Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2013
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,997 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிரான்சால் பாராட்டப்பட்ட ஜிஹாத் !!!

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடந்தது அந்த நிகழ்ச்சி!  ஒரு நாட்டால் தேசத் துரோகியாய் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட ஒருவர் பின்னர் ஒரு நாள் அதே நாட்டால் அந்த நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டு ஹீரோவாய் புகழப்படுவது வரலாற்றில் அரிதாகக் காணக்கிடைக்கும் நிகழ்வு. இத்தனைக்கும் குற்றம் சாட்டியதும் பின்னர் அவரைக் கொண்டாடியதும் அவரது சொந்த நாடு அல்ல. இந்த இரண்டு நேரெதிர் எல்லைக்கும் சென்றது அவரது தாய்நாட்டை ஆக்கிரமித்த எதிரி நாடு. எதிரியால் தூற்றப்படுவது வழமை தான். ஆனால் எதிரியால் கொண்டாடப்படுவது என்பது வரலாற்றில் அனுதினமும் நடக்கும் நிகழ்வல்ல.

அமீர் அப்துல் காதிர் அல் ஜசாயிரி. வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் 1808 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியர்களை ஹிந்த் என்றும், அல்பேனியர்களை அல்பானி என்றும்அழைப்பது போன்று அரபியர்கள் அல்ஜீரியர்களை அல் ஜசாயிரி என்று அழைப்பார்கள். அப்துல் காதிர் இளம் வயதிலேயே புனித குரானை மனனம் செய்து இஸ்லாமியக் கல்வியையும் கற்று அந்தப் பகுதியின் மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார்.

al-jazairi1825 ஆம் ஆண்டு மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டுவிட்டு, பல்வேறு அரபு நாடுகளில் பிரயாணம் செய்து விட்டு பல வருடங்கள் கழித்து நாடு திரும்பியவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. தாய்நாடான அல்ஜீரியாவை பிரஞ்சுப் படைகள் ஆக்கிரமித்திருந்தன. இன்று உலகில் நல்லவர்கள் என்பதுபோல் காட்டிக்கொள்ளும் ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரர்களும் உலகம் முழுவதும் நிகழ்த்திய கொடூரங்கள் எண்ணிலடங்காதவை. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நிகழ்த்திய கொடூரங்கள் போன்று அல்ஜீரியாவில் பிரஞ்சுப் படைகள் சொல்லொணாத் துயரங்களை நிகழ்த்தின.

உலக வரலாற்றுப் புத்தகத்தின்  ரத்தக்கறை மிகுந்த பக்கங்கள் இன்றும் உலகில் நிலவி வரும் சில ஆதிக்க சக்திகளால் தான் எழுதப்பட்டன. ஆனாலும் தங்கள் வல்லமைகளால் நல்லவர்கள் போன்று உலகின் முன்னால் காட்சி தருவதற்கு இவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை.

ஆக்கிரமிப்புக்கு எதிராக களம் கண்டார் அப்துல் காதிர். வயது வெறும் 22. போர்க்கள அனுபவம் ஏதுமின்றி களத்தில் குதித்து அன்றைய கொடுங்கோல் வல்லரசுகளில் ஒன்றான பிரான்சை எதிர்த்துப் போரிடும் இமாலயப் பணி . ஆனாலும் உறுதி பூண்டார். களம் கண்டார்.  தனித்தனி குழுவாக இருந்த அனைத்துப் பழங்குடி மக்களையும் ஒன்றிணைத்து ஒரு கொரில்லாப் படையை அமைத்தார்.இதுவே முதல் வெற்றி !!  இந்தக் குழுவின் தலைவராக இருந்ததால் தான் “அமீர்” என்ற அடைமொழி பெயருடன் ஒட்டிக்கொண்டது.

