Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,812 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஜனாஸா (மய்யித்) சம்பந்தமான சட்டங்கள்

ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல் போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள்.

இன்னும் சில குடும்பங்களில் முஅத்தின்(மோதினார்) இமாம்(அஜ்ரத்)போன்றோரை அழைத்துவந்து மைய்யத்திற்க்கு செய்யவேண்டியதை செய்யுங்கள் என்று சொல்லி விட்டு அந்தகுடும்பத்தில் உள்ளவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள். இந்த நிலையைப் போக்கி இதன்உண்மையான நிலைகளை நமது சகோதரர்கள் புரிந்து செயல்பட வேண்டு மென்ற நன்நோக்கில்என்னால் முடிந்த வரை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இதை தொகுத்துள்ளேன்.

அதனால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் குடும்பத்தில் ஏற்ப்படும் மைய்யித்திற்க்காவது நாமே அதற்க்கு செய்யவேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்று எண்ணி இவைகளை நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும் அல்லாஹ் அதற்க்கு அருள்புரியவேண்டுமென துஆ செய்கிறேன் (ஆமீன்) தயவு செய்து இதில் குறைகள் இருப்பின் சுட்டிகாட்டுங்கன்;  இன்ஷா அல்லாஹ் திருத்தி கொள்கிறேன்

(குல்லு நப்சின் தாயிகதுல் மவ்த்) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அடைந்தேதீரும். (அல்குர்ஆண். 3ஃ185) என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்க ) இந்த உலகில் பிறந்தஅனைவருமே ஒரு நாள் இறப்பவர்கள்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது நமக்கு .முன்னர் வாழ்ந்த அனைவரும் இறந்தது போலவே நாமும் ஒரு நாள் இறப்போம்இ நம்மையும்ஒரு நாள் கப்ரில் வைப்பார்கள் என்பது உண்மை ஆனால் நாம் எங்கு? எப்படி? எப்போது? இறப்போம் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிற மறைவான ஞனத்தில் உள்ளதாகும் . எனவே நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ள இன்பங்களை தகர்த்தொழிக்கக்கூடிய (மரணத்) தைய அதிகமதிகம் நிணைவு கூருங்கள்(திர்மிதி)என்ற சொல்லிற்கிணங்க ங்மரணத்திற்குப் பின்னருள்ள வாழ்க்கைக்காக அல்லாஹ்வும் ரசூலும் ஏவிய நற்செயல்களை அதிகம் கடை பிடித்து அவர்கள்தடுத்துள்ள காரியங்களை தவிர்த்துக் கொள்வது நம் அனைவர்கள் மீதும் கடமைய கடமையாகும். ஆகவே ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டியகடமைகள் பல உள்ளன அவைகள் குறித்து இன்ஷா அல்லாஹ் கானலாம்

  1. மைய்யத்தின் கண் திறந்து இருந்தால் அதைக் கசக்கி மூட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் அபூஸலமா(ரலி)அவர்கள் இறந்தபோது அவர்களின் கண்களை கசக்கி மூடி விட்டு கூறினார்கள் உயிர்கைப்பற்றப்படும்போது பார்வை அதை பின்பற்றி (நிலை குத்தி) நின்றுவிடுகிறது என்று கூறினார்கள் (முஸ்லிம்)
  2. இறந்த உடனேயே அந்த மைய்யித்து விகாரம் அடையாத அளவுக்கு உடல் சூட்டோடு இருக்கும்போதே கை கால்களை இலகுபடுத்தி சீராக படுக்கவைக்கவேண்டும். அதோடு அந்த மைய்யத்தின் வயிறு ஊதாமல் இருப்பதற்காக சற்று கன கனமான பொருளை வயிற்றில் வைக்க வேண்டும்.
  3. மைய்யித்தின் உடல் முழுதும் ஆடையால் மறைக்கவேண்டும். நபி(ஸல்)அவர்கள் இறந்த போது கோடு போட்ட ஒரு ஆடையால் உடல் முழுக்க மூடி மறைக்கப்பட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் அஅறிவித்தார்கள் (ஆதாரம்: புஹாரி முஸ்லிம்)
  4. குளிப்பாட்டி ஆடையிட்டு (கபனிட்டு) ஜனாஸ தொழுகை நடத்தி முடித்து அடக்கம் செய்யும் வரை எல்லாவற்றையும் விரைவாகச் செய்ய வேண்டும் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் வேகம் காட்டுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் : புஹாரி,முஸ்லிம்)
  5. எந்த ஊரில் அவர் இறந்தாரோ அதே ஊரில் அவரை அடக்கம் செய்ய முயற்ச்சிக்க வேண்டும் உஹது போரில் கொல்லப்பட்ட(ஷஹீதான)சஹா ஹாபாக்களை இடம் மாற்றாமல் அந்த இடத்திலேயே அடக்கம் செய்யுமாறு நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள்  (ஆதாரம்:திர்மிதி. அபூதாவுத், நஸஈ,இப்னு மாஜா)

ஜனாஸாவை குளிப்பாட்டுதல்

ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் தொழுகை நடத்துவது வரை உள்ளவற்றை சிலர் செய்வதன் மூலம் மற்றவர்களின் மீதான கடமை நீங்கிவிடும். இதற்குதான் (ஃபர்ழ் கிஃபாயா) என்றுசொல்லப்படும் எவருமே இந்த கடமைகளை செய்யாதபோது எல்லோருமே குற்றவாளிகளாக தண்டிக்கப் படுவோம் . ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் அடக்கம் செய்வது வரை கலந்து கொண்டவரின் நன்மைபற்றி நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் கூறி இருக்கிறார்கள்.

