இன்று மார்க்கம் பேசுபவர்கள் தீனைப் பற்றிப் பேசுகிறார்கள். தீன் என்றால் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் நபிகள் ஸல் அவர்களின் வாழ்க்கை முறை – அதாவது குர்ஆன் சுன்னாவை பின்பற்றி வாழ்வதாகும். ஆனால் நடப்பது என்ன, குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்கப்படுகிறார்கள். இது தொழுகைக்கு அல்லது நோன்பு போன்ற வணக்கங்களுக்கு மட்டும் தானா என்பதை சிந்திக்க வேண்டும். எல்லா விசயத்திலும் பின்பற்றப்பட வேண்டும் . குறிப்பாக திருமணத்தில் இது கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். காரணம் இது ஒரு திருப்புமுனையாகும் . நபிகளார் ஸல் அவர்கள் ”திருமணம் எனது வழிமுறை. எனது வழிமுறையை நிராகரிப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்ல” என்று கூறியுள்ளார்கள். நபிகளார் ஸல் அவர்கள் இளைஞர்களை தகுதி இருந்தால் திருமணம் செய்யத் தூண்டியுள்ளார்கள். திருமணம் செய்ய தகுதி என்ன? பொருளாதாராமா, ஆளுமையா, மன உறுதியா போன்ற விசயங்களும், சித்தப்பா. சித்தி, பெரியப்பா, பெரியம்மா போன்றவர்களின் மகள் அல்லது மகனை திருமணம் செய்யலாமா? போன்ற விசயங்களும் திருமணம் செய்ய வலியின் அவசியம் பற்றியும், மகர் என்பது மணமகன் முடிவு செய்வதா, தற்போது நடைமுயைில் உள்ளவைகள் எல்லாம் நல்லது தானா அல்லது அவைகளை மாற்ற வேண்டுமா போன்றவைகளை ஷேக் அப்துல் ஹமீது ஷரயீ அவர்களின் நயமான உரையைக் கேட்கவும்….