Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,250 முறை படிக்கப்பட்டுள்ளது!

அருகி வரும் நிலத்தடி நீர் – சிக்கல்களும் அறிவியல் தீர்வும்

இவ்வுலகில் உயிரினம் தோன்றுவதற்க்கும் அது வாழ்வதற்க்கும் நீர் இன்றியமையாது.இத்தகைய பெருமைகளை கொண்ட நீரினை பற்றியும் அது இல்லையேல் வரும் விளைவுகள் பற்றியும் அதனை தீர்ப்பதற்கான அறிவியல் தீர்வுகள் பற்றியம் இங்கு காண்போம்.

நீரின் பெருமைகள்

  • நிலத்தடிநீரின் வகைகள்
  • நிலத்தடிநீரின் பற்றாகுறைக்கான காரணங்கள்
  • நிலத்தடிநீரின் பற்றாகுறையால் ஏற்படும் விளைவுகள்
  • அறிவியல் தீர்வுகள்

நீரின் பெருமைகள்

உலகில் உயிரினம் தோண்றுவதற்க்கு மூலக்காரணம் நீர்தான். இத்தகைய சிறப்புகளைகொண்ட நீரினை நமது அய்யன் திருவள்ளுவர் இவ்வாறு கூறுகின்றார்,

‘நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கம்

இவ்வரிகளில்,

உலக நடப்புக்கு ஒழுக்கம் வேண்டும்,அவ்வொழுக்கம் மழை இல்லையேல் யாரிடமும் இருக்காது. ஆனால் உலகில் உயினங்கள் குடிப்தற்கென்று பயன்படுத்தும் நீரின் அளவு மிகவும் குறைவு.

குடிநீரின் வகைகள்

  • ஆழ்துளைகிணற்று நீர்
  • ஆற்று நீர்

மேற்கண்ட முறைகளில் உயிரினத்திற்கு நீர்கிடைக்கின்றது.

இவை இரண்டிற்க்கும் ஆதாரம் மழை நீர்மட்டுமே, இவைகள் அனைத்தும் உலகில் மூன்று விழுக்காடு மட்டுமே உள்ளது, இதை மட்டுமே உயிரினங்கள் குடிப்பதற்க்கென்று பயன்படுத்துகின்றன.

ஆனல் இன்று உலகில் பரவலாக கடல் நீரினை குடிநீராக மற்றும் முறையில் குடிநீர் பெறப்படுகிறது. இதில் செலவு அதிகம் எற்படும்.

நிலத்தடிநீர் பற்றாக்குறை

உயிரினங்களின் நீர் தேவை முழுவதம் பூர்த்தி ஆகாமை நீர்பற்றாக்குறை எனப்படுகிறது. மழைபொழியாக் காலங்களில் உயிரினம் நிலத்தடி நீரினை மட்டுமே கொண்டு வாழும், இக்காலங்களில் ஆற்றிலும் நீர் இருப்பதிலலை,எனவே நீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது இதையே நீர்பற்றாக்குறை என்கிறோம்.

நிலத்தடிநீரின் பற்றாகுறைக்கான காரணங்கள்

  • நிலத்தடி நீரினை அளவுக்கு அதிகமாய் பயன்படுத்துதல்.
  • பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பாலிதின் பொருள்க்களை புவி பரப்பின் மீது போடுதல்.
  • யூக்கலிப்டஸ் மற்றும் சீமைகருவேளை போன்றமரங்களை அதிகம் வளர்த்தல் மற்றும் வளரவிடுதல்.
  • மழைநீரினை தேங்கவிடாது ஓடவிடுதல்.
  • தார்சாலை சிமென்ட்சாலை, கான்கீரிட் கூரைகள் போன்றவற்றை பயன்படுத்தி மழை நீரினை புவிக்குள் செல்லவிடாது தடுத்தல்.
  • மழை நீரினை சேமிக்காமல் வீணாக்குதல்.
  • குளம்,ஆறு,குட்டை ஆகியனவற்றை தூர்வாராமல் விட்டுவிடுதல்.
  • மரங்களை அதிகமாய் வெட்டுதல்.