ஒருவர் தான் இறந்த பின் நீங்கள் தான் என்னை குளிப்பாட்டவேண்டும் என்று (வஸிய்யத்)மரண சாசனம் எழுதி வைத்திருந்தால் அவர்தான் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு அதிகஉரிமை பெற்றவர். அப்படி வஸிய்யத் செய்யாதபட்சத்தில் இறந்தவருக்கு மிக நெருக்கமான உறவுமிக்கவர் உரிமை பெறுவார், ஏனெனில் அவர்கள்த தாம் அதிக அக்கறை கொள்வர். பெண்ணுக்கும் வஸிய்யத் விஷயத்தில் ஆணைப் போன்றே.

கணவன் தன் மனைவியையும் மனைவி தன் கணவனையும் குளிப்பாட்டலாம் . நபி(ஸல்)அவர்கள் தமது மனைவி ஆயிஷா(ரலி)அவர்களிடத்தில் கவலைப் படாதீர்கள் எனக்கு முன்னால் நீங்கள் இறந்து விட்டால் நானே உங்களை குளிப்பாட்டுவேன் என்று கூறினார்கள்(ஆதாரம் :அஹ்மத்)

அபூபக்கர்(ரலி) அவர்கள் நான் இறந்த பின் எனது மனைவிதான் பின் என்னை குளிப்பாட்டவேண்டும்என்று வஸிய்யத் செய்து இருந்தார்கள்.(ஆதாரம் : முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்)

ஏழு வயதிற்க்குட்பட்ட ஆண் அல்லது பெண் பிள்ளைகளில் யார் இறந்தாலும் அவர்களைதாய் அல்லது தந்தை குளிப்பாட்டலாம்.

  • ஆண் கள் மட்டுமே உள்ள இடத்தில் பெண் இறந்து விட்டாலோ அல்லது பெண்கள் மட்டுமேஉள்ள இடத்தில் ஆண் இறந்துவிட்டாலோ குளிப்பாட்டாமல் தயமம் அதாவது ஒருவர் தன் இரண்டுகை களையும் பூமியில் அடித்து அவ்விரு கைகளையும் அந்த ஜனாஸாவின் முகம் கைகளில் தடவவேண்டும்
  • காபிர் இறந்துவிட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அவரை குளிப்பாட்டுவதோ அடக்கம் செய்வதோ கூடாது இதுப்பற்றி அல்லாஹ்வே கூறுகிறான் அவர்களில் யாராவது இறந்துவிட்டால்அவருக்காக நீர் ஒருக்க காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம் இன்னும் அவர்களின் (கப்ரில்)அடக்கஸ்தலத்தில் அவருக்கு( பிரார்த்திப்பதற்க்காக) நிற்கவேண்டாம் (அல்குர்ஆண்.9 9ஃ84) என்று றுகூறுகிறான் தொழ வைப்பதே கூடாது என்று சொல்லும்போது மற்றதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை

மைய்யித்தை குளிப்பாட்டும் போது அதன் மருமப்பகுதிகள் யார் கண்களிலும் படாதவாறு மறைத்த நிலையிலேயே அதன் ஆடைகளை களைய வேண்டும். பிறகு மைய்யித்தை சற்று உயர்த்தி உட்கா கார வைத்து அசுத்தங்கள் வெளியாகும் வரை வயிற்றை நன்றாக அழுத்த வேண்டும் இந்த நேரத்தில் தண்ணீரை அதிகமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் .

மைய்யித்தை குளிப்ப பாட்டுபவர் தனது கையில் துணி அல்லது கையுறையை சுற்றிக் கொண்டு மைய்யித்தின் மர்ம உறுப்புக்களை சுத்தம் செய்ய வேண்டும். அந்த மைய்யத்து ஏழு வயதுக்கு மேற்ப்பட்டவராக இருந்தால் மர்ம உறுப்புகளை பார்க்காமலேயே கழுகவேண்டும். பின்பு (பிஸ்மில்லாஹ்) என்று கூறி தொழுகைக்கு ஒழு செய்வதுபோல ஒழு செய்து விட வேண்டும். ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் தனது மகள் ஜைனப்(ரலி ரலி)அவர்கள்) இறந்தபோது அவர்களை குளிப் பாட்டிய பெண்களிடம் அவரின் வலதுபுறத்தையும் ஒழு செய்யும் உறுப்புகளையும் முதலில் கழுகுங்கள் என்று கூறினார்கள்(புஹாரி, முஸ்லிம்)

மைய்யித்தின் வாயிலோ மூக்கிலோ தண்ணீரை செலுத்தக்கூடாது அதற்க்கு பதிலாக ஈரத்துணியை விரலில் சுற்றிக்கொண்டு மைய்யித்தின் இரு உதடுகளையும் லேசாக பிளந்து பற்களையும் மூக்குத் துவாரங்களையும் மெதுவாக தேய்த்து சுத்தம் செய்யவேண்டும். அதன் பிறகு இலந்த இலை அல்லது வாசனைப் பொருள் கலந்த தண்ணீரால் முகத்தையும் தாடியையும்கழுகவேண்டும் பிறகு எஞ்சிய தண்ணீரை வைத்து உடல் முழுதும் குளிப்பாட்ட வேண்டும்.

