Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2015
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,702 முறை படிக்கப்பட்டுள்ளது!

சர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2

 1 நீரிழிவை முற்றாகக் குணப்படுத்த விடுபட ஏதாவது வழியிருக்கிறதா?

தமிழ் மக்களுக்கு நீரிழிவு நோய் பாரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதிலிருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்று பல வகையாக ஆராய்ந்து, சென்னை முழுவதும் உள்ள புத்தகக் கடைகள் எல்லாம் ஏறி இறங்கி பல நூறு நூல்களை சேகரித்து வாசித்தோம். அதில் ஒரேயொரு புத்தகம் மட்டும் நீரிழிவை முற்றாக நிறுத்தலாம் என்று கூறியது. 136 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் இருந்து ஒரு முக்கியமாக இருந்த ஒரு பகுதியை இங்கே தருகிறோம். நீங்கள் வைத்தியருடன் தொடர்பு கொள்ள விரும்பினால் அவரது மின்னஞ்சலையும் இங்கே இணைத்துள்ளோம். செய்திகள் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய முயற்சியில் இறங்குகிறோம்.

தமிழ் மக்களுக்கு நீரிழிவு நோய் பாரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதிலிருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்று பல வகையாக ஆராய்ந்து, சென்னை முழுவதும் உள்ள புத்தகக் கடைகள் எல்லாம் ஏறி இறங்கி பல நூறு நூல்களை சேகரித்து வாசித்தோம். அதில் ஒரேயொரு புத்தகம் மட்டும் நீரிழிவை முற்றாக நிறுத்தலாம் என்று கூறியது. 136 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் இருந்து ஒரு முக்கியமாக இருந்த ஒரு பகுதியை இங்கே தருகிறோம். நீங்கள் வைத்தியருடன் தொடர்பு கொள்ள விரும்பினால் அவரது மின்னஞ்சலையும் இங்கே இணைத்துள்ளோம். செய்திகள் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய முயற்சியில் இறங்குகிறோம்.

5பொதுவாக நீரிழிவை முற்றாகக் குணப்படுத்த முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் தற்போது சர்க்கரை நோய்க்கு புல்ஸ்டாப் என்றொரு நூல் வந்துள்ளது. இதில் சர்க்கரை நோயை முற்றாகக் குணப்படுத்தும் வழிமுறைகளை விளக்கப்பட்டுள்ளது. சித்தவைத்தியம், மேலைத்தேய வைத்தியம் இரண்டையும் கற்ற வைத்தியர் அருண் சின்னையா எழுதிய நூலில் உள்ள தகவல்களில் சிலதை சுருக்கி இங்கே தருகிறோம்.

01. நீரிழிவை குணப்படுத்தும் மூலிகைக் கூட்டு மருந்து.

அ. சிறு குறிஞ்சான் – 100 கிராம்

ஆ. அறுகம்புல் – 50 கிராம்

இ. நாவல்கொட்டை – 50 கிராம்

ஈ. மருதம்பட்டை – 50 கிராம்

உ. திரிபாலா ( நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த கலவை) – 50 கிராம்.

இவை அனைத்தையும் பொடி செய்து ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். வேளைக்கு 2 கிராம் வீதம் காலை, மதியம், இரவு மூன்று வேளையுமாக 15 தினங்கள் சாப்பிட வேண்டும். நீரிழிவு கட்டுக்குள் வரும், தொடர்ந்து 96 தினங்கள் சாப்பிட்டால் நீரிழிவு முற்றாகக் குணமாகிவிடும்.

02. அதிக மூத்திரம், உடல் எரிச்சலை குணப்படுத்த மருந்து ! ஆவாரம் பூவில் வேர், இலை, பட்டை, பூ, காய் ஆகியவை விசேட பலன் கொண்டவை. இவையனைத்தையும் சேர்த்து தயாரிக்கப்பட்டது ஆவாரை பஞ்சாங்க சூரணம் எனப்படுகிறது. நீரிழிவு, அதிக மூத்திரம் போதல், உடல் எரிச்சல் ஆகியவற்றை போக்க இது உதவும். ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ – என்ற பழமொழியின் கருத்து இதுவாகும்.

03. நீரிழிவிற்கு ஜீன் சிகிச்சை !

நீரிழிவு நோயை முற்றாகக் குணப்படுத்த ஜீன் சிகிச்சை விரைவில் வரவிருக்கிறது. இது ஜெனட்டிக் இன்ஜினியரிங் சம்மந்தப்பட்டது. நம் உடலில் இருந்து இரு செல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றைக் கொண்டு இன்சுலின் தயாரிக்கச் செய்து, அச்செல்லை மீண்டும் நம் உடலுக்குள் செலுத்துவது. இந்தமுறை இன்னும் சில காலத்தில் வரவிருக்கிறது. வந்தால் நீரிழிவை முற்றாகக் குணப்படுத்தும் உலகம் உருவாகிவிடும்.

காலையில் வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவு! 

4ஆரோக்கியமான உணவுகள் பல உள்ளன. ஆனால் அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்வது என்பது மிகவும் முக்கியமானது. புதிய ஆய்வின் படி, சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம், அந்த உணவுகளில் உள்ள ஆசிட்டுகளும், வயிற்றில் உள்ள படலத்தை பாதிக்கும் வகையிலான பொருள் இருப்பதும் தான் காரணம். முக்கியமாக இந்த உணவுப் பொருட்கள் அனைத்துமே மிகவும் ஆரோக்கியமானது. உதாரணமாக, வாழைப்பழம், தயிர், தக்காளி போன்றவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது.

ஒருவேளை நீங்கள் டயட்டில் இருந்து, வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுபவராயின், காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைப் பருகி பின் பழங்களை உட்கொள்ளுங்கள். சரி, இப்போது காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

சோடா 

இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

தக்காளி

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

மாத்திரைகள்

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

ஆல்கஹால்

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

காபி 

காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

டீ 

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

தயிர் 

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

வாழைப்பழம் 

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு 

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.