Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2015
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,465 முறை படிக்கப்பட்டுள்ளது!

நினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 2/2

மூளையைக்காக்கும் மற்றும் ஷார்ப்பாக்கும் ஆறு உணவுகள்…

1) வால் நட்ஸ்:


இயற்கை அன்னைக்கே தெரிந்ததாலோ என்னவோ தெரியவில்லை… இந்த வால் நட்ஸின் தோற்றமே சின்ன மூளையைப்போலத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.

2009ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த வால் நட்ஸ் உணவில் சேர்க்கப்படும்போது அது மூளையின் வயதாகும் தன்மையை 2% வரை சீர்படுத்துவதாகவும், மூளையின் செயல்திறனை அதிகரிப்பதாகவும், மூளையின் தகவல் கையாளும் திறனை அதிகரிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

2010ல் நடந்த ஒரு ஆய்வில் வால் நட்ஸ் தொடர்ந்து உண்ணப்படும்போது அல்சைமர் நோய் இருக்கும் மூளையில்கூட செயல்பாடுகள் முன்னேற்றம் காண்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

(அல்சைமர் என்பது வயதாகும்போது மூளையில் ஏற்படும் ஒருவிதமான நோய். இது மெல்ல மெல்ல வாய் குளறலில் ஆரம்பித்து முற்றிய நிலையில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுமளவில் குறைந்தும், நினைவிழப்பு ஏற்படுதல் மற்றும் மூளையின் கட்டளையிடும் திறன், செயல்பாடு ஆகியன முழுவதுமாய் குறைந்தும் இறுதியாய் இறப்பு வரை இழுத்துச்செல்லக்கூடியதுமாகும்…)

2) கேரட்:

நீண்டகாலமாகவே கேரட் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது அது கண்ணுக்கு நல்லது என்பதுதான்… அது இப்போது மூளைக்கும் மிக நல்லது என்பது கூடுதல் செய்தி.

கேரட்டில் நிறைந்திருக்கும் லுயுட்டோலின்(Luteolin) காம்பவுன்டானது வயது சம்பந்தப்பட்ட நினைவாற்றல் குறைபாடுகளை நீக்குவதிலும், மூளையின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் தன்மையை அதிகரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆலிவ் ஆயில் மற்றும் பெப்பர் ஆகியவற்றிலும் இந்த லுயுட்டோலின் நிறைந்திருப்பது கூடுதல் தகவல்.

3) பெர்ரீஸ்:

விட்டமின்கள் நிறைந்திருக்கும் பெர்ரீஸ் பழங்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படும்போது நினைவாற்றல் மிக அதிகமாக அதிகரிக்கும்.

2010ம் ஆண்டில் நினைவாற்றல் குறைபாடுள்ள ஒத்த வயதினரை இரு பிரிவாகப்பிரித்து ஒரு பிரிவுக்கு மட்டும் 12 வாரங்கள் பெர்ரி பழ ஜீஸ் கொடுத்தும் ஒரு பிரிவுக்கு பெர்ரி சேர்க்காமலும் சோதிக்கப்பட்ட ஆய்வின் முடிவில், பெர்ரி உட்கொண்ட பிரிவினருக்கு நினைவாற்றல் மிக அற்புதமான அளவில் முன்னேறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இது டிப்ரஷனுக்கான அறிகுறிகளையும் வெகுவாக குறைத்திருக்கிறது.

2009ம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவில் ஆண்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கும் புளு பெர்ரி மற்றும் ஸ்ட்ரா பெர்ரி பழங்கள் வயதாகும் தோற்றத்துடன் சம்பந்தப்பட்ட செல்களில் ஏற்படும் ஒருவித ஸ்ட்ரெஸ்சை குறைப்பதிலும், மூளையின் சிக்னல் திறனை அதிகரிப்பதிலும் அரும்பங்கு ஆற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

4) மீன்:

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்திருக்கும் பலவகை மீன்கள் உணவில் சேர்க்கப்படும்போது மூளையின் செயல்திறன் குறைபாடுகள் குறைவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. (மீன் எண்ணெய் மாத்திரை போன்ற சப்ளிமெண்ட் ஐயிட்டங்கள் உபயோகமற்றவை என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

2005ம் ஆண்டு 65 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் வாரத்துக்கு இரண்டு முறை மீனை உணவில் சேர்க்கும் பழக்கமுடையவர்களுக்கு மூளை செயல்திறன் குறைபாடு 13% வரை குறைந்த்தும், வாரத்துக்கு ஒரு முறை மீனை உணவில் சேர்ப்பவர்களுக்கு 10%வரை குறைந்ததும் கண்டறியப்பட்டிருக்கிறது.