மைய்யித்தை குளிப்பாட்டும் போது வலது பக்கமாக ஆரம்பிக்கவேண்டும் என்று ஹதீஸ்வந்திருப்ப பதால் கை, கால்களை வலது பக்கமாக கழுவதால் ஆரம்பிக்க வேண்டும். இன்னும் ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை கழுவ வேண்டும். ஒவ்வொரு தடவையும் வயிற்றை அழுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மூன்று தடவைக்குமேலும் அசுத்தங்கள் வெளியாகி கொண்டிருந்தால் தேவைக்கேற்ப ஒற்றைப் படையாக கழுவிக் கொள்ளலாம் என ஹதீஸில் வந்திருக்கிறது.

கடைசியாக கழுகும்போது துர் வாடைகளை நீக்கிவிடுவதற்காக கற்பூரத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பலமுறை கழுகியும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் அந்த பகுதியில்பஞ்சை வைத்து அடைத்து விட்டு அசுத்தம் வெளியான அந்த இடத்தை மட்டும் கழுகிவிட்டு மறுபடியும் ஒழு மட்டும் செய்து விட்டால் போதுமானது குளிப்பாட்ட வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் கஃபன் அணிவித்த பிறகும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் மறுபடியும் கழுவி கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மைய்யித்தை குளிர்ந்த நீரால் மட்டுமே குளிப்பாட்டவேண்டும். அசுத்தங்கள் அதிகம் இருந்து சுடு தண்ணீரால்தான் போக்கமுடியும் என்றிருந்தால்மட்டுமே சுடு தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். அதுபோலவே அசுத்தங்களை நீக்க வாசனை சோப்புக்களை உபயோகிக்கலாம் . ஆனால் தோல் கிழியும் அளவுக்கு அழுத்தி தேய்க்க கூடாது . பல்லுக்கு மிஸ்வாக்கை பயன்படுத்துவது சிறப்பாகும்.

மைய்யத்திற்கு மீசை, நகங்கள் சராசரிக்கு மேல் வளர்ந்திருந்தால் வெட்டலாம், (அக்குல்மர்மப்பகுதியின் முடிகளை வெட்டக்கூடாது

பெண் மைய்யித்தின் கூந்தலை மூன்று பின்னல்களாக பின்னி முதுகு பக்கம் தொங்க விடவேண்டும். குளிப்பாட்டியபின் மைய்யித்தின் மேல் உள்ள ஈரத்தை துணியால் ஒத்தி எடுக்கவேண்டும்

இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் தண்ணீராலும் இலந்த இலைப்பொடியினாலும் மட்டுமே குளிப்பாட்டவேண்டும், வாசனைத்திரவியங்களைப் பயன்படுத்தக்கூடாது,ஆணாக இருந்தால் தலையை மூடக்கூடாது. ஹஜ்ஜில் இஹ்ராம் கட்டிய நபித்தோழர் ஒருவர்இறந்தபோது வாசனைத் திரவியங்களை பயன்படுத்தாமலும் தலையை மூடாமலும் கஃபனிடுங்கள்ஏனெனில் மறுமை நாளில் அவர் அதேகோலத்தில் தல்பியாக் கூறியவராக எழுப்பப்படுவார் என்றுநபி(ஸல்) அவர்கள் கூ றினார்கள் (புஹாரி, முஸ்லிம்)

போரில் வீர மரணம் அடைந்த ஷஹீதின் ஆயுதங்கள் மற்ற போர் சம்மந்தப்பட்ட போருட்க்களை எடுத்துவிட்டு குளிப்பாட்டாமல், தொழகை நடத்தாமல் அவர் உடுத்தியிருந்தஆடையுடன் அடக்கம் செய்யவேண்டும். உஹது போரில் இறந்த சஹாபாக்களுக்கு நபி (ஸல்)அவர்கள் தொழ வைக்க வில்லை (புஹாரி,முஸ்லிம்)

தாய் வயிற்றில் உள்ள குழந்தை நான்கு மாதம் முடிந்து விழுந்துவிடுமானால் அந்தகுழந்தைக்கு பெயர் வைத்து குளிப்பாட்டி தொழுகை வைத்து அடக்கம் செய்யவேண்டும்,ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு தாயின் வயிற்றில் மூன்றாவது நாற்பதில்பிண்டமாக இருக்கு கும் அக் குழந்தைக்கு வானவர் உயிர் ஊதுவார் என்று கூறினார்கள். (முஸ்லிம்) நான்கு மாதத்திற்க்கு முன் பாக விழுந்துவிட்டால் அது உயிரற்ற வெறும் பிண்டம் என்பதால்குளிப்பாட்டவோ தொழுகை நடத்தவோ அவசியமில்லை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அடக்கம்செய்யலாம்.

தண்ணீர் கிடைக்காவிட்டாலோ அல்லது உடல் கருகி இருந்தாலோ அல்லது உடல் வெடித்துலோ சிதறி கிடந்து குளிப்பாட்ட முடியாத நிலையில் இருந்தால் ஒருவர் தன் கைய்யால் மண்ணில்அடித்து மைய்யித்தின் முகத்தையும் கையையும் தயம்மம் முறையில் தடவவேண்டும்.

