Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2015
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,609 முறை படிக்கப்பட்டுள்ளது!

உதவி சக்கரம் – சிறு கதை

helpஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ‪#‎ஒருவர்‬ கவனித்தார்.வாகனங்கள் செல்லும்போது அந்த பெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.

அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார்.

என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாத்தி கொடுக்கிறேன் என்று டயரை கழட்ட ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார் .

அந்த பெண்மணி உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டார்.நான் பக்கத்தில் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன் ,அதில் இருந்து வரும் பணமே எனக்கு போதும்.நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம் என்றார்.

நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே.நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றால் வேறு யாராவது ஒரு நபர் கஷ்டத்தில் இருக்கும்போது என்னை நினைத்து பாருங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்.

உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.நான் உங்களுக்கு உதவி செய்தேன் நீங்கள் வேறு யாருக்காவது கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு தயாளன் நடக்க ஆரம்பித்தார்.

அந்த பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு காரை எடுத்து கொண்டு சென்றார்.வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

டீக்கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது,உள்ளே இருந்து ஒரு பெண் வந்து என்ன வேண்டும் அம்மா என்று கேட்டார்.வயதான பெண்மணி டீ கடையில் வேலை செய்யும் பெண்ணை பார்த்தார், அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதை அவரிடம் பேசி தெரிந்து கொண்டார்.

குடிக்க டீ கொண்டு வாம்மா என்றார்.தயாளன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது.அந்த அம்மா டீ குடித்துவிட்டு 5000 ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு சென்று விட்டார்.

டீ கடையில் வேலை செய்த பெண் காபி டம்பளரை கழுவி வைத்து விட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அதை எடுத்து கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார்,அதற்குள் கார் கிளம்பி சென்று விட்டது.

கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்து விட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டு சென்ற பணத்தையும் எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.

பிரசவ செலவுக்கு என்ன செய்ய போகிறோம் என்று புலம்பி கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்த பணத்தை காட்ட வேண்டும் என்று அருகில் சென்றார்.ஆனால் மிகுந்த அசதியால் தூங்கி கொண்டு இருந்தார் நம்ம தயாளன்.

”எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும்”.  அல்குர்ஆன் சொல்வதைக் கேளுங்கள்:

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன. அல்குர்ஆன் 11:6

“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்). அல்குர்ஆன் 76:9

உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான்.  அல்குர்ஆன் 16:78

(“இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). அல்குர்ஆன் 14:7