Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2012
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,406 முறை படிக்கப்பட்டுள்ளது!

தோல்விக்கு என்ன காரணம்?

தோல்விக்கு என்ன காரணம்? (வெற்றிப் பெற உதவும் தாமஸ் ஆல்வா எடிசனின் தன்னம்பிக்கை மந்திரங்கள்…)

பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா? எனக்குத் தெரிந்தவரை அனைத்துக் குழந்தைகளுமே பிடிவாத குணம் கொண்ட வர்களே..! குழந்தைகள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வார்கள்? தங்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருள்களை() வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் நிச்சயம் பிடிவாதம் செய்வார்கள். தனக்குப் பிடித்தமான திண்பண்டங்களை வாங்கித் தரவில்லை என்றால் பிடிவாதம் செய்வார்கள். தாங்கள் விரும்பும் இடங்களுக்கு(பொருட்காட்சி, மிருகக் காட்சிசாலை, கடற்கரை…) அழைத்துச் செல்லவில்லை என்றால் பிடிவாதம் செய்வார்கள்.

ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை(School Holidays) நாள்கள் வரும்போது இவ்வாறான இடங்களுக்கு அழைத்துப் போகச் சொல்லி விடாமுயற்சியுடன் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள்.

குழந்தைகளின் இதே பிடிவாத குணத்தையும், விடாமுயற்சியையும் படிப்பிலும், பிற திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட அவர்களுக்கு நாம் பழக்க வேண்டும். இப்படிப்பட்ட பிடிவாத குணத்தினாலும் விடாமுயற்சியினாலும் இன்று உலகம் புகழும் அறிஞராக(Bulge scholar), பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவரே தாமஸ் ஆல்வா எடிசன்(Thomas Alva Edison).

தாமஸ் ஆல்வா எடிசன் ஓர் ஆய்வினைத் தொடங்கிவிட்டால், அதன் முடிவைக் கண்டறியும்வரை ஓய்வே எடுக்க மாட்டார். ஒரு நாள், எடிசனின் சோதனைச்சாலையில்(Laboratory) அவரது உதவியாளர்கள் இசைத்தட்டு(Record) ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்று இரவுக்குள் இசைத்தட்டினை உருவாக்கிவிட வேண்டும் என உதவியாளர்களுக்கு எடிசன் கூறியிருந்தார்.

உதவியாளர்களுள் ஒருவர் கிராமபோன் இசைத்தட்டினைத் தயாரிப்பதற்காக மெழுகு(Wax) தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பலமுறை முயற்சி செய்தும் மெழுகினைப் பக்குவமான தேவையான பதத்தில் தயார் செய்ய அவரால் முடியவில்லை. எரிச்சலும் வெறுப்பும் அடைந்தார்.

எடிசனிடம் சென்று, பலமுறை முயன்றும் மெழுகு சரியான பதத்தில் வரவில்லை. நாம் செய்த செயல்முறையின் அடிப்படையில்(Based on the process) ஏதோ ஓர் தவறு உள்ளது. ஆகையால், அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். இன்றைய ஆய்வினை இத்துடன் நிறுத்தி விடலாம். நாளை புதிதாக முயற்சி செய்யலாம் என்றார்.

தாமஸ் ஆல்வா எடிசன் கோபத்துடன், மெழுகு சரியான பதத்தில் வரவில்லையெனில், அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். தாங்கள் சரியாகச் செய்யாமல் அடிப்படையில் தவறு என்று இன்னொன்றின் மீது குறையைச் சுமத்தக் கூடாது. திரும்பத் திரும்பச் செய்வதுதான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டுவிட்டு ஓடுவது வெற்றிக்கு வழிவகுக்காது என்றார்( True facts of Thomas Alva Edison ).

ஒரு முறை, விஞ்ஞானிகளுக்கு வேண்டிய தகுதிகள்( Eligibility for scientists ) பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடிசன் என்ன பதில் கூறினார் தெரியுமா?

ஒரே நேரத்தில் நான் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் கண்டுபிடித்ததில்லை. பல காலம் இடைவிடாமல் தொடர்ந்து செய்த முயற்சிகளின்(Continued attempts) விளைவுதான் என் வெற்றிகள். இதில் அதிர்ஷ்டம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. விஞ்ஞானிகளில்(Scientists) சிலர் ஓரிரு சோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு நிறுத்திவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் விரும்பியதை அடையும்வரை நான் மேற்கொண்ட சோதனையை இடையில் நிறுத்தியதே இல்லை.

100 முறை தோல்வியடைந்த ஒருவர் 101 ஆவது முறை வெற்றியடைந்துவிட முடியும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன். எனக்கு அபாரமான அறிவும் ஆற்றலும் இருப்பதால்தான் நான் வெற்றி பெறுவதாகச் சிலர் சொல்கிறார்கள். அது என் நண்பர்கள் கூறும் புகழ்ச்சி உரையே தவிர அதில் உண்மையில்லை என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.