மைய்யித்தின் உடலில் காணப்படும் ஏதாவது விசயம் நல்லதாக இல்லாவிட்டால்குளிப்பாட்டியவர் அல்லாஹ்வுக்கு பயந்து அதை வெளியில் யாரிடமும் சொல்லகூடாது, இஸ்லாமியசகோதரர் ஒருவரை குளிப்பாட்டி அவரில் காணப்படும் குறைகளை குளிப்பாட்டியவர் மறைத்துவிட்டால் அல்லாஹ் அவரை நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.(ஹாக்கிம்)

கஃபனிடுதல்

கஃபன் என்பது மரணித்தவரை குளிப்பாட்டி மூடி மறைப்பதற்கான ஆடைக்கு சொல்லப்படும்.மைய்யித்தை கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயக் கடமையாகும். கஃபனாடை மைய்யித்தின்சொந்த செலவில் இருக்கவேண்டும். இஹ்ராம் கட்டிய நிலையில் இறந்தவரை அவர் அணிந்திருந்த இரண்டு ஆடைகளிலேயே கபனிடுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.: இறந்தவர் கடனாளியாக இருந்தால் அல்லது தனது சொத்தை இன்னின்வர்களுக்குகொடுக்க வேண்டும் என்று மரண சாசானம் செய்திருந்தால் கடனையும் வஸியத்தையும் நிறைவேற்றிவிட்டு மைய்யித்தை அடக்கம் செய்வதற்க்கு தேவையான செலவு தொகையையும் எடுத்துகொண்டவயான பின்னரே வாரிசுதாரர்கள் அம்மய்யித்தின் சொத்தைப் பங்கிட வேண்டும். கஃபனிட்டுவதற்கானபொருளாதாரம் இல்லாத நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை அவரின் உறவினர்கள் கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயமாகும். உறவினர்கள் இல்லாதபோது அல்லது இருப்பவர்கள்வசதியற்றவர்களாக இருந்தால் (பைதுல்மால்) பொது நிதியகத்திலிருந்து அதற்கான பொறுப்பைஏற்று நிறைவேற்ற வேண்டும். அப்படி ஒரு நிதியகம் இல்லையானால் அந்த ஊரிலுள்ளோர்அதற்கான ஏற்பாட்டினை செய்வது கட்டாயமாகும்.

கஃபனிடுவதற்கு உடல் முழுக்க மறைக்கும் ஒரே ஒரு ஆடை இருந்தால் போதுமானது.எனினும் ஆண்களுக்கு வெள்ளை நிறத்தில் மூன்று ஆடைகளைக்கொண்டு கபனிடுவது விரும்பத்தக்கதாகும்

நபி(ஸல்)அவர்கள் மூன்று வெள்ளை ஆடைகளில் கஃபனிடப்பட்டார்கள்.(புஹாரி , முஸ்லிம்) அந்த ஆடைகளை கற்பு , பூரம் அல்லது சாம்பிரானி புகையால் வாசனைப்படுத்திக் கொள்ளவேண்டும்.பிறகு அந்த ஆடைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக விரித்து சந்தனம் மற்றும் வாசனைத்திரவியங் களை அந்த ஆடையில் தெளித்து அதன் பின்பு மைய்யித்தை அந்த ஆடையின் மேல்நிமிர்த்திக் கிடத்தி வைக்கவேண்டும்;. அப்போது நறுமணத்தால் ஈரப்படுத்தப்பட்ட பஞ்சை மைய்யித்தின் மல வாயிலில் வைக்கவேண்டும். அதன் மூலம் கெட்ட வாடைகள் வராமல்தடுக்கலாம். அதன் பிறகு அந்த பஞ்சையும் இறந்தவரின் மர்ம உறுப்புகளையும் சேர்த்து கட்டுவதுவிரும்பதக்கதாகும்.

முகதுவாரப்பகுதிகளான கண்.மூக்கு.உதடு.காது. ஆகியவற்றின் மீதும் சஜ்தாவில் படும்ப்உறுப்புக்கள் மீதும் சந்தனம் அல்லது கற்பூ ரம் போன்ற நறுமணப்பொருள்களை வைத்தும் கஃபனிடுவது சிறந்ததாகும். உடல் முழுவதும் வாசனை பூசினாலும் தவறு இல்லை நபித் தோழர்கள் இப்படியும் செய்திருக்கிறார்கள்.

வலது பக்கமாக உள்ள முதல் துணியை எடுத்து மடக்கிய பிறகு இடது பக்கமாக உள்ளதுணியை மடக்கி போர்த்த தவேண்டும். அதன் பிறகு அதுவரை அவர் மறுமப்பகுதியை மறைத்திருந்தமப்துணியை நீக்கி வி விடவேண்டும். பிறகு இரண்டாம், மூன்றாம் துணிகளை மடக்கிப் போர்த்த வேண்வேண்டும், பிறகு கஃபன் அவிழ் ந் துவிடாமல் இருப்பதற்காக கஃபனை அழுத்தமாக முடிச்சு போடவேண்டும். தலை முதல் கால் வரைக்கும் 5 அல்லது 3 முடிச்சிடுவது சிறப் பாகும். கப்ரில் வைத்தஉடன் முடிச்சுகளை அவிழ்த்து விடவேண்டும்.

பெண்களுக்கு ஐந்து ஆடைகள் கொண்டு கஃபனிடவேண்டும்ளை
1. கீழாடை
2. முகத்தை மூடுவதற்கு முந்தானை
3. மார்பு பகுதிக்கு சட்டை போன்ற ஒரு ஆடை
4–5. உடல் முழுதும் மறைக்கும் இரண்டு ஆடைகள்.
மற்ற முறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும்ஒரேமாதிரிதான் .

ஜனாஸா தொழுகை
ஜனாஸா தொழுகை என்பது ஃபர்லு கிபாயா ஆகும். மைய்யித் ஆணாக இருந்தால் அதன் தலைக்கு நேராகவும் பெண்ணாக இருந்தால் நடுவிலும் நின்று இமாம் தொழ வைக்கவேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் இப்படிதான் செய்தார்கள் என்ற செய்தி அபூ தாவூத் ஹதீஸ் கிதாபில்காணமுடிகிறது. இமாம் மஃமூம்களை விட சற்று முந்தி நிற்க வேண்டும். இடமில்லாமலிருந்தால்மஃமூம்கள் இமா முக்கு இடப்புறத்திலும் வலப்புறத்திலும் நின்றுகொள்ளலாம்.: ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் சொல்லவேண்டும். தக்பீர்களுக்கிடையே கையைஉயர்த்த வேண்டியதில்லை.

