Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2015
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,692 முறை படிக்கப்பட்டுள்ளது!

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

‘மளமள’வென விலைவாசி உயர்ந்துகொண்டே போனாலும் தங்கத்தின் மவுசு மட்டுமே என்றுமே குறையாது. தங்கத்தின் மீது ஆசைக்கொண்ட பெண்கள் இல்லையென்றே சொல்லலாம்..

பெண்கள் மட்டுமா.. ஆண்களும் கூட அதன் மீது தனி மோகம் வைத்திருக்கிறார்கள்..

24Kஎன்றுமே.. எக்காலத்திலுமே தங்கத்தின் மதிப்பு குறைந்ததாக சரித்திரம் இல்லை.. அப்படிப்பட்ட தங்கம் இரண்டு வகையாக நமக்கு கிடைக்கும். ஒன்று  கட்டித்தங்கம்.. மற்றொன்று ஆபரணத்தங்கம்.

கட்டித் தங்கத்தை வாங்கி நேரடியாக நகை செய்ய முடியுமா என்றால் அது முடியாது. அதனுடன் ஒரு சில உலோகங்களை சேர்த்துதான் தங்க நகைகள் செய்ய முடியும்.

அவ்வாறு கலப்படம் செய்யப்பட்டு உருவாகும் நகைகளின் தரத்தை குறிக்கும் சொல்தான் காரட் (KARAT)என்பது. தங்கத்தில் மற்ற உலோகங்கள் கலந்துள்ள விகிதத்தைப் பொறுத்து அவற்றை தரத்தை அறிய முடியும்.

அதாவது
24 கேரட்,
22 கேரட்
18 கேரட்
14 கேரட்
10 கேரட்
9 கேரட்
8 கேரட்
என தரம் பிரிக்கின்றனர்.

22k  இதில் 22 கேரட் தங்கமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது.  இதில் 91. 6% சுத்த தங்கம் உள்ளது. 22 ஐ 24 வகுத்து 100 ஆல் பெருக்கும் போது இந்த சதம் கிடைக்கும். அது போல் தான் 21, 18 போன்றவற்றையும் 87.5, 75 சதம் என்று சொல்லப்படும்.

இந்த வகையான தங்கத்தைதான் நாம் டிவியிலும், நாளிதழ், வார இதழ் விளம்பரங்களிலும் பார்க்கிறோம். இதை 916 BIS ஹால்மார்க் தங்கம் எனக் குறிப்பிடுகின்றனர்.  இதையே ஆபரத்தங்கம் என்று குறிப்பிடுவார்கள்.

தங்கத்தின் தரத்தை அறிய ஹால்மார்க்:

பெரும்பாலான தங்க நகைகள் 24 கேரட், 22 கேரட், 18 காரட் தங்கமாகவே உள்ளது. எந்த வகையான தங்கம் என அறிய உதவுகிறது ஹால்மார்க் முத்திரை.
hallmark
இந்த முத்திரையானது மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தரத்தை நிர்ணயிக்கும் ISI தர முத்திரையைப் போன்றதுதான் தங்கத்தின் தரத்தை அறியும் BIS ஹால்மார்க் முத்திரை.

இந்திய அரசின் தரக் கட்டுப்பாடு அமைப்பு Bureau of Indian Standards என்பதின் சுருக்கமே BIS என அழைக்கபடுகிறது. இந்த இமைப்பு தங்க நகைகளுக்கு ஹால்மார்த் முத்திரையை வழங்கி தரத்தை நிர்ணயிக்கிறது.

BIS முத்திரையை யார் கொடுப்பார்கள்?

BIS முத்திரையை வழங்குவதற்காக அரசு நாடு முழுவதும் உரிமைப்பெற்ற (License) டீலர்களை நியமித்திருக்கிறது. இந்த உரிமைப் பெற்ற டீலர்கள் மட்டுமே தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை வழங்க முடியும்.

ஜூவல்லரி கடை உரிமையாளர் இந்த நகைகளை பொற்கொள்ளர்களிடமிருந்து பெற்று இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்களிடம் பரிசோதித்து, அந்த நகைகளுக்கான தரத்தை நிர்ணயித்து ஹார்மார்க் முத்திரையைப் பெற்றுக்கொள்கின்றனர். சோதிக்கப்படும் நகைகள் 22 கேரட் கொண்டதாக இருப்பின் அவற்றை 91.6% ஹால்மார்க் முத்திரையும், 18 காரட் அளவுடையதாக இருப்பின் 75% ஹார்மார்க் முத்திரையும் கொடுக்கப்படுகிறது.