விட்டமின் B-12 நிறைந்திருக்கும் சில மீன்களை உண்ணும்போது அது அல்சைமர் நோய்க்கு எதிராக போராடுவதாகவும் சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

5) காஃபி மற்றும் டீ:

காப்பியும் டீயும் வெறுமனே நாம் காலையில் குடிக்கும் பானங்கள் மட்டும் இல்லை. அவை அல்சைமர் நோய் தாக்காமல் தடுக்கவும், செயல்திறன் குறைபாட்டை குறைக்கவும் பெருமளவு உதவுவதாக பலவித ஆய்வு முடிகளும் அறிவித்திருக்கின்றன.
காப்பி குடிக்கும் பழக்கம் அல்சைமர் நோயை வராமல் தடுக்கவும், வரும் வாய்ப்பை குறைக்கவும் உதவுதாக சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.

நினைவு மற்றும் தகவல்கள் சோதனை ஆராய்ச்சிகளில் டீ குடிப்பவர்கள் டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களைவிட அற்புதமாக செயல்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

6) ஸ்பினாச் எனப்படும் பசலைக்கீரை:

சின்ன வயதிலிருந்து நமது அம்மாக்கள் கீரை சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்று அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளச்சொல்லி வற்புறுத்துவார்கள். இந்தக்கீரையில் விட்டமின் C மற்றும் E நிறைந்திருக்கிறது.

விட்டமின் Eயை உடம்பில் வழங்கி செய்யப்பட்ட ஆராய்ச்சியில் மூளை மற்றும் நெர்வ் திசுக்கள் 500 முதல் 900% வரை வளர்ச்சி கண்டிருப்பதும், மூளையிலிருந்து உடம்பு முழுக்க தகவல்களை அனுப்புவதை கட்டுப்படுத்தும் டோபோமைன் என்ற திரவம் சுரப்பது அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

முதுமையிலும் நினைவாற்றல் அதிகரிக்க ..???

1) உணவுப் பழக்கங்கள்:

உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத் தவிர்ப்பதும் நல்லது.

2) உடற்பயிற்சி:

தினமும் சில மைல்கள் நடப்பதும், மிதமான உடற்பயிற்சி செய்வதும் மூளையின் ஆற்றல் குறையாமலிருக்க மிகவும் உதவுகின்றன என்பதை பல ஆராய்ச்சிகள் ஒருமித்துக் கூறுகின்றன. மூச்சுப்பயிற்சிகளும் பெருமளவு உதவுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

3) புதிய முயற்சிகள்:

எப்போதும் வழக்கமான செயல்களையே செய்து கொண்டிராமல் புதிய புதிய முயற்சிகளிலும், செயல்களிலும் ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும் இளமையாகவும் திறனுள்ளதாகவும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

4) ஓய்வு:

சுறுசுறுப்பாக இருப்பது போலவே தேவையான அளவு ஓய்வும், உறக்கமும் மூளையின் திறன் குறையாமல் இருக்க மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

5) மூளைக்கு வேலை:

மூளைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறுக்கெழுத்துப் போட்டிகள், விடுகதைகள், புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள முற்படுதல் ஆகியவை மூளைக்கு முறையாக வேலை தந்து அதன் திறனைத் தக்க வைத்துக் கொள்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

6) படித்தல்:

புத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல பொழுது போக்கு மட்டுமல்ல அது மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். எனவே புத்தகங்கள் படிப்பதும் உதவும்.

7) நல்ல பழக்க வழக்கங்கள்:

புகைபிடித்தல் மற்றும் அதிகமாய் மதுவருந்துதல் போன்ற பழக்கங்கள் நாளடைவில் மூளைத் திறனை மழுங்கடிக்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தீய பழக்கங்களை விட்டொழித்து நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிக முக்கியம்.

8) மற்றவை:

அடிக்கடி பயணிப்பது, பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வது, இசையைக் கேட்பது, அதிகமாய் கவலைப்படாமல், பதட்டப்படாமல் இருப்பது, தியானம் செய்வது போன்றவையும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது என்கின்றன விஞ்ஞான ஆராய்ச்சிகள்.

மேலும் வயதாக வயதாக மனிதன் சில பல செயல்களில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வதும், வயதாகி விட்டதால் சில செயல்பாடுகள் முன்பு போல் இருக்க முடியாது என்று நம்ப ஆரம்பிப்பதும் மூளையின் ஆற்றல் குறைய முக்கிய காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவே மேற்சொன்ன ஆலோசனைகளைக் கடைபிடித்து, மனதளவில் முதுமையடைந்து விடாமல் இருந்தால் மூளை என்றும் முதுமை அடைந்து விடுவதில்லை, அதன் ஆற்றல் குறைந்து விடுவதில்லை என்பதை நினைவில் இருத்துவோமாக!