Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2016
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,303 முறை படிக்கப்பட்டுள்ளது!

பார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை!

valparaiகோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் முக்கிய இடமாக வால்பாறை உள்ளது. வால்பாறையை மையமாக கொண்டு அதை சுற்றியுள்ள 25 இடங்களை 3 நாளில் பார்க்க முடியும். வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வழியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளது.

இடையிடையே குறுக்கிடும் மித, அடர்வனப்பகுதிகள் பசுமையுடன் கண்ணைக் கவரும்.கோவையில் இருந்து 100 கி.மீ.தூரத்திலும், பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ.,தூரத்திலும் உள்ளது வால்பாறை. கோவையில் இருந்து மூன்றரை மணிநேரத்தி லும், பொள்ளாச்சியில் இருந்து இரண்டரை மணிநேரத்திலும் வால்பாறைக்கு பஸ்சில்வரலாம்.முதல்நாளில் பாலாஜி கோயில் பூங்கா, அக்காமலை புல்வெளி, வெள்ளமலைடனல், சின்னக்கல்லார் அணை, சின்னக் கல்லார் நீர்வீழ்ச்சி, கீழ்நீரார் அணை, கூலாங்கல் ஆறு ஆகியவற்றை காலையில் துவங்கி மாலைக்குள் பார்க்கலாம்.

வால்பாறையில் தங்கி அடுத்த நாள் காலை கிளம்பிவில் லோனி பள்ளத்தாக்கு, மானாம் பள்ளி நீர்மின் உற்பத்தி நிலையம், மீன்பாறை ஆறு, சோலையாறு அணை, அதிரப்பள்ளி பால்ஸ், நல்லமுடி பூஞ்சோலை, ஹைபாரஸ்ட் நம்பர்பாறை காட்சிமுனை பார்க்கலாம்.இரண்டாம் நாள் இரவு அங்கு தங்கி, 3ம் நாள் அதிகாலை வால்பாறையில் இருந்து கீழிறங்கலாம். 40 கி.மீ.,மலைப்பாதையில் புதுத்தோட்டம், கவர்க்கல், வாட்டர் பால்ஸ், லோம்ஸ் காட்சிமுனை, மங்கிபால்ஸ், ஆழியார் அணைபார்க்கலாம். அங்கிருந்து பொள்ளாச்சி வழியாக டாப்சி லிப் சென்று மாலைக்குள் பார்த்து விட்டு, இரவுக்குள் பொள்ளாச்சி திரும்பலாம்.

பாலாஜி கோயில் பூங்கா :

வால்பாறையிலிருந்து 8 கி.மீ.,தொலைவில் அக்காமலை செல்லும் சாலையில் கருமலை எஸ்டேட்டில் உள்ளது. கருமலை வரை வாகனத்தில் சென்று, அங்கி ருந்து நடைப்பயணமாக தேயிலை தோட்டங்களின் வழியாக அரை கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். கோயிலை சுற்றி பூத்துள்ள நூற்றுக்கணக்கான வளர்ப்பு பூக்கள் கண்ணைக் கவரும். அங்குள்ள சிறுவர் பூங்கா ரம்யமானது.பாலாஜி கோயிலை அடுத்து அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி கோயில் எழிலானது.

அக்காமலை புல்வெளி :

பாலாஜி கோயிலில் இருந்து 7 கி.மீ.,தொலைவில் உள்ளது.
சுவிட்சர்லாந்திற்கு இணையான அழகான புல்வெளி. இதைக்காண வனத்துறை அனுமதி பெற்று, வனத்துறையினர் பாதுகாப்போடு செல்லமுடியும். அனுமதி கிடைக்காதவர்கள் கருமலை ரோட்டில் இருந்து பார்த்தால் தூரத்தில் இளம்பச்சை நிறத்தில் தெரியும் அக்காமலை புல்வெளியை ரசிக்கலாம்.

வெள்ளமலை டனல் :

கருமலையில் இருந்து 5 கி.மீ.தொலைவில் சிறுகுன்றா சாலையில் உள்ளது. சின்னக்கல்லார் அணையில் இருந்து மலையைக் குடைந்து 4.2 கி.மீ.தூரம் அமைக் கப்பட்ட குகையை கால்வாய் மற்றும் அதில்வரும் நீரை காணலாம்.

சின்னக்கல்லார் அணை :

வெள்ளமலை டனலில் இருந்து 17 கி.மீ.,தொலைவில் அமைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா சென்று வீணாக அரபிக்கடலில் கலப்பதை தடுப்பதற்காக கட்டப்பட்டது இந்தஅணை. வெள்ளமலை குகை யின் நுழைவாயில் இங்கு அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து நீர் குகைக்குள் செல்வதை பார்க்கலாம்.

சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி :

சின்னக் கல்லார் அணையில் இருந்து 2 கி.மீ.,தூரத்தில் அமைந்துள்ளது சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி.தென்னிந்தியாவின் அதிகமழை பெய்யும் இடம் எனபெயர் பெற்றது. சின்னக்கல்லார் வனப்பகுதிக்குள் அமைந்த நீர்வீழ்ச்சியை அடைய மரதொங்கு பாலத்தின் வழியாக செல்ல வேண்டும். அருவிக்கு செல்லவனத்துறைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

கீழ்நீரார் அணை :

சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் இருந்து 12 கி.மீ.,தூரத்தில் அமைந்துள்ளது. அடர்வனப்பகுதிக்குள் அமைந்த இந்த அணையின் நீர்த்தேக்கம் அழகானது.

கூழாங்கல் ஆறு :

கீழ்நீராறு அணையில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் வால்பாறை ரோட்டில் அமைந்துள்ளது. இருபுறமும் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஆறுகூலாங்கற்களால் நிறைந்தது. குளிக்கலாம். இங்கிருந்து 3 கி.மீ.தூரத்தில் வால் பாறை அடையலாம்.