பிளஸ் 2 தேர்வில் 1,134 மதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு வழி இன்றி தவிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மாணவி நாகலட்சுமி. இவரது தந்தை சரவணன், ஆட்டோ டிரைவர்.
தேவாங்கர் பள்ளியில் பிளஸ் 2 படித்த நாகலட்சுமி, பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். மருத்துவ கல்விக்கு 193.25 மதிப்பெண் (கட் ஆப்) பெற்றுள்ளார். தந்தையின் குறைந்த வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது.
அதிக மதிப்பெண் பெற்றும், “டாக்டர் கனவு’ எட்டாக்கனியாக உள்ளது. கடின உழைப்பு, அறிவுக்கூர்மைக்கு குடும்ப பொருளாதாரம் முட்டுக்கட்டையாக உள்ளது. உயர்கல்விக்கு யாராவது உதவினால், இவரது லட்சியம் நனவாகும்.
உதவ விரும்புவோர், “99942- 61727′ என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமலர்