Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 17,874 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை

வாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை முறைகள் – டாக்டர் செந்தில்வேல்

இருதயத்திற்கான இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் ஹார்ட் அட்டாக் (Heart Attack) என்று சொல்கிறோம். அதே போல் மூளையின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் அதை ப்ரைன் அட்டாக் (Brain Attack) என்று அழைக்கிறோம். தமிழில் வாத நோய் அல்லது பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.

வாதநோய் எனப்படும் வியாதி வயதானவர்களுக்குத் தான் ஏற்படும் என்பது மக்களி டையே உள்ள கருத்தாகும். இது ஒரு விதத்தில் சரியானதாக இருந்தாலும் இந்த வியாதி, காரணத்தைப் பொறுத்து, எந்த வயதிலும் ஏற்படலாம். மாறிவரும் வாழ்க்கை நடைமுறைகள், பணியில் / குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றால், இளவயதினருக்கும் வாத நோய் ஏற்பட ஆரம்பித்துள்ளது. வாதநோய் என்றவுடன், இத்துடன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பது போன்ற அபிப்பிராயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க, நோயின் கடுமையைக் குறைக்க / குணப்படுத்த பரிசோதனை உபகரணங்கள், மருந்துகள், அறுவை சிகிச்சை ஆகிய முறைகள் உதவி செய்கின்றன. அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

வாத நோய் என்றால் என்ன?

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் / பாகத்திற்கும் மூளையில் ஒரு ஸ்விட்ச் உள்ளது. அந்த ஸ்விட்ச் பழுதாகும் பொழுது அந்த குறிப்பிட்ட உடல் பாகம் செயல் இழந்து விடுகிறது (Paralysis). இரத்தக் குழாய் சம்பந்தப் பட்ட வியாதியினால் இந்த செயல் இழப்பு ஏற்படும்போது அதை வாதநோய் என்கிறோம். இந்த நொடியில் நன்றாக இருக்கும் மனிதனுக்கு அடுத்த நொடி யில், அடுத்த சில நிமிடங்களில் செயல் இழப்பு ஏற்படுகிறது. இந்த விரைவுத் தன்மையினால்தான் இந்த வியாதியை ஸ்ட்ரோக் என்றும் சொல்கிறோம்.

இரத்த ஓட்டம் தடைப்படுவதற்கான காரணங்கள் (இரத்தக் குழாய் அடைப்பு,  இரத்தக் குழாய் கசிவு) மூளையின் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் இரத்தக் குழாயில் திடீரென அடைப்பு ஏற்படலாம் (Ischemic Stroke). இந்த அடைப்பு என்பது, வயது முதிர்ச் சியினால் இரத்தக் குழாயில் ஏற்படும் பாதிப்பு ஆகும். அல்லது இரத்தத்தில் ஏற் படும் மாற்றங்களாலும் இரத்தக் குழாயின் உட்பக்கத்தில் அடைப்பு ஏற்பட லாம் (Thrombotic). அல்லது வெளி உறுப்புகள், உதாரணமாக இருதயத்தில் இருந்து இரத்தத் துகள்கள் சென்று மூளையில் இரத்தக் குழாயை அடைக்கலாம்  (Embolic).

சில சமயங்களில், வயது முதிர்ச்சியினால் ஏற்படும் இரத்தக் குழாய் மாற் றங்கள் அல்லது அதிகமான இரத்த அழுத்தம் (High Blood Pressure) காரணமாக மூளையில் இரத்தக் குழாய் பலவீனமாகி, நைந்து போய், இரத்தக் கசிவு ஏற்படலாம் (Heamorrhagic Stroke).

வாதநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் (Risk Factors)

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இருதய வியாதிகள், இரத்தத்தில் அதிகமான கொழுப்பு அளவு, புகை பிடித்தல், மதுப்பழக்கம், உடல் பருமன் போன்றன.

வாதநோயின் அறிகுறிகள்

இந்த நோய் எல்லா வயதினரையும் பாதிக்கலாம் என்றாலும் வயது முதிர்ந் தவர்களை அதிகம் பாதிக்கிறது. முதல் நாள் இரவில் நன்றாகத் தூங்க ஆரம்பிக் கும் மனிதன், அடுத்த நாள் அதிகாலையில் உடலில் ஒரு பக்கம் செயல் இழந் திருப்பதையும் சில சமயம், சுய நினைவு அற்ற நிலையில், உறவினர்களால் கண்டுபிடிக்கப்படுவதையும் பார்க்கிறோம். இருப்பினும், எந்த நேரத்திலும் செயல் இழப்பு ஏற்படலாம்.