முதல் தக்பீருக்கு பின் சூரதுல் ஃபாத்திஹா (அல்ஹம்து சூரா)ஓதிக்கொள்ளவேண்டும் .

இரண்டாம் தக்பீருக்கு பின் அத்தஹியய்யாத்தில் ஓதப்படும் ஸலவாத்தை ஓதவேண்டும்; (அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா ஸல்லைத்த அலாஇப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத் . அல்லாஹ_ம்ம பாரிக் அலாமுஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீமஇன்னக ஹமீதும் மஜீத்) என்று கூற வேண்டும். அல்லது (அல்லாஹ_ம்ம ஸல்லி அலா முஹம்மத்என்று சொன்னால்கூட போதுமானதாகும்.

மூன்றாவது தக்பீருக்கு பின் ஹதீஸில் வரும் துஆக்களை ஓத வேண்டும் (அல்லாஹ_ம் மக்ஃபிர் லஹ_ வர்ஹம்ஹ_ வ ஆஃபிஹி வஃபு அன்ஹ_ வ நக்கிஹி மினல்கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத்தனஸ் வ அப்தில்ஹ_ தாரன் கைரம் மின் தாரிஹிவ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி வ ஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹ_ல்ஜன்னத வ அயித்ஹ_ மின் அதாப அதாபில் கப்ரி வமின் அதாபின்னார் )என்று ஓதிக்கொள்ளவேண்டும்இது முஸ்லிமில் இடம்பெரும் துஆவாகும்

நான்காம் தக்பீருக்குபின் சற்று அமைதியாக இருந்துவிட்டு வலது பக்கத்தில் மட்டும் ஸலாம்கொடுக்கவேண்டும். ( (ஹதீஸ் . ஹஹாக்கிம்)

ஜனாஸா தொழுகைக்கு தாமதமாக வருபவர். இமாம் ஸலாம் கொடுத்த பின் தவறிவிட்டதைபூர்த்தி செய்யவேண்டும்ஜனாஸா தொழுகையை தவறிவிட்டவர் அடக்கப்பட்டிருக்கும் கப்ரில் நின்றுகூட தெழலாம்.தொழும்போது கிப்லாவிற்கும் இவருக்கும் இடையில் கப்ர் இருக்கவேண்டும் இப்படி நபி (ஸல்)அவர்கள் தொழுது இருக்கிறார்கள்(புஹாரி முஸ்லிம்)நான்கு மாதம் பூ ர்த்தியான பிறகு வயிற்றில் உள்ள குழந்தை வெளியாகி வெளியாகிவிட்டால் அதற்காக தொழுகை நடத்தவேண்டும். குறை மாதத்தில் வெளியாகி வெளியாகிவிட்ட குழந்தைக்கு தொழுகை நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை அதன் பெற்றோருக்கு பாவ மன்னிப்பு இறை கிருபைகிடைக்க துஆ செய்யவேண்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் ( ஆதாரம் அபூ தாவூத்)

ஒரு இஸ்லாமிய சகோதரர் இறந்து. அவருக்கு ஜனாஸா தொழுகை . வைக்கப்படாமல் அடக்கம்செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நிறைவேற்றுவது விரும்பத் தக்க கதாகும். தாகும்.வழிப்ப பறி கொள்ளையர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவருக்கு இஸ்லாமிய பொது மக்கள் தொழுகை நடத்தலாம், ஆனால் ; ஊர் முக்கியஸ்த்தர்களும் அறிஞர்களும் அந்த ஜனாஸாதொழுகையில் கலந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்ததாகும் இதன் மூலம் தற்கொலை எண்ணத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். ஜனாஸா தொழுகையை பள்ளிக்கு குள்ளேயே வைத்து நடத்துவது கூடும். இப்படி நபி(ஸல்) அவர்கள் செய்து இருக்கிறார்கள் (முஸ்லிம்)

ஜனாஸா தொழுகைக்கு பிரத்தியேகமாக பள்ளிக்குவெளியே அடக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ஓர் இடம் அமைத்துக்கொள்வது நபி வழியாகும்.

ஜனாஸாவை சுமப்பதும் அடக்கம் செய்வதும்
ஜனாஸாவை தோள் மீது சுமந்து செல்வது சுன்னத்தாகும். ஜனாஸாவை தாமதப்படுத்தாமல் விரைவாக கொண்டு செல்லுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்.ஜனாஸாக்கு முன்பாக, பின்பாக, வலது, இடது பக்கமாக எப்படி வேண்டுமானாலும்செல்லலாம் இப்படி செல்ல ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது (அஹ்காமுல் ஜனாயிஸ் அல்பானீ)ஜனாஸாவை பின்பற்றிச்செல்லும் யாரும் அந்த ஜனாஸாவை பூமியில் வைப்பதற்க்கு முன்பாக அமர்வது கூடாது அப்படி அமர்வதை நபி(ஸல்)அவர்கள் தடுத்து இருக்கின்றார்கள்.தொழக்கூடாத நேரங்களில் அடக்கமும் செய்யக்கூடாது. இது சம்மந்தமாக உக்பா பின் ஆமிர்(ரழி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது

மூன்று நேரங்களில்தொழக்கூ டாது என்றும் . எங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூடாது என்றும் நபி(ஸல்)அவர்கள் தடை செய்தார்கள் . அந்நேரங்கள் !
1. சூரியன் உதிக்கும் போது.
2. சூரியன் மத்தியில் இருக்கும் போது.
3. சூரியன் மறையும் போது.
என்று அறிவிக்கப்பட்ட ஹதீஸ் . (முஸ்லிமில் லிமில்) பதிவாகி உள்ளது தடை செய்யப்பட பட்ட இந்த மூன்று நேரங்கள் தவிர மற்றபடி இரவு பகல் எந்த நேரமும் மைய்யத்தை அடக்கம் செய்யலாம்.