1842 வரை தொடர்ந்த தாக்குதல்களில் நிறைய இடங்களில் கொரில்லாப் படைகள் வெற்றிவாகை சூடின. ஆனாலும் பிரஞ்சுப் படைகள் பல்வேறு சூழ்ச்சிகளைச்  செய்து கொரில்லாக்களைத் தோற்கடித்தது.நிறைய இடங்களில் கொரில்லாக்களுடன் செய்த சமாதான உடன்படிக்கைகளை மீறி தாக்குதல் நடந்தது. நவீன ஆயுதங்களும் பணபலமும் படைபலமும் கொண்ட ஒரு வல்லரசை எதிர்த்து எத்தனைநாள் பழங்குடிகளால் தாக்குப் பிடிக்க முடியும்? சக்திமிக்கவன் தானே வரலாற்றை நிர்ணயிப்பது; அதுவே இங்கும் நடந்தது. கொரில்லாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

சில வருடங்கள் சிறையில் அடைக்கப்படிருந்தார் அப்துல் காதிர். பின்னர் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து டமாஸ்கஸ் நகருக்கு நாடு கடத்தப்பட்டார். அல்ஜீரியா பிரஞ்சுக் காலனி நாடு ஆனது.

நடந்து முடிந்த போரின்போது அப்துல் காதிரின் படைகளுக்கும் பிரஞ்சுப் படைகளுக்கும் இருந்த மிகப் பெரிய வேறுபாட்டை ஒரு வரலாற்றாசிரியர் இப்படிச் சொல்கிறார்.

“At a time when the French were mutilating Arab prisoners, wiping out whole tribes, burning men, women, and children alive; and when severed Arab heads were regarded as trophies of war–the Emir manifested his magnanimity, his unflinching adherence to Islamic principle [by refusing] to stoop to the level of his ‘civilized’ adversaries.'”

அரேபியக் கைதிகளின் உடல்களைச் சிதைப்பது, பழங்குடிக் குழுக்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிவது, ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை உயிருடன் எரிப்பது, தலைகளைக் கொய்து அதை வெற்றிச் சின்னமாய் கருதுவது என்று பிரான்ஸ் தனது அழிச்சாட்டியத்தை காட்டியது. ஆனால் இஸ்லாமிய போர் நெறிமுறைகளைப் சரிவரப் பின்பற்றிய  அமீர் தனது “நாகரீக” எதிரிகளைப் போன்று கீழ்த்தரமாக நடந்து கொள்ளாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.

இவ்வளவு ஏன், ஒருமுறை கடும் உணவுப் பஞ்சம் வந்தபோது தன்னிடம் கைதிகளாக உள்ள பிரஞ்சுப் படை வீரர்களுக்கு தன்னால் உணவளிக்க முடியாமல் போனபோது அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்து விட்டார். அதற்கு முன்னரோ பின்போ போரில் நடக்காத இந்த அரிய நிகழ்வை வரலாறு இன்றும் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைத்துள்ளது. போர்க்கைதிகளை எப்படி நடத்துவது என்பது பற்றிய ஜெனீவா தீர்மானங்களுக்கும் முந்தைய நிகழ்வுகள் இவை என்பது மிக முக்கியம் இங்கே !!!  

In 1841, the bishop of Algiers, Antoine-Adolphe Dupuch, wrote to Abd el-Kader asking him to free a French prisoner: “You do not know me, but my calling is to serve God and to love all men as His children and as my brothers…. I have neither money nor gold and can offer in return only the prayers of a sincere soul.” He ended with the Biblical quotation, “Blessed are the merciful, for they shall obtain mercy.”

 1841 ஆம் ஆண்டு அப்துல் காதிரிடம் இருந்த பிரஞ்சுக் கைதி ஒருவரை விடுதலை செய்யக் கோரி அல்ஜீரிய பிஷப் ஒருவர் எழுதிய கடிதத்தில் ” என்னை உங்களுக்குத் தெரியாது. எனது இறைப் பணி என்பது கடவுளுக்கு பணிவிடை செய்வதும் எல்லா மனிதர்களையும் சகோதர்களாக நேசிப்பதும் தான். என்னிடம் பணமோ தங்கமோ இல்லை தருவதற்கு. ஒரு நேர்மையான ஆத்மாவின் பிரார்த்தனைகளைத் தவிர என்னிடம் தர ஒன்றுமில்லை.  “கருணையுள்ளவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற விவிலிய வாக்கியத்துடன் நிறைவடைந்த கடிதத்துக்கு அமீர் இப்படி பதில் எழுதினார்

“You should have asked me not for the freedom of only one, but of all the Christians who are imprisoned. Further, would you not have been twice as worthy of your mission had you asked not only for the liberation of two or three hundred Christians, but also offered to extend the same favor to an equal number of Muslims who languish in your prisons? It is written, ‘Do unto others as you would have them do unto you.’” 