பேச்சுக் குழறல், திடீர் தலைவலி, கண்பார்வை திடீரென மங்குதல், உடலில் ஒரு பக்கம் மரத்துப் போதல், தலை சுற்றல் ஆகியவை மற்ற அறிகுறிகளாகும். மேலே சொல்லப்பட்ட சில அறிகுறிகள் தற்காலிகமானவை ஆகும். உடன் சிகிச்சை அளிக்கப்பட்டால் வாத நோயில் இருந்து விடுபடலாம். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே சிகிச்சையை ஆரம்பித் தால் உயிரிழப்பைத் (Mortality) தடுக்கவும், உடல் ஊனத்தை (Morbidity) குறைக்க வும் வாய்ப்புள்ளது.

வாதநோயை உறுதிப்படுத்துவதற்கு தேவையான பரிசோதனைகள்

வாதநோய் பல்வேறு காரணங்களால் ஏற்படுவதால், குறிப்பாக என்ன கார ணத்தினால் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்தால்தான் அதற் கேற்ப சிகிச்சை அளிக்க முடியும்.
சிறுநீர் பரிசோதனை, இரத்த அணுக்கள் பரிசோதனை, இரத்தம் உறையும் தன்மையைக் கண்டறிதல், இரத்தத்தில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பின் அளவுகள், மார்பு எக்ஸ்ரே (Xray Chest), இருதய சுருள் படம் (ECG), எக்கோ கார்டியோ கிராம் (Echo cardiogram), C.T. ஸ்கேன், MRI ஸ்கேன், மூளைக்குச் செல் லும் இரத்தக் குழாய்களின் அடைப்பைக் கண்டுபிடிக்க உதவும் கலர் டாப்ளர் (Colour Doppler) மற்றும் ஆஞ்சியோகிராம் (Angiogram) போன்ற பரிசோத னைகளில் மருத்துவர், நோயாளியைப் பரிசோதனை செய்துவிட்டு, தேவைக் கேற்ப சிகிச்சைகளை முடிவு செய்வார்.

வாத நோய்க்கான சிகிச்சை முறைகள்

முன்னேறி வரும் மருத்துவத் துறையில் எல்லா நோய்களுக்கும் புதிய சிகிச்சை முறைகள் இருப்பதுபோல், வாத நோயை குணப்படுத்துவதற்கும் புதிய சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கான சிகிச்சை என்பது, நோயாளி மருத்துவமனைக்கு வந்த உடனேயே ஆரம்பித்து விடுகிறது. சுயநினைவில்லாமல் வரும் நோயாளிகளுக்கு, இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் ஆகியவற்றை சில வினாடிகளில் தெரிந்துகொண்டு, உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நோயாளியின் நாடித் துடிப்பு, இரத்த அழுத்தம், இரத்த ஓட்டம், சுவாசம் ஆகியவை சீர்செய்யப் படுகின்றன.

இதற்கிடையே C.T. மூளை ஸ்கேன் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன்மூலம் மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதா? இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா? என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்றாற்போல், அடுத்த கட்ட சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இரத்தக் குழாய் அடைப்பு ஏற்படும் நோயாளிகளை, அதன் முதல் அறிகுறிகள் தெரிந்து மூன்று மணி நேரத்திற்குள், அதற்குரிய சிகிச்சை மையங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த் தால், C.T. மூளை ஸ்கேன் செய்யப்பட்டு, அடைப்பு உறுதி செய்யப்பட்டு மருந் துகள் மூலம் அடைப்பைக் கரைப்பதற்கு Thrombolysis என்னும் சிகிச்சை அளிக் கப்படுகிறது.

இரத்தக் கசிவு ஏற்படும் நோயாளிகளுக்கு, கசிவு அதிகமானால் அல்லது பெரிய இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். போன்ற நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் இருந்து பிஸியோதெரபி (Physiotherapy) எனப்படும் முடநீக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வாத நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்

நமது இயந்திரத்தனமான வாழ்க்கையினால் உடல் நலத்தைப் பேணக் கூடிய சில அடிப்படை விடயங்களைக் கூட நம்மால் செய்ய முடிவதில்லை. வேகமான நடைப்பயிற்சி (Brisk Walking) மற்றும் உடற்பயிற்சிகள் மிகவும் அவ சியம். இவை நம் மூளைக்கும் இதயத்திற்கும் புதுத் தெம்பைக் கொடுக்கின்றன.

உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவை அடங்கிய நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்ணுவது நல்லது. கொழுப்பு குறைவான உணவுகளை உண்ண வேண்டும். சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மாதம் ஒரு முறையாவது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, இவற்றைக் கட்டுப்பாட் டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும்.

மன அழுத்தம் குறைவதற்கு தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இரவில் குறைந்தபட்சம் தடையில்லாத 6 மணி நேரத் தூக்கம் அவசியம். மூளை என்பது ஒரு Super Computerயை விட நுணுக்கமானது. அது நமக்கு இயற்கை அளித்த வரப்பிரசாதம். மேலே விளக்கப்பட்ட வகைகளில் நம் வாழ்க்கை நடைமுறைகளை நெறிப்படுத்திக்கொண்டு, மூளையை நல்ல முறையில் இயங்கச் செய்வது நமது கடமையாகும்.

நன்றி: Medical Online