்தவரையில், 5 கி.மீ.,க்கு ஒரு இடத்தில், மிகப்பெரிய மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,399 முறை படிக்கப்பட்டுள்ளது!

அதிசயங்கள் நிறைந்த அமேசான் காடுகள்

அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இது உலகில் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விஷயமாக இருக்கிறது. இந்த காடுகள் ஆபத்தானவை., இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது. இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,551 முறை படிக்கப்பட்டுள்ளது!

அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்

நாம் உட்கொள்ளும் பழங்கள் அனைத்து நாட்களிலும் கிடைக்கக்கூடியதாகவும், மிகவும் குளிர்ச்சியினால் சளித்தொல்லை மற்றும் மலச்சிக்கலை தவிர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் அனைத்து தரப்பினரும் உட்கொள்ளும் வண்ணம் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அன்றாட உணவில் ஏதேனும் ஒரு வகையில் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. அதேபோல் நாகரீகத்தில் பாரம்பரியமிக்க நாமும் பழங்களை அடிக்கடி உட்கொள்வது அவசியம். அதிக சத்து நிறைந்த, அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் (Apricot . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,872 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாலத்தீவு எனும் நீலத்தீவு – பயண கட்டுரை!

திடீர் பயணம்…சட்டென்று அமைந்ததால் தவிர்க்க முடியாமல் போக வேண்டிய சூழ்நிலை. கிளம்பி வந்துவிட்டேன். முதலில் சென்னையிலிருந்து இலங்கை கொழும்புவிற்க்கு பயணம். ஏர் இந்தியா, கிங் ஃபிஷரை விட மிக சிறந்த கவனிக்கப்படவேண்டிய விமான சேவை. குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணம். முக்கியமாய் அவர்களின் விருந்தோம்பல் அதுவும் சாப்பாட்டை சொல்லியே ஆகவேண்டும்.

சூடான சாதத்துடன் கத்திரிக்காய் பொரியல் செய்து நம்மை அசத்தினார்கள். ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழையும் குழைத்து பேசியது அழகோ அழகு. ஒன்றரை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,072 முறை படிக்கப்பட்டுள்ளது!

அண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஹென்றி வொர்ஸ்லி (55). முன்னாள் ராணுவ அதிகாரி. சாகச வீரரான இவர் இங்கிலாந்து அரச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர்.

இவர் அண்டார்டிகா துருவ பிரதேசத்தை தனியாக பயணம் செய்து கடக்க திட்டமிட்டார். அதன் மூலம் கடந்த 100 ஆண்டுக்கு முன்பு சாகசம் புரிய முயற்சி மேற்கொண்டு அதை பாதியிலேயே முடித்த எர்னெஸ்ட் ஷேக்கெல்டனின் சாதனையை முறியடிக்க விரும்பினார்.

அதற்காக கடந்த 71 . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,541 முறை படிக்கப்பட்டுள்ளது!

ராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை! (நோனி)

மருத்துவகுணம் அதிகம் நிறைந்த நோனி பழங்கள்: ராமநாதபுரம் விவசாயி சாகுபடி செய்து சாதனை

மருத்துவக் குணம் நிறைந்த நோனி பழங்களை, ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்து சாதித்துள்ளார் பஞ்சம்தாங்கி கிராம விவசாயி ஒருவர்.

தமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சனத்தி வகையைச் சார்ந்தது வெண் நுணா என்னும் நோனி மரம். ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நோனி பழங்களின் பழச்சாறுக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,915 முறை படிக்கப்பட்டுள்ளது!

காகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)

நமது உடலில் 80% நீர் உள்ளது. அதே போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது நல்லது. நம்மில் பலருக்குத் தெரியாத ஒரு விஷயம், மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான். பழங்கள் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. நல்ல பழங்களைத் தினமும் சாப்பிட்டால், எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் ஞாபகத்துக்குக் கொண்டு வரலாம். பழங்கள் நார்ச் சத்து, . . . → தொடர்ந்து படிக்க..