பெண்ணை கப்ரில் வைக்கும்போது பெண்ணின் எந்த உறுப்பு பும் வெளியில் தெரியாதவாறும் கப்ரின் மேல் பாகத்தை துணியால் மறைப்பது சுன்னத்தாகும். மைய்யித்தை கப்ரில் இறக்கும்போது;கால் பகுதி வைக்ககப்படும் பக்கமாகவே இறக்கி மெதுவாக வைக்கவேண்டும் .கப்ரை தோண்டிவிட்டு அந்த கப்ருக்குள்ளேயே கிப்லா திசையில் ஒரு குழி தோண்டி அதில்தான் மைய்யித்தை வைக்கவேண்டும். இதற்க்குதான் (லஹ்த்) என்று சொல்லப்படும். சில இடங்களில்குழியின் மையப்பகுதியில் தோண்டி மையத்தை அடக்கம் செய்வாவார்கள் இதற்கு என்றுசொல்லப்படும் இப்படிச் செய்யக்கூடாது. இது பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறும்போது நமக்கு லஹ்த் ” ம் மற்றவர்களுக்கு ‘ ஷக்கு கு’ ம் என்று கூறினார்கள் (அபூத தாவூத்) குறிப்பு ! இது பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டால் எளிதில் புரியும்.துர் நாற்றம் வெளியில் வர வராமலும் . கிழித்து தின்னும் மிருகங்கள் தோண்டி எடுக்காமல்இருப்பதற்காகவும் கப்ரை ஆழமாக தோண்டி பாதுகாப்பாக அடக்கம் செய்வது சுன்னத்தாகும்.மைய்யித்தை குழியிலே வாங்கி வைப்பது அந்த மைய்யித்தால் வஸிய்யத் செய்யப்பட்டவரோஅல்லது சொந்தக்காரர்களோ அல்லது யாரேனும் ஒரு முஸ்லிம லிம் அந்த பொறுப்பை ஏற்கவேண்டும்.

மைய்யித்தை கப்ரில் வாங்கி வைப்பவர்( பிஸ்மில்லாஹி வஅலா சுன்னத்தி ரசூலில்லாஹி) என்று சொல்லிக்கொள்ளவேண்டும் இப்படிதான் நபி(ஸல்)அவர்கள் செய்தார்கள் (அபூ தாவூத்) மைய்யித்தின் வலது பாகத்தை சிறிது சரித்து கிப்லாவை நோக்கி கப்ரில் வைக்க வேண்டும் நீங்கள் இறந்தாலும் உயிருடன் இருந்தாலும் உங்கள் கிப்லா கஃபாதான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(பைஹகீ)

(மைய்யித்தின் தலைக்கு தலையனைப்போல் கல் மண் போன்ற எதையும் வைப்பது கூடாது.இஹ்ராம் அநிந்து இறந்தவரைத் தவிர மற்ற யாரையும் முகத்தைத் திறந்த நிலையில் அடக்கக்கூடாது. அடக்கிய பிறகு வந்திருக்கும் ஒவ்வொரும் குழியில் மூன்று முறை மண்ணள்ளிப் போட வேண்டும் இப்படி நபி(ஸல்)அவர்கள் செய்துள்ளார்கள் (இப்னு மாஜா) பிறகு கப்ரை மூட வேண்டும் அடக்கம் செய்யப்பட்ட கப்ருக்கும் சாதாரண இடத்திற்கும் வித்தியாசம் தெரிவத தெரிவதற்காக கப்ரை ஒரு ஜான் அளவுக்கு மண்ணை உயர்த்துவது கூடும். இப்படிதான் நபி(ஸல்)அவர்களின் கப்ருன் இருந்தததாக புஹாரியில் ஒரு ஹதீஸ் இருக்கிறது. மேலும் இது கப்ருதான் என்று தெரிந்து கொள்வதற் காக தலைமாட்டில் ஒரு கல்லை வைப்பது சுன்னத்தாகும். உஸ்மான் பின் மழ்வூன்(ரழி) அவர்களின் கப்ரில் இப்படி செய்யப்பட்டது (அபூதாவூத்)

கப்ரின் மீது சுண்ணாம்பு, சந்தணம் பூசுவது, அதனை உயர்த்துவது, கட்டடம் கட்டுவது,பிறந்த, இறந்த தேதி அல்லது வேறு ஏதேனும் செய்தி எழுதுவது, அதன் மீது அமர்வது,மிதிப்பது, சாய்வது போன்ற அனைத்தையும் நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள் (அபூ தாவூத்)