சிறைபட்டிருக்கும் ஒரு கிறித்தவரின் விடுதலையை மட்டுமே நீங்கள் கோரி இருக்கக் கூடாது. எல்லா கிறித்தவர்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கோரி இருக்க வேண்டும். இன்னும் ஒரு படி மேலே சென்று, இருநூறு அல்லது முன்னூறு கிறித்தவர்களை மட்டுமல்ல அதே போன்று பிரஞ்சு ராணுவத்தால்  சிறையில் வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கூறி இருந்தால் உங்கள் இறைப்பணி இன்னும் இருமடங்கு பலனுள்ளதாய் ஆகி இருக்குமே. விவிலியத்தில் தானே இதுவும் இருக்கிறது ” மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதனை நீ அவர்களுக்குச் செய் ” என்று முடித்திருந்தார்.


இந்த வீரர்களை மீட்கும் பணியில் இரு தரப்பினரும் ஈடுபட்டிருந்த வேளையில் பிரஞ்சு தளபதிகள் முதல் முதலாக அப்துல் காதிர் அவர்களை  நேரில் கண்டு அவரது எளிமையைக் கண்டு வியந்து போனார்கள். பக்கம் பக்கமாக அவர் பற்றி அவர்கள் பாடிய புகழ் வரிகளுக்கு வரலாறு சாட்சி.

ஒரு உதாரணம் இங்கே

/“The redoubted chief was dressed as a simple sheikh,” he wrote, “in an ordinary haik, a white burnoose, and a cord of camelhair passed round his head. At the slightest mention of religion, his eyes fall, and then are raised gravely towards heaven in the manner of one inspired.”// 

//When he was finally defeated and brought to France, before being exiled to Damascus, the Emir received hundreds of French admirers who had heard of his bravery and his nobility; the visitors by whom he was most deeply touched, though, were French officers who came to thank him for the treatment they received at his hands when they were his prisoners in Algeria.//

டமாஸ்கசுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னால் அமீரை சந்தித்த நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் நன்றிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர்களில் அப்துல் காதிர் அவர்களிடம் கைதியாகப் பிடிபட்டு நல்ல முறையில் நடத்தப்பட்ட பிரஞ்சு ராணுவ அதிகாரிகளும் அடக்கம்.

நாடுகடத்தப்பட்டு டமாஸ்கஸ் நகரில்  வாழ்ந்து கொண்டிருந்த அப்துல் காதிர் அங்கும் சில சவால்களை மேற்கொள்ள வேண்டி வந்தது. 1860 ஆம் ஆண்டு. உதுமானியப் பேரரசின் அப்போதைய கவர்னராக இருந்த உமர் பாஷாவின் ஆளுகையில் கிறித்தவர்களுக்கு எதிராக பெரும் கலகம் ஏற்ப்பட்டது. ஷியாக்களில்  ஒரு பிரிவினரான துருஸே முஸ்லிம்கள் கிறித்தவர்களை தாக்கினார்கள். அநியாயமாக எந்தக் கிறித்தவனும் கொலை செய்யப்படுவதை நான் வேடிக்கை பார்க்க முடியாது என்று அறிவித்த அப்துல் காதிர் ஒரு படை திரட்டி கிறித்தவர்களை பாதுகாக்கும் பணியில் இறங்கினார்.