விடா முயற்சியுடன் தொடர்ந்து பாடுபடுபவர்களும் என்னைவிடச் சிறப்பான வெற்றிகளைப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் தாமஸ் ஆல்வா எடிசன்.

எல்லாப் பாடங்களையும் விரும்பிப் படிக்கும் குழந்தைகள் மிகச் சிலர்தான். ஒரு குறிப்பிட்ட பாடத்தை மட்டும் படிக்கச் சிரமப்படும் குழந்தைகள், அப் பாடத்தைத் திரும்பத் திரும்பப் படித்து, அதனைப் புரிந்து மனதில் பதிய(memory) வைத்துக் கொள்ள வேண்டும். மனதில் பதிய வைத்த பாடங்களைப் பிழையின்றி எழுதுகின்ற பழக்கத்தையும்(Writing) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முறையில் பயற்சி செய்து பாடங்களைப் படித்தால் போதும். அறிவியல் பாடம் எனக்கு ஆகாது. கணக்குப் பாடமென்றாலே எனக்கு உடம்பெல்லாம் படபடக்கும் என்பதெல்லாம் வெறும் பிரமை. அவர்களை இத்தகைய மாயமான பிரமையான எண்ணங்களிலிருந்து மீட்டுக் கொண்டுவந்து மீண்டும் மீண்டும் அவற்றை எளிய முறையில் கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களும் அனைத்துப் பாடங்களிலும் சிறந்து விளங்குவார்கள்.

எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை. நமது அறிவைப் பயன்படுத்தி, நாம்தான் ஏன்(what), எதற்கு(which), எப்படி(How to) என்ற கேள்விகளால் பகுத்தறிந்து சிந்தித்துச் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.

அமெரிக்காவில் பிறந்து அகிலப் புகழ் பெற்ற விஞ்ஞானி எடிசன் மின்விளக்கு(Electric light), கிராமபோன்(Phone), ஒலிபெருக்கி(Speaker), திரைப்படம்(Movie) போன்றவற்றையெல்லாம் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, பள்ளியில் சென்று படிக்காதவர். வீட்டில் தன் தாயிடமே அரைகுறையாகக் கல்வி பயின்றவர். இருப்பினும், எடிசன் தன் ஆய்வுகளைத் திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்து பல வெற்றிகள் பெற்றுள்ளார்.

பள்ளிக்கு கூட செல்லாமல் வீட்டில் தன் தாயிடம் அரைகுறையாகக் கல்வி கற்ற எடிசனே இவ்வளவு சாதனைகளைச் செய்துள்ளார் என்றால், தினமும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களின்,பெற்றோர்களின் அன்பில், அரவணைப்பில் இருக்கிற குழந்தைகள், முறைப்படி பாடங்களை முழுமையாகப் பயிலும் நமது குழந்தைகள் இது போல பல சாதனைகளை நிகழ்த்தா முடியாதா என்ன?

தேவை தன்னம்பிக்கை, விடாமுயற்சி.. கூடுதலாக எடிசனின் வார்த்தைகளில் சொல்வெதன்றால் பிடிவாதம் மற்றும் எடுக்கும் முடிவுகளில் உறுதி, ஒரு செயலைச் செய்யும்போது ஏற்படும் விளைவால் துவண்டு விடாமல், அதை எப்படி செய்தால் சரியான முறையில் செய்யலாம் என்பதை தீர்மானித்து அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்தல் ஒன்றே நாம் தேடும் தேடலுக்கு விடை கிடைக்கும். செய்யும் செயலுக்கு வெற்றி கிடைக்கும். இதுதான் தாமஸ் ஆல்வா எடிசனின் வெற்றியின் ரகசியம்.( True facts of Thomas Alva Edison ).

ஆரோக்கியமான செயல்களில் பிடிவாதமும் வெற்றித்தரும் என்பதை அவர் செயல்களிலிருந்தே நாம் கற்றுக்கொள்ளலாம். இதையே ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய நம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம்.

தாமஸ் ஆல்வா எடிசனின் வாக்குக்கு ஏற்ப பிடிவாதமும், திரும்ப, திரும்ப அச்செயலை செய்து, செய்து விழுந்து.. எழுந்து.. மீண்டும் விழுந்து.. எழுந்து.. தட்டுத் தடுமாறி எழுந்து நிற்கத்தான் வேண்டும். அப்போதுதான் நாம் நினைக்கும் செயல் வெற்றியடையும். அறிஞர் ஒருவர் சொன்னது போல எத்தனை முறை விழுந்தாய் என்பது முக்கியமல்ல.. எத்தனை முறை எழுந்து நின்றாய் என்பதுதான் முக்கியம். நாமும் கற்றுக்கொள்வோம்.. நம்முடைய குழந்தைகளுக்கும் இந்த வெற்றிமுறையை கற்பிப்போம்.

நன்றி: தங்கம்பழனி