சகோதரி விஜயட்சுமி பிராமின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடன் படிக்கும் மாணவிகள் குர்ஆனை ஆர்வத்துடன் ஓதுவதைக் கண்டு அது என்ன அதில் என்ன உள்ளது தானும் படிக்க விரும்பி கேட்டபோது மறுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு ஏமாற்றத்தை கொடுத்தது. எனவே அந்த குர்ஆனைப் படித்து அதில் உள்ள தவறுகளை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டார். ஆனால் சுபுஹானல்லாஹ் எத்தனையோ மக்களை கவர்ந்து நேர்வழி காட்டிய அல்குர்ஆன் இவரையும் கவர்ந்து விட்டது. ஆம் அல்குர்ஆனால் கவரப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார். இதை அறிந்த இவர் உறவினர்கள் செய்த கொடுமைகள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. ஆனால் மன உறுதியுடன் இஸ்லாத்தை கற்றார். இன்று ஆலிமாவாக – இஸ்லாத்தை பலருக்கும் எத்தி வைக்கக்கூடியவராக செயல்படுகிறார். அவரது சிந்தனையும் பேச்சும் நிச்சயமாக பலருக்கு நேர்வழிகாட்ட உதவும் என்று நம்புகிறோம். முழுமையாக கேட்டு மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்..
என்னை கவர்ந்த இஸ்லாம் 2