விளைவுகள்

நாம் இன்று பயன்படுத்க்கூடி இயற்க்கை செல்வங்கள் அணைத்தும் நமது முன்னோர்கள் நமக்காக பாதுகாத்து விட்டு சென்றது ஆகும்,எனவே அதை பாதுகாப்பது நமது கடமை ஆகும். நாம் இன்று வீணாக்ககூடிய குடிநீர் அனைத்தும் நாளைய தலைமுறைக்கு மிகுந்த துன்பத்தை உண்டாக்க கூடும்.

நாம் செலவழிக்கும் நிலத்தடிநீரினால் நாளைய தலைமுறை,நாம் இன்று கச்சா எண்ணெய்க்காக செலவழிக்கும் பணத்தை காட்டிலும் அதிகமாய் செலவழிக்ககூடும்.

அறிவியல் தீர்வுகள்

மழைநீர் சேகரிப்பு

மழைபொழியும் காலங்களில் மழை நீரினை வீணாக்காமல் மழைநினை சேகரிக்கும்முறை மழைநீர் சேகரிப்பு எனப்படும்

  • குளங்கள் மற்றும் ஏரிகள்,குட்டைகள் போன்றவற்றை சீர்செய்தல் மற்றும் தூர்வார்தல்.
  • வார்ப்பு பொருள்கள் மற்றும் இலகு பொருள்கள்,இரப்பர் போன்ற பொருள்களை அதிகம் பயன்படுத்தாமலும், புவிபரப்பின் மேல் போடாமல் பார்த்துகொள்வதால் மழைநீர் தங்குதடையின்றி நிலத்தடியை அடைகிறது.
  • மேடுகளில் வழிந்தோடும் நீரினை பிரைமேடு மற்றும் வட்டமேடு போன்றவற்றை அனைத்து மழைநீரை சேகரிக்கலாம்.
  • சாலை ஓரங்களில் அதிக அளவில் மழைநீரை ஓடவிடாது மழைநீர் சேகரிப்புத்தொட்டி அமைத்து மழைநீரினை சேகரிக்கலாம்.
  • மழைநீரினை ஓடவிடாதபடி தடுக்கும் மரங்களை அதிகம் வளர்க்கலாம்.
  • நிலத்தடிநீரினை அதிகமாக உறிஞ்சக் கூடிய சீமைக்கருவேளை மற்றும் யூக்கலிப்டஸ் போன்ற மரங்கள் வளர்வதையும் வளர்ப்பதையும் தடுக்கவேண்டும்.
  • வெட்டிவேர் மற்றும் புல் வகைகளை வளர்ப்பதன் மூலம் மழைநீரை சேகரிக்கலாம்.
  • மொட்டை மாடிகள் மற்றும் கூரைகளில் வழிந்தோடும் மழைநீரினை சேகரித்து கிணற்றிலோ அல்லது ஆழ்துளைகிணற்றிலோ விடலாம்.
  • மழைநீர் ஒன்றே இவை அனைத்திற்கும் சிறந்த தீர்வாகும்,எனவே மரங்களை அதிகம் வளர்த்து மழையை பெறுவோம்.

முடிவுரை

எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வென்பது அணைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கிடைக்கும்.எனவே நாம் அணைவரும் ஒன்றிணைந்து மழைநீரினை சேகரிப்போம்,நிலத்தடிநீரினை பெருக்குவோம்.

அரசு சட்டங்களையிட்டு இதை நிறைவேற்றுவது என்பது நடைமுறைக்கு செயல் ஆகாது,தனி மனிதன் ஒவ்வொருவரும் மனதார ஒன்றினைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என கொண்டு மழைநீரை சேமிப்போம்.

நன்றி: ஆ.காமராஜ் – மணற்கேணி