ஒரு கப்ரில் ஒரு மைய்யத்திற்க்கு மேல் வைக்கக்கூடாது ஒவ்வொருவரையும் தனித்தனியாகஅடக்கம் செய்யவேண்டும். ஒரே நேரத்தில் அதிகமானோர் இறந்து தனித்தனி கப்ரு தோண்டிஅடக்கம் செய்ய முடியாத சூழ்நிலையில் நீளமாக ஓடை போன்று குழியைத் தோண்டி மைய்யித்தைஅடக்கம் செய்யலாம். அப்போதுகூட ஒரு மைய்யத்திற்கும் மற்றொரு மைய்யத்திற்கும் இடையில்சிறிதளவு தடுப்பை ஏற்படுத்தவேண்டும். இப்படிதான் உஹது போரில் ஷஹீதான வீர சஹாபாக்ஹகளை நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்ய உத்தவிட்டார்கள்: இறந்தவரின் வீட்டாருக்கு மற்ற உறவினர்கள் அல்லது சகோதரரர்கள் சாப்பாடு சமைத்துக்கொடுப்பது மார்க்கம் வலியுறுத்திய சுன்னத்தாகும். இறந்தவர் வீட்டில் சமைக்க சொல்லி சாப்பிடக்கூடாது.
ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி)அவர்கள் மரணித்தபோது ஜஃபருடைய குடும்பத்தாருக்குஉணவு தயார்செய்து கொடுங்கள் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்(முஸ்லிம்).எனவே நபிவழியைப் பின்பற்றி மரணம் சம்பவித்த வீட்டாருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர. அந்த வீட்டில் இறைச்சியும் சோறும் சமைப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இறந்தவர் வீட்டில் சாப்பாடு தயாரிக்கச் சொல்லி அங்கு சென்றவர்களெல்லாம்சாப்பிடுவதையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அடிக்கடி அந்த வீட்டில்கூட்டம் கூடுவதையும் நாங்கள் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட ஒப்பாரி யின் வகைகளில் ஒருவகையாகவே கருதினோம் என்று நபித்தோழர்கள் கூறுகின்றார்கள் (அபூதாவூத்)
ஆண்கள் மட்டுமே கப்ருகளை தரிசிப்பது (ஜியாரத் செய்வது)சுன்னத்தாகும். இதன்மூலம் இறந்தவர்களுக்காக துஆ செய்ய முடியும் அதோடு மரணம் பற்றிய சிந்தனை மனதில் ஏற்ப்பட்டு பாவம் செய்யாமல் இருப்பதற்க்கும் மறுமையை நினைவுபடுத்த இது வழிவகுக்கும்.கப்ரு களை தரிசிக்ககூடாது என்று உங்களை நான் தடுத்திருந்தேன் இப்போது நீங்கள்ஜியாரத் செய்யலாம் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் (முஸ்லிம்)

பெண்கள் கப்ருகளை தரிசிக்கச் செல்லவே கூடாது அப்படிச் செல்வது பாவமாகும்” கப்ருகளை தரிசிக்கும் பெண்களை நபி(ஸல்)அவர்கள் சபித்துள்ளார்கள் “”(திர்மிதி, அபூதாவூத், (நஸஈ இப்னு னுமாஜா, அஹ்மத்) பெண்கள் இயற்க்கையிலேயே பலகீனமானவர்கள் இதுபோன்ற பலகீனமானவர் இழப்புகளை தாங்கிக் கொள்ளாமல் கன்னத்தில் அடித்து கொள்வது ஒப்பாரிவைப்பது சட்டைகளைக் கிழித்துக் கொள்வது போன்றவற்றை செய்துவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மறுமையைப் பற்றி நினைக்கும் அந்த இடங்களில் பெண்கள் வருவதால் வேறு சில குழப்பங்கள் நிகழ சாத்தியங்கள் இருக்கிறது என்பதால் ஹராமாக்கப்பட்டிருக்கலாம். (இன்று தர்ஹாக்களில் கண்கூடாக பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றுதான்) அடுத்து கப்ரை தரிசிப்பவர் அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன் ன்ஷா அல் லாஹ_ பிகும்லாஹிகூன் . என்று செல செல்லவேண்டும் நபி(ஸல்)அவர்கள் இப்படி செல்லும்படி கூறினார்கள்;(முஸ்லிம்) இது அல்லாமல் கப்ருக்குச் சென்று துஆ கேட்பதும் அதைக் கண்ணியப்படுத்தும்எண்ணத்தில் பணிந்து குனிவதும் அதைத் தடவி முத்தமிடுவதும் இணைவைத்தலாகும். ஷிர்க்என்ற எண்ணம் இல்லாமல்தான் இதையெல்லாம் செய்கிறோம் என்று சொல்லி யாரும் வாதிட முடியாது எல்லோரின் உள்ளத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவன் எந்த ஒரு முஸ்லிமும் பித்அத்திற்குஆளாகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்

ஆறுதல் கூறுதல்

இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது கண்டிப்பாக மார்க்கம் வழியுறுத்திய சுன்னத்தாகும்அதுவும் ஹதீஸில் வரக்கூடிய வார்தை தைகளைக்கொண்டே ஆறுதல் சொல்வது சிறப்பாகும்.(இன்ன லில்லாஹி மா அகத வலஹ_ மா அஃதா வகுல்லு ஷையின் இன்தஹ_ பிஅஜலின்முஸம்மா ஃபஸ்பிர் வஹ்த்தஸிப்) பொருள்:- நிச்சயமாக இறைவன் எதனை எடுத்துக் கொண்டானோஅது அவனு அவனுக் க் குரியதே யதே இன்னும் எதனை கொடுத்துள்ளானோ அதுவும் அவனு அவனுக்குரியதே அவனிடத் தில் எல்லாவற்றுக்கும் ஒரு தவணையுண்டு (அந்த தவணை முடியும்போது அவன் அதைஎடுத்துக் கொள்வான் அதுதான் நியதி எனவே) நன்மையை நாடி பொறுத்து கொள்ளுங்கள் என்றுஆறுதல் சொல்வதுதான் நபிவழி (புஹாரி, முஸ்லிம்) இன்னும் ( பிவழி அஃழமல்லாஹ_ அஜ்ரக ரக்) இந்த;) சோதனைக்காக அல்லாஹ் உங்களின் மறுவுலக கூலியை மகத்தானதாக்கட்டும் என்றும் இன்னும் (அஹ்ஸ னல்லாஹ_ அஜ்ரக்)உங்களின் கூலியை அல்லாஹ் அழகானதாக மாற்றிவிடட்டும்என்றும் ஆறுதல் சொல்லலாம்.