தனது நாட்டை அடிமைப்படுத்தி, தன்னை போரில் தோற்கடித்து சிறையில் அடைத்து நாடு கடத்தியவர்கள் தானே இவர்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை அவர். நியாயத்துக்கு குரல் கொடுப்பவர்களில் ஒருவராக மாறினார். உதுமானியப் பேரரசின் அரசருக்கு தகவல் அனுப்பினார். படை திரட்டி 12000 க்கும் மேற்பட்ட கிறித்தவர்களைக் காப்பாற்றினார் என்று வரலாறு கூறுகிறது. Citadel of Damascus என்ற கோட்டையில் அவர்களைத் தங்க வைத்து பாதுகாத்தார். உலகம் முழுவதும் பரவிய இந்தத் தகவலில் நெகிழ்ந்துபோனார்கள் கிறித்தவர்கள். கூனிக் குறுகிப் போனது பிரஞ்சு அரசாங்கம். அவரது மனித நேய நடவடிக்கைக்காய் ஆயிரக்கணக்கில் மக்களை பாதுகாப்பாய் இடம் பெயர்த்த ஜிஹாதுக்காக பிரஞ்சு அரசின் மிக உயரிய விருதான  Grand Cross of the Légion d’honneur அவருக்கு அறிவிக்கப்பட்டது.

தங்களுக்கு எதிராகப் போர் தொடுத்து தங்களால் நாடு கடத்தப்பட்ட ஒருவருக்கே தனது நாட்டின் உயரிய விருதை வழங்கும் நிகழ்வு வரலாற்றில் மிக அரிதே. அது இங்கே நடந்தது. பக்கம் பக்கமாக பிரஞ்சு மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இந்த ஜிஹாதை வர்ணித்து எழுதின.

இதோ சர்ச்சிலின் வார்த்தைகள் மட்டும் சாம்பிளுக்கு:

"All the representatives of the Christian powers then residing in Damascus, without one single exception, had owed their lives to him. Strange and unparalleled destiny! An Arab had thrown his guardian aegis over the outraged majesty of Europe. A descendant of the Prophet had sheltered and protected the Spouse of Christ."


காட்டுத்தீயெனப் பரவிய இந்த சம்பவம் அமெரிக்காவை வந்தடைந்தது. என்னது? ஒரு முஸ்லிம் கிறித்தவர்களின் உயிருக்காய் ஜிஹாத் செய்தாரா? என்று நீண்ட கிருதாவை சொறிந்து கொண்டே நம்ப முடியாமல் கேட்டார் அமெரிக்காவின் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன். பாராட்டுக் கடிதமும்  சில துப்பாக்கிகளும் அன்பளிப்பாக லின்கனிடமிருந்து அனுப்பப்பட்டது. இன்றும் அந்தத் துப்பாகிகள் அல்ஜீரிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றார்கள். அயோவா மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரத்துக்கு அப்துல் காதிரின் பெயர் சூட்டப்பட்டது.

//They named the new village Elkader after Abd el-Kader, a young Algerian hero who led his people in a resistance to French colonialism between 1830 and 1847.//

என்று அந்த நகரின் வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பார்க்க http://www.elkader-iowa.com/History.html

 அரபுப் பெயர் கொண்டவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் சந்தேகப் பார்வை பார்க்கப்பட்டு தனிச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் ஒரு நாட்டில் , எங்கோ அல்ஜீரியாவிலும் டமாஸ்கசிலும் நீதிக்காய்ப் போராடிய ஒரு தீரரின் பெயரில் ஒரு நகரம் இருக்கிறது என்பது விந்தையான விஷயம் தானே !!!

1. சௌதி அராம்கோ நிறுவனத்தின் WORLD சஞ்சிகையில் மிகச் சுருக்கமாக, அழகாக அப்துல் காதிரின் வரலாறு இருக்கிறது. படிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்.

2. விக்கி தளத்தில் அப்துல் காதிர் பற்றிய தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும் 
3. U.S. City named after Muslim Hero: Biography of Emir ‘Abd al-Qadir

 
4. ஜான் கீசர் எழுதிய அப்துல் காதிரின் வாழ்க்கை வரலாறு.Commander of the Faithful: The Life and Times of Emir Abd el-Kader (1808-1883)  
 
5. Reza Shah-Kazemi எழுதிய Recollecting the Spirit of Jihad என்ற கட்டுரையில் நிறைய தகவல்கள் இவர் பற்றி இருக்கின்றன. நேரம் இருந்தால் கண்டிப்பாகப் படியுங்கள் இதைச் சொடுக்கி…
நன்றி: பீர் முஹம்மது – விரல் நுனியில் உலகம்