தங்கம் வாங்கறீங்களா? கொஞ்சம் கவனமா பார்த்து வாங்குங்க..

நீங்கள் வாங்கும் தங்கத்தில் ஹால்மார்க் முத்திரை மட்டும் இருந்தால் போதாது. அந்த ஹால்மார்க் முத்திரையில் நகையின் தரம் எத்தனை சதவிகிதம் என்பது குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும்.

தவறான ஹால்மார்க் நகைகளை எப்படி கண்டுபிடிப்பது?

நீங்கள் 22 காரட் நகையென கடைகளில் வாங்கிய பிறகு, ஏதாவது ஒருகாரணத்திற்காகவோ.. அல்லது சோதனை செய்து பார்க்கும்பொழுதே அந்த நகை 18 காரட் தரமுடைய நகை என்பதை தெரியவந்து உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக  தவறான ஹால்மார்க் முத்திரையை வழங்கிய டீலரின் லைசென்சை BIS அலுவலகம் ரத்து செய்துவிடும்.

தரமற்ற நகைகளை விற்ற ஜூவல்லரி கடையும் வாங்கிய நகைகளுக்கான நஷ்ட ஈடு வழங்கியே ஆக வேண்டும். அவ்வாறு நஷ்ட ஈடு தர மறுக்கும் பட்சத்தில் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி நஷ்ட ஈட்டைப் பெற முடியும்.

இவர்தான் ஹால்மார்க் முத்திரையை வழங்கினார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

இது மிக சுலபம். நீங்கள் வாங்கும் எந்த ஒரு ஆபரணத் தங்கத்திலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை இருக்கும்.  BIS ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரையை வழங்கியிருப்பார்கள். அதாவது ஒருவருக்கு கொடுக்கப்படும் முத்திரை அடையாளமானது, மற்ற எந்த முத்திரை டீலருக்கும் கொடுக்கமாட்டார்கள். ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரை வழங்கப்படும். குறிப்பிட்ட ஹால்மார்க் முத்திரைக்கு சொந்தக்காரர் இவர்தான் என எளிதாக அந்த அடையாளத்தை வைத்து,  கண்டுபிடித்துவிடுவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள BIS  அலுவலகங்களின் முகவரிகள்:

SOUTHERN REGIONAL OFFICES
C.I.T CAMPUS, IV CROSS ROAD,CHENNAI-600 013.
91 044 22542315,22541584, 22541470
Fax: 91 044 22541087 .


sr*@bi*.in











5th Floor, Kovai Towers,
44 Bala Sundaram Road,
Coimbatore 641 018.
LandMark- on RTO road, near womens polytechnic
0422 2201016, 2210141, 2215622; Fax: 0422-2216705


cb**@bi*.in











இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜூவல்லரி (நகைகடைகளிலும்) உள்ள நகைகளிலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை பதிந்தே விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் நகைகள் வாங்கினால் அதன் தரம் என்ன எத்தனை காரட்.. அதில் BIS ஹால்மார்க் முத்திரை பதியப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் நன்றாக கவனித்து வாங்குங்கள்…

உங்களின் பணத்தின் மதிப்புக்கேற்ற நகைகளையும் நீங்கள் வாங்க வேண்டாமா என்ன? கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். இந்த தகவல்களனைத்தையும் நகைக்கடைகளிலேயே பெற்று மனதுக்கு திருப்தியாக நகைகளை வாங்கலாம்.

தங்கத்தின் விலை எப்படி உள்ளது

ஆரம்பத்தில் மெதுவாக விலை ஏற்றத்தை கண்ட தங்கம் கடந்த 2007 அதிவேகமாக ஏறி 2013 உச்சத்தை தொட்டது. ஆனால் சமீம காலமாக தங்கத்தின் விலை இறங்குமுகமாக உள்ளது. தற்போதைய விலை சரிவில் உள்ளது.gold price_n