ஒப்பாரி வைக்காமல் வார்த்தை வெளிப் படாமல் அழலாம். நபி(ஸல்)அவர்களின் மகன்இப்றாஹீம் இறந்தபோது கவலையுடன் நபி(ஸல்)அவர்கள் அழுதார்கள் ஆனால் ஒப்பாரி வைக்கவில்லை (புஹாரி, முஸ்லிம்)ஒப்பாரி வைப்பது இஸ்லாத்தில் ஹராமாகும். ஒப்பாரி என்பது ஒரு மய்யித்தை வீட்டில்வைத்துக் கொண்டு அல்லது அடக்கியதற்குப் பிறகு இறந் தவர் செய்ததையும் பேசியதையும்சாதித்ததையும் சொல்லிச் சொல்லி அழுவதற்கு சொல்லப்படும். இப்படிச் செய்வது இஸ்லாத்தில்தடுக்கப்பட்டதாகும். துக்கம் தாங்கமுடியாதவன் என்று காட்டிக்கொள்வதற்காக ஆடைகளைக்கிழித்துக்கொள்வது கன்னத்தில் அடித்துக்கொள்வது நெஞ்சில் அடித்துக்கொள்வது மொட்டைபோட்டுக்கொள்வது இவையனைத்தும் மார்க்கத்திற்கு எதிரான அறியாமைக் காலத்து பழக்கமாகும்நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணத்தில் அடித்துக் கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக் காலத்து மக்கள் கூறிய வார்த்தைகளைப்போல் சில வார்த்தைகளைக்கூறி ஒப்பாரி வைப்பவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்)

இறந்தவரின் குடும்பத்தினர் குளிக்காமல், நல்ல ஆடைகள் அணியாமல், வியாபாரம் செய்யாமல் மனைவி மக்களுடன் சந்தோசமாக இல்லாமல் துக்கம் அனுசரித்துக் கொண்டிருப்பதை இஸ்லாம் கண்டிக்கின்றது. இறந்தவரின் மனைவியைத் தவிர வேறு எவரும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் அனுசரிக்கக்கூடாது என நபி(ஸ ல்)அவர்கள் கூறியுள்ளார்கள். இறந்தவரின் மனைவிமட்டும் நாலு மாதம் பத்து நட்கள் துக்கம் அனுசரித்தாக வேண்டும். அதே சமயம் அவர் இறக்கும்போது அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பெற்றெடுக்கும் வரைதான் துக்கம்அனுசரிக்கவேண்டும். இதற்குத்தான் ” இத்தா “” என்று இஸ்லாம் கூறுகிறது.ஆனால் தற்போது நம் சமுதாயத்தில் சில ஊர்களில் 40 நாட்கள் தனிமையில் இருந்துவிட்டால்இத்தா முடிந்துவிட்டது என்று கருதுகிறார்கள். இது இஸ்லாம் காட்டிய வழிமுறை அல்ல.

இன்னும் இதுபோன்ற பித்அத் துகளில் ஒன்றுதான் ஜனாஸாவைத் து}க்குவதற்க்கு பயன்படுத்தும்(சந்து}ஜனாஸாப் பெட்டியின் மீது பச்சை சைத் துணி விரிப்பது, தூக்கித் செல்கிறபோது ஷஹாதா கலிமாவை சப்தமிட்டுக் கொண்டு செல்வது, ஜனாஸா தொழுகைஹமுடிந்தவுடன் இமாம் துஆச் செய்ய மற்றவர்கள் ஆமின் கூறுவது அடக்கி முடிந்த பின்னர் கப்ரின் தலைமாட்டில் இருந்து கொண்டு தல்கீன் என்ற பெயரில் பலருக்கும் புரியாத மட்டுமின்றி அதை ஓதுபவர்களில் கூட பலருக்கு அது என்ன என்று தெரியாத சில அரபி வார்த்தைகள் கூறுவது போன்ற ஏராளமான பித் அத்கள் நடைபெறுகின்றன. இறந்தவர் வீட்டில் நடக்கும் அனாச்க்சாரங்களை ஒரு புத்தகமாகூட வெளியிடலாம். எனவே ஒவ்வொரு குடும்பத்தாரும் இந்த விசயங்களைப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியமாகும். ஒருவர் இறந்துவிட்டால் மோதினார் தான் வரவேண்டும் என்றில்லாமல் அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். ஆகவே மேற்கூறப்பட்ட இந்த விசயங்களை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்னும் படித்து தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் படிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்திக் கொடுத்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோமாக ஆமீன் வஸ்ஸலாம்.

தொகுத்தவர் : M.A. லியாக்கத் அலி (மிஸ்பாஹ) (Y. B. A. KANOO. DAMMAM)

இதில் இருக்கும் தவறுகளை இந்த முகவரியில் தெரிவிக்கவும்(

sf********@ya***.in











). தவறுகள் இல்லாத பட்சத்தில் உங்களால் முடிந்த வரை இந்த செய்தியை இந்த சமுதாயத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம் நன்மையை ஏவி தீமையை தடுப்பது நம் எல்லோரும் செய்ய வேண்டியது ஆகும்.